1 February 2017

செலவின்றி காதல் சாத்தியமா:)

இன்சூரன்ஸ் பிரிமீயமா ,அப்படின்னா :)
                ''மூன்றாண்டு இன்சூரன்ஸ் தொகையை ஒரே நேரத்தில்  கட்டினால் ,ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் ...இதை ,உங்க நண்பர்கிட்டே  சொல்லலாமே !''
                 ''அவன் ,வண்டி வாங்கியதில் இருந்தே ,இன்சூரன்ஸ் பண்ணிக்காம  காசை  மிச்சப்படுத்தியவன்  ஆச்சே !''

 ஃகாலி பிளவரா ,'காலி 'பிளவரா :)          
             ''நான் வாங்கி வந்த  ஃகாலி ப்ளவரில்  பூச்சி இருக்குன்னா ,எடுத்துப் போட்டு நறுக்க வேண்டியதுதானே ?''
            ''அதைத்தாங்க நானும் செஞ்சேன் ,மீதி ஒண்ணுமே தேறலே ..உண்மையில் இதுதாங்க 'காலி ' ப்ளவர் !''

கணவன் கண் கண்ட தெய்வமா :)
              ''என்னடி ,கணவனை நீ தெய்வம் மாதிரி நினைக்கிறீயா ,ஏன் ?'' 
              ''எனக்கு பிடித்த சனீஸ்வரன் இல்லேன்னாலும் ,என்னைப் பிடித்த சனீஸ்வரனாச்சே !''
                                            
செலவின்றி காதல் சாத்தியமா:)
              ''நம்ம காதல் தெய்வீக காதல்னு சொன்னா , கோவிச்சுக்கிறீயே ,ஏன் ?''
               ''பீச்சுக்குப் போனா  காசு செலவாகும்னு ,கோவிலுக்கு  வரச் சொன்ன காரணம் இப்போதானே புரியுது ?''
கிணற்றில் குதித்த ஜோடி :)
              ''டார்லிங் ,நீயும் நானும் கிணற்றில் குதிக்கிற மாதிரி கனவுகண்டேன் !''
              ''ஐயையோ ,அப்புறம் ?''
              ''நீயும்தானே குதிச்சே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''
                                                                         
படிச்ச மேதைகள் இவர்கள்தானா ...:)
நூலக வருகையாளர் பதிவேட்டில் ...
யாருடைய  கையெழுத்தும் இல்லாமல்
வரிசைஎண் 13 காலியாகவே இருக்கிறது !

26 comments:

 1. அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அர்த்த ராத்திரி வேளையிலும் வந்து ரசித்தமைக்கு நன்றி ஜி :)

   Delete
 2. நான் நூலகம் சென்ற நாட்களில் காலியாகவே இருந்ததில்லை 13!

  இன்சூரன்ஸ் முடிந்து 6 மாதமாகிறது. மதுரை வரவேண்டும்! நீங்களும் நினைவு படுத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. காலியாக இருந்தால் அங்கே கையெழுத்து போட்டு விடுவதே என் பழக்கம் :)

   சில நேரங்களில் மாட்டிகிட்ட பிறகுதான் நினைவுக்கு வருகிறது ,ரெனிவலை மறந்திருப்பது :)

   Delete
 3. கிணற்றில் குதித்தஜோடி-

  நல்ல நகைச்சுவை

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளி தளத்துக்கு முதல் முதலாக ஆனா போட்டு வந்திருக்கும் அண்ணாச்சிக்கு நன்றி :)

   Delete
 4. கிணற்றில் குதித்தஜோடி-

  நல்ல நகைச்சுவை

  ReplyDelete
  Replies
  1. திருமணத்துக்கு இரண்டு வீட்டார் சம்மதம் கிடைக்கலைன்னு கிணற்றில் குதிக்காமல் போனால் சரிதான் :)

   Delete
 5. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது.....அனைத்தையும் ரசித்தேன், படித்த மேதைகளை அதிகமாக.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் விக்கிபீடியா போட்டி அனுபவத்தையும் எதிர்பார்க்கிறேன் :)

   Delete
 6. வண்டிக்குத்தான் இன்சூரன்ஸ் இருக்கே... ‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்...!’

  அந்தக் காளிப் பயல்ட்ட இனி காலி பிளவர் வாங்கக் கூடாது...!

  சனியன் பிடிச்சிடுச்சு...!

  கோவிலில்தானே... மன்மத லீலையார்கள் சிலையாகப் பார்க்கிறார்கள்...!

  அப்புறம் நடந்ததை வெளியே சொல்லவா முடியும்...? நாமதான் தண்ணிக்குள்ள இருக்கோமுல்ல...!

  இதுக்குத்தான் கைநாட்டுக்கும் நாட்டில வசதி செஞ்சு கொடுக்கனுங்கிறது...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. வண்டிக்கு இன்சூரன்ஸ் கட்டாயமாச்சே ,உங்களுக்கு பண்ணிக்குங்க :)

   அவனா விதையைப் போட்டு விளைவித்தான் :)

   நல்ல முகூர்த்த நாளில் இருந்துதானே :)

   இப்படியும் கிக் ஏற்றிக் கொள்ளலாமா :)

   தண்ணியிலே உள்ள சுகம் ,அனுபவியுங்கள்:)

   ரப்பர் ஸ்டாம்ப் பேடை வைத்து விடலாமா :)

   Delete
 7. இவன் காலி பண்ணிட்டானா ?

  ReplyDelete
  Replies
  1. ருசியா செய்து கொடுத்தா காலி ஆகத்தானே செய்யும் :)

   Delete
 8. Replies
  1. உங்கள் ஊர் நூலகத்திலும் இப்படிப்பட்ட மேதைகள் வருகிறார்களா :)

   Delete
 9. அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. முத்தாரம் மார்மீது தவழ்கின்றதே ,எனக்கதில் கொஞ்சம் இடம் கொடு...பாடல் நினைவுக்கு வருதா படத்தைப் பார்த்தால் :)

   Delete
 10. அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. படத்தை ரசிக்கவில்லையா :)

   Delete
 11. // என்னைப் பிடித்த சனீஸ்வரனாச்சே... //

  நீங்க அப்படியில்லே ஜி...

  ReplyDelete
  Replies
  1. இதை நீங்க சொன்னா போதாதே :)

   Delete
 12. ஆம் ஏன் இன்சூரன்ஸ் செய்யவேண்டும் விபத்து நேராவிட்டால் வேஸ்ட் தானே மூன்றாண்டுகள் விபத்து ஏதும் நிகழவில்லையே
  வெங்காயத்தில் தோல் உரித்தமாதிரி காலிஃப்லவரைக் காலி செய்து விட்டாரா
  சனீஸ்வரன் தான் பிடித்த கடவுளா
  நம் நாட்டில் பல காதல்களும் தெய்வீகக் காதல்தானே கடலை போடும்காதல்களா
  ஐயையோ என்ன ஆச்சு நான் கிணற்றில் குதிக்கவில்லையே
  இப்படியும் மூட நம்பிக்கைகள் வெளிநாட்டு இறக்குமதி...?

  ReplyDelete
  Replies
  1. நமக்கு வேஸ்ட் ஆவதுதான் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பல கோடி லாபமாகி விடுவதால் தான் பலத்த போட்டி நிலவுதே :)
   ஒன்றும் இருக்காது ,இதுக்கும் பொருந்துதே :)
   சனியும் ஞாயிறும் எல்லாம் ஒன்றுதான் எனக்கு :)
   மெரீனா சென்னையில் மட்டும்தானே இருக்கு :)
   பொய் சொல்லாதே ,மூடிய கண்ணாலே நான் பார்த்தேனே :)
   படித்த பைத்தியமா இருப்பாரோ :)

   Delete
 13. Replies
  1. பதிவு போடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ...இது என்னோட ஆத்திச் சூடி :)

   Delete