10 February 2017

சேஷ்டைக்கார நடிகர்கள் ஜாக்கிரதை :)

மனைவி கையால் சாப்பிட்டு இப்படி சொல்லலாமா :)
       ''உங்க மனைவி இன்னும் அரை மணி நேரம் உயிரோட இருந்தாலே அதிகம் !''
    ''பரவாயில்லை ,ஆக்கப் பொறுத்தேன் ஆறப் பொறுக்கிறேன் டாக்டர் !''

சேஷ்டைக்கார நடிகர்கள்  ஜாக்கிரதை :)
                 ''அந்த நடிகையோட நெருங்கி நடிக்க திடீர்னு பயப்படுறாங்களே ,ஏன் ?''
                 ''நூறு கிலோ எடையை அவர் தூக்கின வீடியோ,வைரலா  பரவிட்டு வருதே !''
பணம் தேவைன்னு இப்படியுமா நடந்துக்கிறது :)
         ''அடகு கடையிலே வந்து ஒரு முழத்துக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''
        ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாம்னு சொன்னாங்களே !''

இன்னும் சில மாதங்களில் இது நடக்கும் :)              
             ''ATM கார்டை காட்டிட்டு  உள்ளே போங்கன்னு  ஏன் சொல்றீங்க ,வாட்ச்மேன் ?''
           ''வெயிலுக்கு  AC  சுகமா இருக்குன்னு  சும்மாவாச்சும்  சில பேர் உள்ளே   நுழைய  ஆரம்பிச்சிட்டாங்களே !''

விசுவாசமுள்ள 'வீட்டோட' மாப்பிள்ளை :)
              ''ஊரே 'மாமதுரை போற்றுவோம் 'ன்னு விழா கொண்டாடிக்கிட்டு இருக்கு !நீ மட்டும் 'மாமா  துரையைப்   போற்றுவோம் 'ன்னு  தனி ஆவர்த்தனம் வாசிக்கிறியே ,ஏன் ?''
             ''பொண்ணை கொடுத்து ,வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிகிட்ட ,என்னோட மாமா  துரையைப்  போற்ற வேண்டியது என் கடமையாச்சே !''
               (சில  வருடத்துக்கு முன் , அரசின் சார்பில்  'மாமதுரை போற்றுவோம் ' என்ற  தலைப்பில் ஒரு வார விழா கொண்டாடிய போது  உண்டான மொக்கை இது :)

மெய் போனாலும் மொய் போகாது :)
திருமண ஆல்பத்தைப் புரட்டுகையில் ...
சிரிப்புடனே காட்சி தரும் பெருசுகளைப் பார்க்கையில் ....
பாவமாய்த்தான் இருக்கிறது 'போய் விட்டார்களே 'என்று !
மொய் வைத்தவர்களை மறக்க முடியுமா ?

28 comments:

 1. இந்த பதிவு தமிழ்மண முகப்பிலும் தெரியவில்லை ,திரைமண முகப்பிலும் தெரியவில்லை !எங்கே போச்சோ ,என்ன ஆச்சோ ?விசாரித்து சொல்லுங்க வலையுலக உறவுகளே :)

  ReplyDelete
  Replies
  1. எட்டு வாக்கு விழுந்த பின்னாலும் வாசகர் பரிந்துரையிலும் வரவில்லையே !எங்கே சென்று முறையிடுவேன் :)

   Delete
 2. விடுங்கநண்பரே உங்கரசிகர்கள்எப்படியும்தேடி வந்து படிப்பாங்க...
  இராயசெல்லப்பாநியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. மினிமம் கியாரண்டி உண்டு என்றாலும் ,பல்பு வாங்க வரும் கணிசமான பேர்களுக்கு பதிவு போய் சேராதே என்பதே என் கவலை :)

   Delete
 3. மொபைலில் தெரியவில்லை, லேப்டாப்பில் பார்த்தேன். தமிழ்மணம் பட்டை தெரிகிறது. என்னுடையது தம 2. போதுமா?
  -இராய செல்லப்பா நியூஜெர்சி.

  ReplyDelete
  Replies
  1. ஆதரவுக்கு நன்றி !
   நடிகர் என்று தலைப்பில் வந்ததால் திரைமணத்துக்கு பதிவு தாவி விட்டது ,இப்படி ஆகக் கூடாது என்று எச்சரிக்கையுடன் ஒரு வேலை வழக்கமாய் செய்வேன் !இரவு வெகு நேரமாகி விட்டதால் அசந்து விட்டேன் ,இப்படியாகி விட்டது :)

   Delete
 4. கொடுமையான ஜோக்.

  எந்த நடிகை 100 கிலோ?

  ஆனா அதுக்கேத்த விலைதான் கிடைக்கும்.

  தப்பென்ன!!!

  மொக்கை மொக்கைதான்!

  முடியாதுதான்.

  தம தெரிகிறதே... +1

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் இருக்கத்தானே செய்கிறார்கள் :)

   படத்திலேயே 'சமபந்தம் 'இருக்கே :)

   தங்கம் ஒரு கிராமுக்கு எத்தனை கிலோ பூவை வைத்தால் சமமாகும் :)

   பணம் எடுப்பவர்கள் நுழைய முடியாதே :)

   சப்பாத்தி சப்பாத்திதானா :)

   மொய் விசுவாசமா :)

   Delete
 5. பரவாயில்லை டாக்டர்... எவ்வளோ பொறுத்துக் கொண்டாச்சு... கொஞ்சம் பொறுத்துக் கொள்கிறேன்...!

  இரு நூறு கிலோவுக்கு இதெல்லாம் சுஜுபி...!

  ‘பொன்னை வைத்த இடத்தினிலே... பொன்னை வைத்த இடத்தினிலே... அண்ணனன்றி யாருமுண்டோ...?!’

  ஏ சி... ஓசின்னா... ஐ... சி...!

  மா.... மா.... மாமா... எந்தத் துறை...?!

  பழையன கழிதலும்... புதியன புகுவதும்... வழுவல...! மொய் மெய்யா இருக்கில்ல...!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ,தாராள மனசுதான் :)

   அந்த பூவா இருநூறு கிலோ :)

   பூவை வைத்துப் பார்க்கலாம் ,லோன் தான் கேட்கப் படாது :)

   இதற்கும் சர்வீஸ் சார்ஜ் போட்டு விடப் போகிறாகள் :)

   மாப்பிள்ளைக்கு படியளக்கும் துறைதான் :)

   நமக்கு நாலு பேர் மொய் வைச்சா,நாம நாலு பேருக்கு வச்சுதானே ஆகணும் :)

   Delete
 6. Replies
  1. மெய் போனாலும் மொய் போகாது...கவித்துவமா இருக்கா :)

   Delete
 7. Replies
  1. எல்லாமே சம்மத 'ம் 'தானே :)

   Delete
 8. Replies
  1. 'வீட்டோட' மாப்பிள்ளையையுமா :)

   Delete
 9. ''பரவாயில்லை ,ஆக்கப் பொறுத்தேன் ஆறப் பொறுக்கிறேன் டாக்டர் !''//

  கல்நெஞ்சுக் கணவன்!!!

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் கதையை முடிங்கன்னு சொல்லாமல் போனாரே :)

   Delete
 10. அனைத்தும் ரசித்தேன் மிகவும் நன்று

  ReplyDelete
  Replies
  1. நூறு கிலோ எடையை தூக்கக் கூடிய நடிகையிடம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்தானே :)

   Delete
 11. சேஷ்டைக் காரன் மொக்க எ ல்லாம் ரசித்தோம்....

  ReplyDelete
  Replies
  1. இப்போது உள்ள நிலைமையில் 'தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வோம் 'னு கோஷம் போடலாமா :)

   Delete
 12. தமிழ்மண ப்ராப்லம் உங்களுக்குமா
  அதைவாங்கி உங்கள் காதில் சுற்றினாலும் சுற்றுவார்கள்
  இவ்வளவு நாள் கழித்தாயிற்று இன்னும் அரைமணிதானே
  வாட்ச்மேனுக்கு என்ன நஷ்டம்
  மொய் வைத்தவர்கள் பொய்யாகிப் போனார்கள்

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்கும் வீசுற மணம்தானே எனக்கும் :)
   காதிலே வச்சுக்க ஒன்றிரண்டு பூ போதுமே ,முழம் கணக்கில் எதுக்கு :)
   இதுவே ஒரு யுகம் போல் தோன்றுதாமே :)
   அவர் நிம்மதியா தூங்க முடியலியே :)
   வைக்காதவர்களும் அப்படித்தான் ஆனார்கள் :)

   Delete
 13. ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !!சேஷ்டைக்கார நடிகர்கள் ஜாக்கிரதை !!!

  ReplyDelete
  Replies
  1. எங்கே ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள் 'சிக்கிச்சு செம கட்டை' என்கிறார்களே :)

   Delete
 14. பொன்னை வைக்கிற இடத்தில்
  பூவையும் வைக்கலாம்னு சொன்னாங்களா?
  எந்தப் பூவை?
  பூவை - மல்லிகைப் பூவை
  பூவை - பெண்ணை
  (பெண்ணைப் பூவையர் என கவிஞர்கள் சொல்கிறார்களே!)

  ReplyDelete
  Replies
  1. பூவைக்கு என்ன வயது என்று சொல்லுங்கள் ,வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று அடகுக் கடைக்காரர் முடிவெடுப்பார் :)

   Delete