22 February 2017

படுக்கையில் தேவையா பத்தடி இடைவெளி :)

            '' டிரைவர் நான் ...ரோட்டிலே  பாலோ பண்ற பத்தடி இடைவெளி  ரூல்ஸை வீட்டிலேயும் கடைப் பிடிக்கணுமா,ஏன் டாக்டர்  ?''
           ''ஐந்தாவது பிரசவத்துக்கு பெண்டாட்டியை கூட்டி வந்திருக்கீயே !''

மனைவியின் சொல்  எல்லாமே மண்டையில் ஏறுமா :)
        ''பசி மயக்கத்தில் காது கேட்காது என்பதெல்லாம் பொய்னு எப்படி சொல்றே ?''
        ''வெங்காயம் நறுக்குன்னா கேட்காத உங்க காதுக்கு  ,டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேட்குதே !''                                                            
                                                                  
 பெயர்பொருத்தம் எல்லாருக்கும் இப்படி அமையாது :)
            ''பவித்ராங்கிற  பெயர் எனக்கு ரொம்ப பொருத்தமா ,ஏன் ?''
            ''பணத்தை வித்  ரா  பண்ணி முடிய மாட்டேங்குதே !''

சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா :)
            ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
            ''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறார்,அதுக்குத்தான் வரச் சொல்றேன் !''

மணப்பெண் இவள்னா திருமணமே வேண்டாம் :)
            ''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கியா ?''
             ''நீங்கதானே உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு விளம்பரம் பண்ணியிருந்தீங்க !''

காதலுக்கு மரியாதை இதுதானா :)
பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...
திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?

24 comments:

 1. பத்தாவது பிரசவமா? ஹா.... ஹா.... ஹா...

  மண்டையில் ஏறவேண்டாம்.. காதில் ஏறினால் போதும்!


  :))))


  அந்த ஐட்டத்தை வீடியோ எடுத்து கணவனுக்குப் போட்டுக் காட்டி விடவேண்டியதுதானே!

  :)))

  இவர்களெல்லாம் காதலுக்கு அவமரியாதைத்தான்செய்கிறார்கள்.

  தம சப்மிட் ஆகவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஐந்தாவது பத்து மாத பந்தம் ரீலீஸ் :)

   காதும் தேவையானதை மட்டும்தான் கேட்குமோ :)

   கருத்தை வித் டிரா பண்ணிக்கிறீங்களா :)

   இருந்தாலும் நேரடி பயிற்சி மாதிரி வருமா :)

   அடக்கமான பெண்ணிடம் அடங்குவானா :)

   காம வெறியர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

   Delete
 2. பத்தடி இடைவெளி விட்டா எந்த சக்காளத்தி இருக்கான்னு சண்டை வருது டாக்டர்...!

  உரிக்க உரிக்க ஒன்னும் இல்லை... காயமே இது பொய்யடா...! பசி... புசிக்க பத்தும் செய்யும்...!

  வாரா வாரம் அய்ம்பதாயிரம் வித் ரா பண்ணிக்க... வித் என்ஜாய்...!

  ஒங்க சமையலத்தான் வாயில வக்க முடியலையே... வாங்க வக்கனையா சமைக்க கத்துக்கங்க...!

  பெண் என்றால் பேயும் இறங்குங்கிறது இதுதானா...?! இந்த ஆணுக்காக இரக்கப்பட வேண்டியதுதான்...!

  காதலுக்குக் கண் இல்லைங்கிறது உண்மைதானா...?!

  ReplyDelete
  Replies
  1. பத்து நாள் இடைவெளி விட்டாலே இப்படித்தான் :)

   அடைத்த காதையும் திறக்குமா பசி :)

   ஒரே ஒரு கண்டிஷன் ,தேவைக்கு மட்டும் எடுக்கவும் :)

   வர்ற sef ஆணா,பெண்ணா :)

   இவனுக்காக மட்டுமா :)

   கள்ளக் காதலுக்கு என்று சொல்லுங்கள் :)

   Delete
 3. Replies
  1. மனைவியின் சொல் எல்லாமே மண்டையில் ஏறாது தானே :)

   Delete
 4. 1. ஹஹஹஹஹ்

  2. ஜோக்காளி பாவம் ஹிஹிஹிஹி

  அனைத்தும் ரசித்தோம் ஜி!!

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளியின் மண்டையில்தான் ஏற்கனவே நிறைய ஏறியிருக்கே:)

   Delete
 5. Replies
  1. படம் அருமைதானே ஜி :)

   Delete
 6. அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும்...//

  காமுகர்கள் கட்டுக்கோப்பாக இப்படியொரு பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அது உண்மையென்றால் இப்படி செய்ய மனம் வராதே :)

   Delete
 7. ரசித்தேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. காலை இப்படி வளைக்கும் பெண் ,கணவனுக்கு வளைந்து கொடுப்பாளா :)

   Delete
 8. Replies
  1. படத்துப் பெண் பெண்டை நிமிர்த்துவாளா :)

   Delete
 9. Replies
  1. சர்க்கஸ் பெண்ணைத் தானே சொல்றீங்க :)

   Delete
 10. இடைவெளியில் யாராவது குறுக்கே வந்தால்
  மனைவியின் குரல் எப்போதும் கேட்கும்
  பவி வித்ட்ரா என்றுதானே இருக்கிறது
  சமையல் கலை நிபுணர் ஆணா பெண்ணா
  எதிலும் அடங்கும் பெண்ணோ
  என்று குறையும் இந்தக் கொடுமை

  ReplyDelete
  Replies
  1. ஆபத்து அங்கேதான் உருவாகும் :)
   பதில்தான் எல்லாவற்றுக்கும் வராதோ :)
   ப வைட்டமின் என்றால் புரியும்தானே :)
   இதே சந்தேகம்தான் அவருக்கும் வந்தது :)
   இல்லறத்தில் அடங்கினால் சரி :)
   தானாய் திருந்தினால் குறையும் :)

   Delete
 11. இடைவெளி பத்தடி! சரிதானே!

  ReplyDelete
  Replies
  1. அறையின் அகலமே அவ்வளவு இருக்காதா :)

   Delete
 12. அடக்கமான பெண் என்றால் இப்படியும் அர்த்தம் உண்டா? ரூம் போட்டு யோசிக்கிறீங்க சார்!

  ReplyDelete
  Replies
  1. ஸிஷ்டம் ரூமில் இருந்தது ,இப்போ லேப்டாப் ஹாலில் ,ரூம் போட தேவையில்லாமல் போய்விட்டதே :)

   Delete