28 February 2017

'சின்ன வீடு ' இருப்பதும் நல்லதுதானா:)

டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா :)
         ''அந்த பெட்லே படுத்து இருக்கிறவரை போலி நோயாளின்னு ஏன்  சொல்றீங்க?''
          ''அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !''

'சின்ன வீடு ' இருப்பதும் நல்லதுதானா:)
            ''அந்த அம்மாவை  வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க  என்ன பெரிய சமூக சேவகியா ?''
          ''அட நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''

இசையால் இயற்கையை இசைய வைக்க முடியுமா :)
         ''அவர் , அமிர்தவர்சினி ராகத்தை வாசிச்சு ,மழைப் பெய்ய வைக்கிறேன்னு சவால் விட்டாரே ,என்னாச்சு ?''
          ''அவர் மேல் செருப்பு மழைதான் விழுந்தது !''


இதிலே வர்ற வருமானம் I T யிலும் கிடைக்காது :)
           ''என்னடா ,பிச்சையெடுக்க வரமாட்டேங்கிறே ?''
           ''கேட்டு வாங்கி சாப்பிடுறதெல்லாம் ஒரு பிழைப்பான்னு ,கேட்காம எடுக்கிற பிக் பாக்கெட் தொழில்லே  இறங்கிட்டேன் !''

சில வருடத்துக்கு முன் ...ஊட்டி புலி தந்த கிலி !
தமிழகத்தின் உச்சபட்ச உயரமான தொட்டபெட்டா பகுதியில் உலா வந்து ...
மக்களுக்கு அதிகபட்ச  கிலியைக்  கொடுத்துக் கொண்டிருந்த புலியை ...
ஒருவழியாக சுட்டுக் கொன்று விட்டார்கள் என்பதை அறிந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் ...
3 2 ரவுண்டு சுட்டுப் பிடித்த புலியை ...
'ஆரம்பி 'வன விடுதிக்கு கொண்டு வந்தார்களாம் ...
இந்த 'ஆபரேசன் டைகர் ' புலி வேட்டையை ஆரம்பிக்க ஏன் இவ்வளவு தாமதம் செய்தார்கள் என்று தெரியவில்லை ...
இதற்குள் மூன்று உயிர்கள் பலியாகி விட்டன ...
யாரும் ஒருவாரம் வேலைக்கு செல்ல முடியவில்லை ...
பள்ளிக்கும் எந்த குழந்தையும் போகவில்லை ...
முற்றிலும் வியாபாரம் பாதிக்கப் பட்டது ...
மாமூல் வாழ்க்கை ஸ்தம்பித்தது ...
இவ்வளவு மோசமாக நிலைமை ஆகும் வரை அரசு தாமதித்த காரணம் ...
முறத்தால் புலியை எந்த வீரத்  தமிழச்சியாவது
விரட்டி விடுவாள் என்ற புராதன நம்பிக்கையாக இருக்குமோ ?

10 comments:

 1. ஊட்டி புலி தந்த கிலி!
  நல்ல படிப்பினை

  ReplyDelete
  Replies
  1. படிப்பனை பெற வேண்டியவர்கள் பெற்றார்களா என்பதே கேள்விக்குறி :)

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.  ReplyDelete
  Replies
  1. சமூக சேவகியா என்பதையும்தானே :)

   Delete
 3. போலிகளைக் கண்டு(ம்) ஏமாறாதீர்கள்...! போலி... போலி...!

  சின்னம் தந்த சின்ன(ம்)‘மா’ வீடு...!

  மழை பெய்ய வயலின் வாசித்தவரே... வயலில் படுத்து விட்டார்...! நல்ல நூலில் வாசித்துப் பழக வேண்டும்...!

  தொழில் இப்பத்தான் பிக்கப் ஆகுது...!

  புலி வருது...புலி வருது... வருது...வருது... விலகு விலகு... புலியை பலியிட மனமில்லை...! புலிக்கு பிறந்தது பூனையாகுமா...?!

  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. போலியும் ஒருவருக்கு உதவுதே :)
   மக்களுக்கு சினம் தர வேண்டிய விஷயம் ,அவருக்கு சின்னம் தருதா :)
   வயலின் தாக்கம் அவரை ஒன்றும் செய்யவில்லையா :)
   சாதனை புரியட்டும் :)
   பூனையானால் அது புலி வாரிசு ஆகாதே :)

   Delete
 4. Replies
  1. கிட்னி விற்க வந்தவர் நிலைமை பாவம்தானே :)

   Delete
 5. Replies
  1. அமிர்தவர்சினி ராகம் கேட்க சுகமா இருக்குமா அண்ணாச்சி :)

   Delete