8 February 2017

மனைவிக்கு இப்படியுமா சந்தேகம் வரும் :)

பயபிள்ள நல்லா வருவானா :)
         ''மூக்கு கண்ணாடியை ஏண்டா ஃ பிரிஜ்ஜிலே வைக்கிறே ?''
          ''கூலிங் கிளாஸ் ஆகட்டும்னு தான் !''
கணக்கிலே புலி ,நம் கேஷியர்:)
            ''நம்ம கேஷியர் ஒரு மாச லீவாவது உறுதியா எடுப்பாரா  ,ஏன் ?''
            ''தலை வலின்னு ஒரு நாளும் ,கால் வலின்னு ரெண்டு நாளும் லீவு போட்டவர் ,இப்போ பல் வலின்னு லீவு கேட்டிருக்காரே !''

இதுக்குத்தான்  பழகவிடக் கூடாதுன்னு சொல்றது :)
               ''டாக்டர் ,உங்களுக்கும் வயிறு எரியுதா ,பேஷண்ட் எவனும் பீஸ் கட்டாம ஓடிப் போயிட்டானா ?''
          ''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போயிட்டானே !''  

மனைவிக்கு  இப்படியுமா சந்தேகம் வரும் :)         
         ''உன் மனைவி எப்பவும் உன்னை சந்தேகப்படுறாளா ,ஏன்?''
        ''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு சொன்னா 'நான் இங்கே இருக்கும் போது எந்த சிறுக்கி உங்களை நினைக்கிறா 'னு கேட்கிறாளே !''

ஜோதிடருக்கே நேரம் சரியில்லை :)
             ''சித்த மருத்துவரே ஜோதிடரும் ஆனார் சரி ,ஜெயிலுக்கு ஏன் போனார் ?''
            '' என் புதிய கண்டுபிடிப்பு 'சகல தோஷ நிவர்த்தி மாத்திரை 'ன்னு  மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டாராம்  !'

தலைவலி வரலாம் ,ஆனா வரக் கூடாது :)
தலைவலி வந்தால் நாம 'பாமை 'தடவிக்குவோம் !
'பாம் வெடிக்கும் 'ன்னா போலீசுக்கு தலைவலி ,
நம்ம எல்லாரையும் தடவ ஆரம்பிச்சுடுவாங்க ! 

20 comments:

 1. ரசித்தேன் ஜி. தம இன்னும் இன்னும் சப்மிட் ஆகவில்லையே...

  ReplyDelete
  Replies
  1. தம வாக்களிக்க வந்தேன். அது சுற்றிக்கொண்டே இருக்கிறது!!

   Delete
  2. தமிழ் ம(ர)ணத் திரட்டி ஆகிப் போச்சா :)

   Delete
  3. இன்று முதல் தமிழ் மணம் திரட்டி செயல்படத் தொடங்கி விட்டதே ,இது நீடித்தால் நல்லது :)

   Delete
 2. கண்ணா(ட்)டி கூலா இருக்கனுமுல்ல... ‘ஜில்’ன்னு ஒரு காதல்...!

  கேஷியரோட சின்னம்மா சொல்றாங்க...“ஒரு மாசம்தானாம்...!”

  அப்பத்தானே... இலவசமா பார்க்க முடியும்... மருத்துவம்!

  சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்... சிறுக்கி சிறுக்கி மக தானா போன டோய்...!

  சித்த மருந்தைச் சாப்பிட்டவர்கள் சிவலோக பதவி அடைந்து விட்டார்களாம்...! இதனால்தான் சித்தன் போக்கு சிவன் போக்குன்னு இருந்த சித்த மருத்துவர் இன்று கம்பி எண்ணுகிறார்...!

  தடவத் தடவ ஒருத்தலை(வி)வலிதான்...!

  த.ம. + 1
  ReplyDelete
  Replies
  1. அதான் ,வீட்டை ஏசி பண்ணிக் கொடுத்திருக்காரா:)

   அவங்க சொன்னா பத்து மாத பந்தமாச்சே :)

   டாக்டர் நிறைய காசைப் பிடுங்கியதால் இந்த ஐடியாவா :)

   சிறுக்கிக்கு நிரந்தர விலாசம் இல்லையா :)

   அவர் கவலை எப்படி நிவர்த்தி ஆகுமோ :)

   எதிர்பாலினம் தடவலைங்கோ :)

   Delete
 3. Replies
  1. நர்சையும் தள்ளிக்கிட்டு போன கொடுமையை ரசிக்க முடியுதா ஜி :)

   Delete
 4. முகம் பார்க்கீம் கண்ணாடியையும் வைக்கலாமா ஜி ?

  ReplyDelete
  Replies
  1. வைக்கலாமே ,அதில் பார்க்கும் முகமும் கூலாய் தெரியக் கூடும் :)

   Delete
 5. அருமை அருமை அத்தனையும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. சகல தோஷ நிவர்த்தி மாத்திரை உங்க ஊர்லே கிடைக்குதா :)

   Delete
 6. ரசித்தேன்நண்பரே
  தம முயன்று கொண்டே இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளீர்கள் ,வாழ்த்துக்களுடன் நன்றி :)

   Delete
 7. Replies
  1. கூலிங் கிளாஸ் நல்ல கூல்தானே :)

   Delete
 8. ஃப்ரீஸ் ஆனால் உடைய வாய்ப்புண்டு
  இருக்கும் பல்லைப் பொறுத்தது
  டாக்டருக்கு இந்த நர்ஸ் போனால் இன்னொருத்தி
  எப்பவுமா புரை ஏறுகிறது
  இம்மாதிரி ஜோதிடர்களை நம்பி ஏமாற ஒரு கூட்டம் உண்டே
  நம்தலைகள் பிறர் தடவவே இருக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. திரவம் திடமாகும் ,திடப் பொருள் உடைந்து விடுமா :)
   சரி ,இரண்டைக் குறைத்து கொள்ளுங்க :)
   உன்னை விட்டால் யாருமில்லைன்னு புலம்புறாரே :)
   ஏறும்போது இப்படி வசனம் வருகிறதே :)
   அதுக்கு நம்ம ஊர்லே பஞ்சமேயில்லை :)
   ஜனநாயக நாடாச்சே :)

   Delete
 9. மிகவும் நன்றாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. கூலிங் கிளாஸ் பாவையும்தானே :)

   Delete