30 January 2017

கவலைகள் ஓய்வதே இல்லை :)

 இது நியாயமான  கேள்விதானே  :)          
              ''ஜோக் எழுதுறதை நிறுத்தப் போறீங்களா ,ஏன் ?''
              '' பிறக்கும் போது தாயை அழ வச்சீங்க  சரி , ஜோக்னு  எழுதி  எங்களை ஏன் அழ வைக்கிறீங்கன்னு  ஒரு வாசகர் கேட்டுருக்காராம் !''

போஸ்ட்மேனா இருந்த இவனோட அப்பனும் இப்படித்தான் :)                         
            ''என்னடா சொல்றே ,சிஸ்டத்திலும் நான் செண்டிமெண்ட் பார்க்கிறேனா ?''
           '' இன்பாக்ஸ் ,வெறும் பாக்ஸா இருக்கக் கூடாதுன்னு   டெலிட் செய்யும்போது ஒரு மெயிலை வைச்சுக்கிறீயே !''

மாமூல் தந்த தைரியமோ :)
            ''ஏட்டையா,இருந்தாலும் கபாலிக்கு இவ்வளவு தைரியம் கூடாதா ,ஏன்  ?''
             ''நம்ம ஏரியாவில் எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போன்பண்ணிக் கேட்கிறானே !''

 நகையோட லோனும்  கொடுத்தா வேண்டாம்னா இருக்கு :)          
         ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
        ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''
தலைப்பாகையை அலசிப் போட்ட மனைவி சொல்லி இருப்பாரோ :)
           ''காக்கா ,கக்கா போட்டுகூட  பழமொழி உருவாகி இருக்கா ,எப்படி ?''
           'தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுங்கிறது ,வேற எப்படி வந்திருக்கும் ?''

கவலைகள் ஓய்வதே இல்லை :)
மாசக் கடைசியில் ...
நடுத்தர வர்க்கத்தின்  கவலை ஒன்று கூடியது  ...
காசு மட்டுமா குறைகிறது,
நெட் ஸ்பீடும்  குறைகிறதே !  

19 comments:

 1. அந்த வாசகர் கேட்டது உங்களிடம்தானே என்று யாரும் 'போட்டு வாங்க' மாட்டீர்கள் தானே :)

  ReplyDelete
  Replies
  1. ஹா.. ஹா.. ஹா.. இந்த பின்னூட்டம் ஸூப்பர் ஜி

   Delete
  2. பாருங்க ,நான் சொல்லியும் கூட பலரும் கேட்டிருக்கிறார்கள் ....யார் அந்த தேவதை ,இல்லையில்லை ,வாசகர் என்று :)

   Delete
 2. அது யார் அந்த வாசகர்?

  ஆஹா..... என்ன செண்டிமெண்ட்! என்ன செண்டிமெண்ட்!!!

  அது மாமூலதானே!

  :))

  அவர் சிங்ஜி யா!?!

  நெட் ஸ்பீட் இப்போதான் அதிகமா இருந்தது, மாசக்கடைசியில் குறைய!

  ReplyDelete
  Replies
  1. என் கருத்துரை மட்டுறுத்தல் இல்லை ,யார் அப்படி ஒரு கருத்தைப் போட்டிருந்தாலும் உடனே உங்களுக்கே தெரிந்துவிடுமே :)

   இப்படியும்கூடவா :)

   மாமூல் இப்படியும் சலுகை செய்யுமா :)

   நகையும் கொடுத்து அது மேலே லோனையும் கொடுத்தா யாருக்காவது திருப்பி கட்டும் எண்ணம் வருமா :)

   நம்ம சௌகார் பேட்டை சிங் ஜிதான் :)

   bsnl பரவாயில்லை இப்போது :)

   Delete
 3. ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒருனாளேனும் கவலை இல்லாமல்... சிரிக்க மறந்தாய் மானிடனே...!’ ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...!’

  எந்தக் குப்பையாவது பெட்டியில கிடக்கனுமுல்ல...!

  காலம் பொன் போன்றது... நேரத்தை வீணடிக்கக் கூடாதில்ல...!

  மேலும் மேலும் வாங்க... வாங்க வாழ்த்துகள்...!

  எந்தக் கழிசல்ல போறது சொன்னிச்சோ...?!

  மீன் பிடிக்க நெட்ட எடுத்திட்டு...ஸ்பீடா கிளம்பிட வேண்டியதுதான்...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே,பிறரை சிரிக்க வைக்கவும் மறந்திடாதே :)

   குப்பையே இல்லைன்னா பெட்டியே காணாம போயிடுமா :)

   அதுக்கு தானே பங்கு கொடுக்கிறதே :)

   எப்படியாவது லோன் தள்ளுபடியானா நல்லதுதானே :)

   தலை முடி நிறைய இருப்பவர்தான் சொல்லியிருக்கணும் :)

   எந்த கண்மாயிலும் தண்ணியே இல்லையே ,மீனை எங்கே பிடிக்கிறது :)

   Delete
 4. Replies
  1. காக்கா ,கக்கா போடுறது நல்லாவாயிருக்கு :)

   Delete
 5. Replies
  1. உங்க நெட் ஸ்பீடும் குறைகிறதா ஜி :)

   Delete
 6. உங்களிடம் கேட்ட அந்த வாசகர் யாரு ஜி... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. நரசிம்மராவ் கூட சேர்ந்தவரா இருப்பாரா அந்த வாசகர் :)

   Delete
 7. ஜோக்காளியிடமே கேள்வியா..யாரப்பா அங்கே!!!

  காக்கையையும், கபாலியையும் ரசித்தோம்.

  கவலைகள் அலைகள் ஓய்வதில்லை போன்று!!!

  ReplyDelete
  Replies
  1. அதுவும்இன்றோடு 2053 பதிவுகளை போட்டு விட்ட ஜோக்காளியிடமா :)

   கவலைகள் என்பதில் அலைகள் இருப்பது அதனால்தானா :)

   Delete
 8. Replies
  1. மாமூலின் வளர்ச்சி, வீட்டுக்கு தீயை வைக்கும் அளவுக்கு போய்விட்டதே :)

   Delete
 9. எல்லாவற்றையும் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. நகையோட லோனும் கொடுத்தா சந்தோஷமாத்தானே இருக்கும் :)

   Delete