21 February 2017

மனைவி காதுக்கு மேட்சிங் தோடு அமையுமா :)

எலும்பு வாசனை மட்டுமே தெரியும் போலிருக்கு :)      
             ''உங்க நாய்க்கு மோப்ப சக்தி குறைந்து போச்சுன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?'' 
              ''என்னையே  கடிச்சிடுச்சே !''

குக்கரில் சாதம் வைக்கத்தான் அவருக்கு தெரியும்  :)           
         ''என்னங்க ,காட்டன் புடவையை  வாங்க வேண்டாம்னு  ஏன் சொல்றீங்க ?''
         ''அதுக்கு போட வேண்டிய கஞ்சிக்கு ,நான்  எங்கே போறது ?''
வாலிபர்களின் 'கனவு ' வாகனம் வருவதே  தெரியலியாமே :)                                                                     ''பெரியவரே ,உங்களுக்கு வந்திருக்கிறது அல்சர் ,இது எப்படி வருதுன்னு தெரியுமா ?''
           '' எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது 'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் டாக்டர் ?''                     
               
மனைவி காதுக்கு மேட்சிங்கா , தோடு அமையுமா :)
         ''கடையிலே இருக்கிற எல்லா மாடல் தோடுகளைக் காட்டியும் ,உங்க மனைவிக்கு எதுவுமே பிடிக்கலே ...ஏதாவது  ஒரு மாடல் நல்லாயிருக்குன்னு நீங்களாவது எடுத்து சொல்லக்கூடாதா,சார் ?'' 
          ''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''

ஊருக்கே தெரிந்த தலைவரின் 'இரகசியம் ':)
        ''எந்த டெஸ்ட்டும் பண்ணாமலே எனக்கு முதுகு வலி வர வாய்ப்பே இல்லைன்னு உறுதியாச் சொல்றீங்களே ,எப்படி டாக்டர் ?''
         ''ஆட்சிக்கு வர்ற எந்த கட்சிக்கும்  நீங்க தாவுறதாலே 'முதுகெலும்பு இல்லாதவர் 'ன்னு தெரிந்தது தானே ?''

அழகு முகம் அடையாளம் தெரியுமா :)
             முக நூலில் பார்த்த முகத்தைகூட 
             நேரில் பார்த்தால்  அடையாளம் தெரியவில்லை ...
             கடவுளே வந்தாலும் நம்மால் கண்டுகொள்ள முடியுமா ?

18 comments:

 1. பரவாயில்லையே... நாய்க்குக்கூட நீ ஊழல்வாதின்னு தெரிஞ்சு போச்சே...! இப்பெல்லாம் இலவசமா போடுற எலும்புத் துண்டுகளை இந்த நாய் தொடுறதே இல்லை...!

  வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா... கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி... வஞ்சி வருதப்பா... அய்... ஆ அய்... அய் அய் அய்சலக்கா...!

  தமிழரோட கல்ச்சரே இதானே... எதுவுமே தெரியாமத்தானே வண்டி ஓடிக்கிட்டு இருக்கு...!

  கை விலங்கு இருந்தா எடுத்துக் காண்பிங்க... அதையாவது காதுல மாட்டிக்கிட்டு அலையட்டும்...!

  ‘அடிமைப் பெண்’ எடுத்தவரு இப்ப ‘அடிமை ஆண்கள்’ எடுக்கிறாராம்... அதுக்கு நீங்கெல்லாம் பொருத்தமானவரா இருப்பீங்க... புதுசா குனிய வேண்டிதில்ல... வழக்கம்போல ஒங்க பாணியில நடிச்ச போதும்... அதுலயும் கோடி கிடைக்க வாய்ப்பு இருக்கு... ஒங்க காட்டுல பண மழைதான்...!

  முகத்தில் முகம் பார்க்கலாம்...!

  த.ம.+

  ReplyDelete
  Replies
  1. நாய்க்கூட திருந்தி விட்டது ,மனுஷன்தான் ......:)

   அது அந்த காலப் பாட்டு...கஞ்சிக் கலயத்தை வஞ்சி சுமைக்கையிலே ...இது இந்தகாலப் பாட்டு :)

   கேட்டால், கல் தோன்றி மண் தோன்றா என்று கதை அளப்பான்:)

   போட்டாளே கை விலங்கு ,ஆட்டினாலே நீ அடங்கு :)

   உங்களையெல்லாம் அந்த 'கோவணத்து ஆண்டி'தான் காப்பாற்றணும்:)

   விரல் நகத்தினில் அழுக்கின் நிறம் காணலாமா :)

   Delete
 2. அல்சர் - பல்சர் ஜோக்கையும், காதில் தோடு போட்டுக்கொள்ளும் ஜோக்கையும் ரசித்தேன் ஜீ. என்ன, தம இன்னும் சப்மிட் ஆகவில்லை?

  ReplyDelete
  Replies
  1. தம என்பது தாமதம் என்றாகி விட்டதே :)

   Delete
  2. மீள் வருகைக்கு நன்றி :)

   Delete
 3. அல்சரும் பல்சரும்! ரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. ஹிந்தி பாடலாசிரியர் குல்சாரும் உங்களுக்கு )

   Delete
 4. அப்ப...யாரு..சொன்னா..காதுல போட்டுக்கிருவாங்க....??????

  ReplyDelete
  Replies
  1. வைரத் தோடு வாங்கிக் கொடுப்பவர் சொன்னால் :)

   Delete
 5. வழக்கம் போல நல்ல ஜோக்குகள்!

  ReplyDelete
  Replies
  1. கடவுளே வந்தாலும் நம்மால் கண்டுகொள்ள முடியாதுதானே :)

   Delete
 6. அருமை.அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. 'அல்சர் 'வர்றது தெரியாது என்பதையுமா :)

   Delete
 7. ஊருக்கே தெரிந்த தலைவரின் 'இரகசியம்'
  உலகறிந்த அரசியலில் நடப்பதை
  மீட்டுப் பார்க்க வைக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற துணிச்சல் வந்து விடுமோ :)

   Delete
 8. ஹஹ்ஹஹ் அல்சர் பல்சர்,,,,தோட்டையும் ரசித்தோம்....அனைத்தும்!!!

  ReplyDelete
  Replies
  1. வயிற்றில் நடப்பது தெரியாதுதானே :)

   Delete