8 January 2017

நடிகையான மேஜிக் கன்னி :)

தோல் இருக்க சுளை முழுங்கலாம் :)
        ''ஆரஞ்சுப் பழத்திலே தோல் இருப்பது வசதியாயிருக்கா ,என்ன வசதி?''
       ''உரிச்சு வச்ச தோலிலேயே ,கடிச்சு துப்புற சக்கை ,கொட்டையைப் போட முடியுதே !''
உங்களுக்காவது  தெரியுமா 'அது ':)               
             ''வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே ,கொல்லுதேங்கிற பாடல் வரிகளைக் கேட்டு ஏண்டா  சிரிக்கிறே ?''
             ''அந்த வெண்ணிலா ,இவனை என்னதான் பண்ணும்னு தெரியலியே !''

நடிகையான மேஜிக் கன்னி :)
            ''ஃ டூ பீஸ் உடையில்  உடம்பைக் காட்டி  நடிக்க வேண்டியிருக்கேன்னு  என்னைக்காவது வருத்தப் பட்டதுண்டா ?''
            '' மேஜிக் குழுவில் நான் முன்பு  இருந்தப்ப , என்னை  ஃ டூ  பீஸ் ஆக்கினதுக்கே வருத்தப் படலே ,இதுக்கா வருத்தப் படப் போறேன் ?''  
டிரான்ஸ்பருக்கும் அஞ்சாத தில்லு துரை :)
             ''ஆபீஸிலும் போதையில் இருக்கீயே ,உன்னை தண்ணி இல்லாக் காட்டுக்கு தூக்கி அடிக்கப் போறாங்க !''
             ''அங்கே போனாலும் டாஸ்மாக் தண்ணி  கிடைக்குமில்லே ?''

தூரப் பார்வை மாதிரி ,இது தூரக் காது போலிருக்கே :)
             '' முப்பது வருச  அனுபவத்தில் இப்படி ஒரு நோயாளியை பார்த்ததில்லையா, ஏன் டாக்டர் ?''
             ''நான் பேசுறது காதுலே விழலையாம் ,பக்கத்து தெருவிலே பேசுறது எல்லாம் கேட்குதாமே !''

நியாயம் கேட்கும் நீதிபதியின் பேனா :)
   முனை நசுக்கி குப்பையில் வீசப்பட்ட பேனா  கேட்டது ...
    குற்றவாளிக்கு மரணத் தண்டனை எழுதியது  சரி ...
    எனக்கேன்  மரணத் தண்டனை ?     

18 comments:

 1. ரசித்தேன் நோயாளியை.

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை ,காதுலே செல் வச்சிருப்பாரோ :

   Delete
 2. ஆரஞ்சு ஐடியா சூப்பர். தூரக் காது... ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. நான கடிச்சு துப்பின ஆரஞ்சு சக்கைப் படம் ,விருது பெறுமென்று நம்புகிறேன் :)

   Delete
 3. Replies
  1. வட்டமாய் காயும் வெண்ணிலா உங்களையும் கொல்லுதா :)

   Delete
 4. Replies
  1. மேஜிக் கன்னி உடம்பைக் கூறு போடுவது தொடர்கிறதுதானே:)

   Delete
 5. Replies
  1. டெல்லியிலும் இருக்காரா தில்லு துரை :)

   Delete
 6. ‘பழம் தின்று கொட்டை போட்டவன்’ என்று அப்பத்தானே சொல்ல முடியும்...!

  "நிலா காயுது..நேரம் நல்ல நேரம்..."

  வெட்டிக்கோ ஒட்டிக்கோ...!

  குடிமகனே... பெருங்குடிமகனே...!

  இதுக்குத்தான் கத்தி(யோட)... பேசாதிங்க...!

  இதுக்குத்தான் நல்லா எழுதனும்... நல்லதையே எழுதனுங்கிறது...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் செய்தே தீரவேண்டிய காரியம்தானே கொட்டைப் போடுவது :)

   அப்போதுதான் காமன் அம்பை எய்வாரா :)

   ஒட்டகத்தைக் கட்டிக்கோ :)

   கவலைப் படாதே ,பெருங்குடியிலும் இருக்கே டாஸ்மாக் :)

   பேச்சே ,இரு முனைக் கத்திதானே :)

   இப்போதான் நிப்பு பேனாவே வர்றதில்லையே ,தீர்ப்பை எந்த பேனாவால் எழுதுறாங்களோ :)

   Delete
 7. அந்தத் தோலையும் வெளியில்தானே போடப்போகவேண்டும்
  நிலவைப் பிடித்து சிறு கறைகள் துடைத்து குறுமுறுவல் பூத்த முகம் இந்தக்கவிதையின் வரியும் என்னை கேள்வி கேட்க வைத்தது அப்படிச் செய்தால் இப்போது வரும் ஸ்மைலி போல் இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன் கவிதைகளில் கேள்வி கேட்கக் கூடாது அவை அபரிமிதக் கற்பனையே
  அவர் வருத்தப்படாத வாலிபியோ
  தமிழ்நாட்டைவிட்டே தூக்கிவிட்டால
  கேள்வி ஞானம் என்பதே இதுதானோ
  பேனாவுக்கு வாயிருந்தால் கேட்டிருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அதுக்கும் சோம்பேறித்தனமா :0இருந்தால் உள்ளே தள்ளிவிடலாமா :)

   கலைஞர்களின் கற்பனைக்கு வானமே எல்லை,கேள்வி கேட்பதில் அர்த்தமே இல்லை :)

   ரசிகர்களுக்கு லாலிபாப்பும்கூட:)

   கர்நாடகாவில் மதுபானம் விற்பனை டிபார்ட்மெண்டல் கடைeயிலேயே கிடைக்குதாமே :)

   அதை நான் விஷயதானம் செய்துள்ளேன் :)

   ஜல்லிக்கட்டு காளைக்கும் வாயில்லை ,ஜீவகாருண்யம் பேசுபவர்கள் அதுக்கும் வக்காலத்து வாங்குகிறார்களே :)

   Delete
 8. அதுக்கே வருத்“தப்படாதவுக..இதுக்கா வருத்தப்படப் போறாங்க..சரிதான்...

  ReplyDelete
  Replies
  1. ஃடூ பீஸையாவது விட்டு வைத்தார்களேன்னு சந்தோசப் படுவாங்களோ:)

   Delete
 9. Replies
  1. உங்களுக்காவது தெரிந்ததா 'அது ':)

   Delete