6 February 2017

'ஹனி மூனை ' கவச உடையில் கொண்டாட முடியுமா :)

 பேரிடர் மேலாண்மைக்  குழு செயல்படும் லட்சணம் :)         
              ''எதுக்குங்க ,நாலு வாளி வாங்கிட்டு வந்திருக்கீங்க ?''
             '' கடல்லே கொட்டி இருக்கிற எண்ணையை அள்ளுறதைப் பார்த்தா ,தமிழ்நாட்டிலே வாளி பஞ்சம் வந்திடும் போலிருக்கே !''

நல்ல வேளை,உடனே டாக்டரை பார்த்துட்டார் :)
           ''என்ன சொல்றீங்க ,நாவலின் பத்தாவது பக்கம் புரட்டியவுடன் ,உங்களுக்கு  மூச்சுத் திணறல்  ஏற்பட்டதா  ?''
           ''ஆமாம் டாக்டர் , அந்த த்ரில்லர் நாவலை 'ஒரே மூச்சில் ' வாசிக்க முயற்சித்தேன் !''

இனிமேல் ,வாங்கித் தர யோசிப்பாரோ :)
              ''ஐம்பதாயிரம் செலவு பண்ணி  உனக்கு  நெக்லஸ்  வாங்கி இருக்கேனே ,அப்புறமும் என்ன நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறே  ?''
              ''உங்களை வாங்கறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே ,இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''

பிள்ளைக்கு தாய்ப்  பால் கொடுக்கலைன்னு இப்ப குத்தலா?
             ''நேற்றைக்கு உன் புருசனோட என்னடி சண்டை ?''
            ''போராட்டம்னு தரையிலே பாலைக் கொட்டுறது அநியாயம்னு சொன்னேன் ...அதுக்கு அவர் 'தாய்ப் பாலைக்  கொடுக்காம  ,நீ வேஸ்ட் செய்ஞ்சது மட்டும் நியாயமா 'ன்னு  கேட்குறார்டி!''

போலியை பேச்சிலேயே கண்டுபிடுச்சிடலாம் :)
                ''அவரை,  போலி  டாக்டர்னு சொல்றீயே ,ஏன் ?''
               ''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா , பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''

'ஹனி மூனை ' கவச உடையில் கொண்டாட முடியுமா :)
நிலவுக்கு சென்று வர  பணம்  இருந்தாலும்கூட  
ஹனி MOONனை பூமியில்தான்  கொண்டாட முடியும் ! 

14 comments:

 1. ‘தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை எண்ணெய்த் தண்ணீரில் மிதக்க வைத்தான்...’ வாளி இருந்தாலும் வாலி இல்லையே...!

  நல்ல வேளை மூச்சு முட்டவில்லை...!

  ‘அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சாப் பறக்கவிடும் ஆளை...!’ இதன் விலை அஞ்சு இலட்சம்தான்... நான் தான் இந்த கருப்பனை வாங்கி இருக்கேன்...?!

  தாய்ப்பாலுக்குத்தானே சக்தி அதிகம்... ‘சக்தி கொடு...’!

  ‘பூப்பூவாய்ப் பூத்திருக்கு, பூவிலே சிறந்த பூ என்ன பூ?’ குவளை பூவா...?! கண்ணில பூவைப் போட்டுட்டாங்க...!

  ஏன் அப்படி...? மாத்தி யோசிங்க...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் வாலி கூட இப்படி பொருத்தமாய் நினைத்து பார்த்திருக்க மாட்டார் :)

   முட்டியிருந்தால் கீழே விழுந்திருப்பாரே :)

   ஜல்லிக்கட்டு மாட்டு விலை மாதிரியிருக்கே:)

   குழந்தைக்குத் தானே :)

   கண்ணிலே குவளைப் பூ விழுந்தாலும் கவலைதான் :)

   முதலிரவு அறையின் விட்டத்தில் ரேடியத்தில் நிலவை வரைந்து விடலாமா :)

   Delete
 2. மனைவி கணக்கிலே புலி போல...?

  ReplyDelete
  Replies
  1. இல்லைன்னா இவரோடு வாழ முடியுமா :)

   Delete
 3. Replies
  1. கவச உடை நல்லாயிருக்கா :)

   Delete
 4. போலி டாக்டர் ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை .பூ கெட்டுப் போனால் கண்ணுக்கு ஆபத்துன்னு சொல்லாமல் போனார் :)

   Delete
 5. சில முன்னே படித்தது போல் இருக்கிறது ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ,நீல நிறத்தில் வருவது மட்டுமே அப் டேட் :)

   Delete
 6. ஒரே மூச்சில் எல்லாம் படித்து ரசித்து மூச்சு வாங்க போலி டாக்டர்கிட்ட மாட்டிக்கிட்டோம் ஜி!!!ஜோக்காளிதான் காப்பாத்தணும்!!!

  ReplyDelete
  Replies
  1. நாலு வாளியோட எண்ணூருக்கு வாங்க,கடலே வற்றும் அளவுக்கு நல்ல காரியம் செய்வோம் :)

   Delete
 7. ஹும் போலி டாக்டர்கிட்ட மாட்டிக்கிட்டதும் ஏன் மூச்சிரைக்குதுனு கேட்டாரு.."பின்ன ஜோக்காளி வைர நெக்லஸ் ஜஸ்ட் 50ஆயிரம்தான்னு போட்டா அவ்வளவுதானானு மூச்சு பிடிச்சுடுக்கிட்டு" அப்படின உடனே போலி டாக்டர் அப்ப என் ஃபீசும் ஜஸ்ட் 50ஆயிரம்தானு சொன்னா போலி டாக்டர்தானே ஜோக்காளி??!! அதான் ஜோக்காளிதான் காப்பாத்தனும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ,லாஜிக் இடிக்குதா ?வைரத்தை நானே தூக்கிட்டேன் ,இப்போ சரிதானே ஜி :)

   Delete