24 February 2017

'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் :)

நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா :)
           ''யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'டாச்சே  ?''
            '' அதான் ,சேதாரம் போக  டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''

இது நிரந்தரக் கூட்டணி போலிருக்கே :)            
        ''நாட்டிலே போலிச் சாமியார்கள் பெருக யார் காரணம் ?''
       ''போலீசும்,சாமியார்களும்தான் !''
மாமனார் தந்ததும் ,தராததும்:)
        ''புது மாப்பிள்ளை 'பைக்'கில் எழுதியிருப்பதைப் படித்தால் 'உள்குத்து 'இருக்கிற மாதிரித் தெரியுதா .எப்படி ?''
         ''என் மனைவி மட்டுமே ,மாமனார் எனக்கு தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''

தலைவர் 'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் :)
            ''தலைவர் மரத்தடியில் ரம்மி விளையாடினா பணத்தை அள்ளுறார்,கிளப்பில் விளையாடவே மாட்டேங்கிறாரே ,ஏன் ?''
            ''சட்டைப்பையில் இருந்து சீட்டை எடுக்கிற வித்தை CCTV காமெரா மூலம் வெளியே தெரிஞ்சுடும்னுதான் !''

 சொல்வது எளிது ,செய்வது அரிது :)
      ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீயா ,ஏன் ?
       ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காட்டுன்னு சொல்லத்தான் !''

தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை :)
'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க 
செலவு பாராமல் 'எலெக்ரானிக்  சோக் 'வாங்கி மாட்டினான் ...
சட்டென்று எரிந்தது டியூப் லைட்..
பட்டென்று கேட்டாள் ..
வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?

24 comments:

 1. நாங்க எதையுமே குறைச்சுத்தான் காண்பிப்போம்... ரேட்டைத் தவிர...!

  மாமிமார்கள்தாள்...! சாமியார்னாலே போலிதானே....! போலிகளைக் கண்டு(ம்) ஏமாறாதீர்கள்...!

  ‘என் மனைவிக்கு மட்டுமே, மாமனார் தந்த பரிசு’ என்று எழுதி இருக்க வேண்டுமோ...?!

  அவர் சீட்டை வெளியில் யாருக்கும் காட்டாமல் விளையாடுவார்...! கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு எடுபடும்...?!

  சிங்கம் சிங்கிளா வருமா...?! சிங்கம் நாலா வருமா...?

  நாங்கெல்லாம் கற்பூரம் மாதிரி... ஒன்னக் கட்டிக்கிட்டவுடன் இப்படி ஆயிட்டேன்...! ஒங்க பரம்பரையே இப்படித்தானே வாழையடி வாழையா இருக்கிறீங்க...!

  த.ம. 1  ReplyDelete
  Replies
  1. வேணும்னா நாலு கடையிலே விசாரித்துப் பாருங்க :)

   புருஷனிடம் இல்லாத ஒன்று சாமியாரிடம் இருக்கும் போலிருக்கே :)

   பைக்கை வாங்கித் தரவில்லை என்பதே மருமகனின் உள்குத்து :)

   அது சிங்கிளா வந்தாலும் போதையில் இருப்பவனுக்கு நாலா தெரியும் :)

   வாழை நாரோடு சேர்ந்தும் நாறுமோ :)

   Delete
 2. Replies
  1. ரம்மி விளையாடுவது சட்டப் படி தவறில்லை என்கிறார்களே உண்மையா ஜி :)

   Delete
 3. ''போலீசும்,சாமியார்களும்தான் !''//

  மக்கள்?!

  ReplyDelete
  Replies
  1. போலீஸ் ஆதரிக்கும் சாமியார்களை மக்களும் நம்பத் தொடங்கி விடுகிறார்கள் :)

   Delete
 4. எப்படியும் அர்ச்சனை உண்டு...!

  ReplyDelete
  Replies
  1. அர்ச்சனை டிக்கெட் ஆயுளுக்கும் வாங்கியாச்சே ஜி :)

   Delete
 5. சேதாரம் போக. அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கால்மணி நேரம் முன்பின் இருந்தால் குடி முழுகியா போயிடும் :)

   Delete
 6. அனைத்தும் ரசித்தேன்.....

  ReplyDelete
  Replies
  1. நானும் ரசித்தேன் ,தங்களின் மேலான ஆதரவை :)

   Delete
 7. அதிகம் ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அனைத்தும் ரசித்தேன் நண்பரே

   Delete
 8. தலைவர் 'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் இதுதானா......!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. இவருக்காக cctv கேமராவை மரத்தில் வைக்கணும் போலிருக்கே :)

   Delete
 9. Replies
  1. படம் ஒரு திரைப் படத்தின் ஸ்டில் ,படம் வந்தால் அதையும் அவசியம் ரசிப்போம் ஜி :)

   Delete
 10. சிலருக்கு பத்து நிமிஷம் சேதாரமாய்த் தெரியாது
  போலீசா . படத்தைப் பார்த்து பெண்களோ என்று நினைத்தேன்
  மனைவி மாமனார் தந்த பரிசா?
  ரகசியத்தைப் போட்டு உடைக்கலாமா
  அது உங்கள் எழுத்தல்லவா
  மனைவி சமயோசித புத்தி உள்ளவர் என்று தெரிகிறது

  ReplyDelete
  Replies
  1. விமானம் பிடிக்கவா போகிறார்கள் ,சேதாரம் தெரிய :)
   போலீஸ் முன்னால்,பெண்கள் பின்னால் வந்தார்கள் :)
   ஓட்டிப் :)போக பைக் தராதது ,உள்குத்து :)
   இது ரகசியமில்லை ,ஏமாற்று :)
   சக எழுத்தாளரின் எழுத்து :)
   அர்ச்சனை செய்வதில்தானே :)

   Delete
 11. அருமையான ஜோக்குக்குமிகம்கிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. அதிகம் மகிழ்ச்சி தருவது எது ?சொல்லுங்க ஜி :)

   Delete