11 February 2017

இரு மானிட்டர் அடிமைகள் உள்ள வீடு உருப்படுமா :)

 இப்படியும் புலம்ப வைக்கிறதே அரசியல் :)          '
             ' 'இதென்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனைன்னு புலம்புறீங்களே ,ஏன்  ?''
            ''தொகுதிக்கு  வருகை தராத  MLA யைக் 'காணலை'ன்னு மக்கள்தான் புலம்புவார்கள் ,இப்போ கட்டின பெண்டாட்டியே  புலம்புதே !''

நல்ல வேளை,மச்சம் இங்கிருந்தது :)          
           ''பல் வலின்னு வந்துட்டு,முதுகுலே இருக்கிற மச்சத்தை எதுக்கு காட்டுறீங்க ?''
           ''டாக்டர் கிட்டே எதையும் மறைக்ககூடாதுன்னு  சொன்னாங்களே !''
இரு மானிட்டர் அடிமைகள் உள்ள வீடு உருப்படுமா :)
             ''என்னடி சொல்றே ,உன் வீட்டுக்காரரும் ,பையனும் 'மானிட்டர் '  அடிமைங்களா  ?''
             '' மானிட்டர்  பாட்டிலைக்  குடிச்சுக்கிட்டு அவரும்   ,லேப்டாப் மானிட்டரை பார்த்துகிட்டு பையனும்  இருந்தா ,அதுதானே அர்த்தம் ?''

மனைவிக்கு புரியும்படி சொல்ல வேண்டாமா :)
          ''வாசல்லே எலக்ரீசியன்  வந்து 'எந்திரம் சிங்கிள் பேஸா ,திரீ பேஸான்னு 'கேட்கிறான் ...ஒண்ணுமே புரியலே ,நீ வரச் சொன்னீயா ?''
           ''ஆர்டர் செய்த குபேர 'எந்திரம்' இன்னைக்கு வந்தவுடனே மாட்டணும்னு நீங்கதானே சொன்னீங்க !''

புலவர் பைத்தியமானது உண்மையா  :) 
            ''உன் தாத்தாவுக்கு மாத்திரையால் 'சைடு எப்பெக்ட்'ஆயிடுச்சா ,என்ன  செய்றார் ?''
           ''மாத்திரையைப் பார்த்து 'மாத்திரே ,நீயுமா என்னை ஏமாத்திறே 'ன்னு பைத்தியமா புலம்புறார் !''

ஸ்டெதஸ்கோப்புடன் இன்றும் சில 'DOG'டர்கள் :)
பெண் நோயாளிகளை 'தொடக் ''கூச்சப்பட்டு ஸ்டெதஸ்கோப்பை கண்டு பிடித்தாரே ...
அந்த  டாக்டரை  'தொட்டுக் 'கும்பிடத் தோன்றுகிறது ...
இன்று ,வரம்பு மீறும் சில டாக்டர்களைப்  பார்க்கையில் !

16 comments:

 1. உங்கள் கண்டுபிடிப்பு வியப்பளிக்கிறது ஜி...!

  ReplyDelete
  Replies
  1. வியப்பளிக்கும் கண்டுபிடிப்புக்குக் காரணம் ,சில மானிடர்களின் நடத்தைதான் :)

   Delete
 2. தண்ணி கண்டா இடம் தங்கள் இடம்னு இருக்காங்க அவங்க.. அவங்களைப்போய் தொந்தரவு செய்துகிட்டு...

  எதையுமே மறைக்கக் கூடாதா பாஸ்?

  அவர்கள் மானிடர் இல்லையென்று அர்த்தம்!

  ReplyDelete
  Replies
  1. தண்ணியிலே கண்டம்னு பயந்து , சிலர் வெளியே வந்துட்டாங்களே :)

   சில டாக்டர்கள் அப்படித்தான் நினைக்கிறாங்க :)

   மானிட்டர் இன்றி வாழமுடியாது என்பவர்களை அப்படித்தான் சொல்லணும் :)

   Delete
 3. அவர் ரிசார்ட்டில் குஷியாக இருக்கிறார் என்று சொல்வதுதானே
  நல்லவேளைதான் டாக்டருக்கா
  மானிட்டர் பாட்டில்......?
  சாமி ரூமில் மாட்ட வேண்டியதுதானே எலெக்ட்ரிஷியன் எதற்கு
  புலவர் அல்லவா சந்தத்தோடு புலம்புகிறார் சைட் எஃபெக்ட் ஏதும் அல்ல
  ஸ்டெதஸ்கோப் கண்டு பிடித்த காரணம் அறிந்தேன்

  ReplyDelete
  Replies
  1. சுதந்திர அடிமையா இருக்கார்னு கூடச் சொல்லலாம் :)
   நீங்க தப்பா பார்க்கிறீங்க ,இங்கே காட்டுறதும் ,பார்க்கிறதும் ஆம்பளைங்க :)
   குடிகாரர்களிடம் கேளுங்கள் :)
   எந்திரமாச்சே ,கரெண்ட் கனெக்சன் தர வேண்டாமா :)
   இது நல்ல எஃபெக்ட்தானா :)
   கண்டுபிடித்தவரை தீர்க்கதரிசி என்று சொல்லலாம்தானே :)

   Delete
 4. எந்த தொகுதி எம்.எலே.ஏவை காணோம் ?
  2 தினங்களாக காய்ச்சல் ஜி அதான் இணையம் வரமுடியவில்லை மருத்துவரிடம் போனோன் பதிவுக்கு விடயம் கிடைத்தது.

  ReplyDelete
  Replies
  1. நாலைந்து தொகுதி எம் எல் ஏக்கள்தானே கண்ணில் படுகிறார்கள் :)
   எந்த விடயம் ,சீக்கிரம் பதிவைப் போடுங்க ,எனக்கு காய்ச்சல் வர்ற முன்னாலே :)

   Delete
 5. Replies
  1. மானிட்டர் அடிமைகள் வரிசையில் நாமும் சேரக்கூடாதுதானே ஜி :)

   Delete
 6. Replies
  1. IMFக்கே லோனா .ஸ்மைலியைச் சொன்னேன் :)

   Delete
 7. கல்யாணம்தான் கட்டிக்கு... ஓடிப்போலாமா...?! வா ராஜா வா...! நட... ராஜா...! மானமா முக்கியம்... வரு...மானம்தானே...!

  ஆமாமா... எதையும் மறைக்கக் கூடாது...!

  ஸ்கூல்ல நீங்க மானிட்டரா...?!

  அவரு எந்திரன் படம் பார்க்கப் போகனுமாம்...!

  இதுக்குத்தான் மாத்திரையை மாத்திக் கொடுக்கக் கூடாது... ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிடும்...!

  என்ன சத்தம் இந்த நேரம்... கொஞ்ச சத்தமா கேக்கத்தான்...!

  த.ம. 5  ReplyDelete
  Replies
  1. திரு .நடராசன் அவர்கள் உறுதியான மனிதர் ,தான் தொகுதி அலுவலகத்தில் தான் இருக்கிறேன் என்று சொல்லிஇருக்காரே :)

   நீங்களும் அந்த டாக்டர் மாதிரியே சொல்றீங்களே :)

   மானிட்டருக்கு பயந்தவன் :)

   படம் பார்க்கப் போய் ,வாட்ச்மேன் வந்து 'எந்திரி 'என்று எழுப்பும் அளவுக்கு தூங்காமல் போனால் சரி :)

   கற்பனையைத் தூண்டவும் கூடுமோ :)

   சத்தமில்லாமல் வேறு காரியம் போனால் சரிதான் :)

   Delete
 8. 1. ஹஹஹஹஹஹஹஹஹஹஹ்....அரண்மனைக் கிளிகள்!!!!

  2. ஹஹஹஹஹஹ.....

  3. ஹஹஹ்

  4. ஹஹஹஹஹஹஹ் ....எந்திரத்தில் மந்திரமென்னும் தந்திரம் இல்லாம இருந்தா சரி..

  5. புலவர் பாவம்..ஹஹஹ்ஹஹ்ஹ்

  ReplyDelete
  Replies
  1. என்றாலும் கூண்டே நல்லது என்று நினைக்கலாமா :)

   மச்சத்தையுமா காட்டுவது :)

   மானிடரைப் பிடிக்கும் சனியன்களா இவை :)

   விற்கும் தந்திரம் தெரிந்துக் கொண்டிருக்கிறார்களே :)

   புலம்பும் போது கவிதைதானா :)

   Delete