4 February 2017

நீ பாதி ,நான் பாதி கண்ணே :)

 கேப்டன் இப்படி செய்யலாமா :)              
              ''நடுக்கடலில் சரக்கு கப்பல்கள் மோதலாமே !''
              ''கேப்டனும் 'சரக்கை ' ஏற்றிக் கொண்டு வந்திருப்பாரோ ?''          
    
 நீ பாதி ,நான் பாதி கண்ணே :)               
                ''முதல் இரவிலேயே ,குடி குடியை கெடுக்கும்கிற‌து தெரிஞ்சு போச்சா ,ஏன்  ?''
                ''அருமை மனைவி ,பாலுக்குப் பதிலா பீர் பாட்டிலைக் கொடுத்து ,எனக்கும் பாதி மிச்சம் வைங்கன்னு சொன்னாளே!''
ருசியைத் தேடுதோ நாக்கு :)
             ''அந்த ஹோட்டல் சாப்பாடு 'ஹோம்லி மீல்ஸ் ' மாதிரியே இருந்ததா ,பரவாயில்லையே !''
             ''அட நீங்க ஒண்ணு,உப்புமில்லை ,உறப்புமில்லைன்னு  சொல்ல வந்தேன் !''

மாப்பிள்ளை தங்கக் 'கம்பி 'யாச்சே :)
               ''மாப்பிள்ளைப் பையன் நடத்தை எப்படி ?''
                ''கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தாலும்  நன்னடத்தைக்காக ஒரு வருஷம் முன்னாடியே ரிலீஸ் ஆயிட்டார்னா நீங்களே பார்த்துக்குங்க !''

லவ்  லெட்டரெல்லாம்  ஓல்ட் பேஷன்:)
                ''டாக்டரை ஏண்டா காதலித்தோம்னு இருக்குடி ?''
                 ''ஏண்டி ?''
                ''லவ் லெட்டர்லே என்ன எழுதி இருக்கார்னு புரிய மாட்டேங்குதே !''
..................................................................................................................................
பிரசுரித்த குமுதம் இதழுக்கு  நன்றி !

மாற்றம் மனைவியின் உருவிலா ?கணவனின் சலிப்பிலா ?
ரூபாவதியாய்  காட்சி  தந்தவள் ...
மோகம் முப்பது ,ஆசை அறுபது  நாளுக்குப் பின் ... 
ரூப அவதியாய் !

24 comments:

 1. //''நடுக்கடலில் சரக்கு கப்பல்கள் மோதலாமே !''///

  அடப்பாவிங்களா இதை சாக்காக வைத்து சரக்கு விலையை ஏத்திடா திங்கடா

  ReplyDelete
  Replies
  1. நல்ல கவலைதான் :)

   Delete
 2. //அருமை மனைவி ,பாலுக்குப் பதிலா பீர் பாட்டிலைக் கொடுத்து ,எனக்கும் பாதி மிச்சம் வைங்கன்னு சொன்னாளே!'///

  தான் குடிட்துவிட்டு மீதியை கணவணுக்கு கொடுக்காமல் அந்த காலப் பெண்கள் போல கணவன் சாப்பிட்ட இலையில் சாப்பிடுவது போல அவர் குடித்த பாட்டிலில் தானும் குடிக்கனும் என்று சொல்லும் மனைவி வாய்ச்சதுக்கு அந்த கணவன் கொடுத்து வைதிருக்கணும்

  ReplyDelete
  Replies
  1. இவர்தான் உத்தம பத்மினியா ,இல்லை இல்லை ,உத்தம பத்தினியா:)

   Delete
 3. //லவ் லெட்டர்லே என்ன எழுதி இருக்கார்னு புரிய மாட்டேங்குதே !''//

  இங்க கொடு அதை நான் படித்து சொல்லுகிறேன் என்று அந்த கடிதத்தை வாங்கி படித்த மதுரைதமிழன் சொன்னது. அடி காதலியே என் எழுத்தை போலவே உன் முகமும் அழகாக இருக்கிறது என்று உன் காதலன் எழுதி இருக்கிறாரம்மா

  ReplyDelete
  Replies
  1. காதலி முகம் கோழிக் கிண்டிய மாதிரி இருக்கு ? அப்புறம் எப்படி காதலித்தாரோ :)

   Delete
 4. கேப்டனும் 'சரக்கை ' ஏற்றிக் கொண்டு தள்ளாடுவது இப்பொழுதா நடக்கிது... ? போதாதற்குக் கப்பல் சரக்கை ஏற்றிக் கொண்டு இருக்கிறது... தள்ளாடாமல் என்ன செய்யும்...?!

  பீர் முகமதைக் கல்யாணம் கட்டிக்கிட்டா இப்படித்தான் கவனிப்பு இருக்குமோ...?! மாப்பிள்ளைக்கு ஏன் குபீர்ன்னு வியர்க்கிது...?!

  இந்த ஹோட்டலுக்கு வர்றங்க எல்லாம் ‘பிரசர்’லதான் வர்றாங்கன்னு தெரியுமுல்ல...! எல்லாம் வீட்டு பிரசர்தான்...!

  அப்ப அந்த முதிர் இளைஞன் போய்ச் சேர இன்னும் ஒரு வருஷம்தான்னு சொல்லுங்க...!


  எனக்கும் இதே மாதிரி புரியாமத்தான் எழுதிக் கொடுத்தாரு... என்னான்னு கேட்டப்ப நான் செகன்ட் ஒய்ப்பாம்... நீ எத்னாவதுன்னு பாரு...?!

  வர(ன்) தட்சணை கொடுத்து... கணவனை விலைக்கு வாங்கினால் அவதிதான்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. நீங்க உண்மையான் கேப்டனேத் தானே சொல்றீங்க :)

   பொண்ணு பெயர் மதுபாலாவாம் ,யோசிக்க வைக்கும் பெயர்தான் :)

   காரசாரமா இருக்க வேண்டாமா :)

   ஆயுள் தண்டனையே பதினான்கு வருஷம்தானாமே:)

   இத்தனை சேனல் இருந்தால் எதை ரசிப்பாரோ :)

   விலைப் போனவனுக்கு இது தேவைதான் :)

   Delete
 5. மாப்பிள்ளையின் நடத்தை ஜோக் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. பொண்ணும் திருச்சி மகளிர் சிறையில் இருந்தவராமே ?பொருத்தம் சரிதானே :)

   Delete
 6. Replies
  1. கருத்து சொல்லாமல் முதலில்செய்த நல்ல காரியத்துக்கு நன்றி ஜி :)

   Delete
 7. இணைத்த படமும் போதை ஆகி விட்டதே...!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா?எனக்கு அந்த அனுபவம் இல்லையே :)

   Delete
 8. பணிநிமித்தம், பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு. அதனால் உங்கள் கையில் ‘சரக்கு’ (ஜோக்குகள்)இருந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் உள்ளே ஃ போர்மேன் பணி பார்க்கும் எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை !சரக்குக்கு காரணம், தேடல்தான் :)

   Delete
 9. ஸூப்பர் முதலிராஆஆஆவு

  ReplyDelete
  Replies
  1. யார்க்கும் இது போன்று முதலிரவு வந்ததல்லடின்னு பாடுவாங்களோ:)

   Delete
 10. கேப்டன் என்ன செய்வார் கப்பலிலே இருந்தது சரக்கல்லவா
  பீர் கொடுத்தவள் பாக்கியசாலி
  ஹோம்லி மீல்ஸ் என்றாலேயே உப்பும் உறைப்பும் இருக்காதோ
  ப்ரிஸ்க்ரிப்ஷனை லவ் லெட்டெர் என்று நினைக்கலாமா
  ஆயுள் எப்போது முடியும் என்று தெரியாததால் தான் முன்னாலேயே அனுப்பி இருப்பார்கள்
  அறுபது நாளில் ரூப அவதியாவது கண்ணில் ஏதோ கோளாறு என்பதால் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. இவர் ஏற்றிக் கொண்டது வேறு சரக்காச்சே :)
   இதுவும் நல்லாயிருக்கே :)
   அப்படித்தான் செய்கிறார்கள் :)
   வாய் வார்த்தையுமா பொய்யா போகும் :)
   தலைவரின் நூற்றாண்டு விழாவென்று வெளியே விட்டிருப்பார்களோ :)
   மனதில் சலிப்புதான் இப்படி கண் கோளாறா மாறியிருக்கும் :)

   Delete
 11. குடித்தனத்தில்
  நீ பாதி, நான் பாதி
  நல்ல ஏற்பாடு

  ReplyDelete
  Replies
  1. இவர்கள் அல்லவா ஆதர்ஷ தம்பதிகள் :)

   Delete
 12. ''கோவில் கருவறையிலும் CCTV கேமராவை மாட்டி வைச்சுருக்காரே !''//

  சாமி தலையில்கூடக் கேமராவைப் பொருத்துவார்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. சாமிக்கும் கலிகாலமோ :)

   Delete