31 March 2017

ராத்திரி 12 மணிக்கு முன்னாடி ஒருமுறை ,பின்னாடி ஒருமுறை :)

 படித்ததில் இடித்தது :)
              ''இந்த  நடிகையைப் பார்த்தால் 'செம கட்டை'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'செம்மரக் கட்டை'ன்னு சொல்லத் தோணுதா ,ஏண்டா ?''
                ''செம்மரக் கடத்தலில் இவங்க கைதாகி இருக்காங்களே !''
இடித்த செய்தி ....நடிகை சங்கீதா சட்டர்ஜி கைது!

இப்படியும் நல்ல குணம்  வருமா :)           
             ''  மாசம் பிறக்கிறதுக்கு முன்னாடியே ,வாடகையை நாணயமா கொடுக்கிற உங்க பையனை எப்படி பாராட்டுவது என்றே தெரியலே !''
            ''அவன் பிறந்ததே வாடகைத் தாய் வயிற்றிலாச்சே ,இதிலே  ஆச்சரியப்பட என்னாயிருக்கு  ?'' 

ராத்திரி 12மணிக்கு முன்னாடி ஒரு  முறை ,பின்னாடி ஒருமுறை :)               
            ''விடிஞ்சா நாற்பதாயிரம் வேணும்... ஏடிஎம் கார்டில் ஒரே நேரத்தில்  பணம் எடுக்க முடியாது ,என்னடி பண்ணச் சொல்றே ? ''  
           ''ராத்திரி 11.59 க்கு  2௦ஆயிரமும்,12.01 க்கு  2௦ ஆயிரமும் எடுக்கலாம் ,இப்பவே ஒடுங்க !''

இருமனம் இணைவது திருமணம் தானே :)
             ''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே ?''
             ''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''

கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் :)
             ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
              ''டாக்டர் ,நான் வந்திருக்கிறதே கலரே தெரியலைன்னுதானே ?''

சப்பாத்தி போடுமா  சாப்ட்வேர் :)
    அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
    அழகான  வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
    கேட்டது MCA முடித்த கல்யாண வயது அருமை மகள் ! நடிகை சங்கீதா சட்டர்ஜி கைது!

16 comments:

 1. ஏ டி எம் யோசனை அற்புதமான யோசனை!

  ரசித்தேன் அனைத்தையும்.

  ReplyDelete
  Replies
  1. இப்படியே எல்லாரும் வந்தா எடுக்க முடியுமா :)

   Delete
 2. ஏ.டி.எம் வாசலில் இதுக்குத்தான் கூட்டம் கூடுதோ...

  ReplyDelete
  Replies
  1. ராத்திரி அவசரம் :)

   Delete
 3. நல்ல கட்டை நாட்டுக் கட்டை நம்ம கிட்ட மாட்டிக்கிட்ட...!

  கருவோடு வந்தது... தெருவோடு போகுமா என்ன...?! தொட்டில் பழக்கம்...!

  ஏ.டி.எம்.-ல பணம் இருக்கு... ஆனா எடுக்க முடியல... எனக்கு ஒரு சந்தேகம்... நம்ம கணக்கில பணம் இருக்கனுமா...?!

  ஒன்னுமே தெரியல... உலகத்திலே...!

  சப்பாத்தி சாப்டா இருக்குமா...?! இருக்காதா...?!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. எத்தனை நாள் ஏமாற்ற முடியும் :)

   கருவறை கடைசி வரை :)

   முயற்சியை விடாதீங்க :)

   கஷ்டம் தான் கலர் தெரியாட்டி :)

   பசி போனால் சரிதான் :)

   Delete
 4. நகைச்சுவையில்யோசனைமகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. யோசனை செயல் படுத்தும் அளவுக்கு நெருக்கடி வராவிட்டால் எனக்கும் சந்தோஷமே :)

   Delete
 5. எல்லாமே ரசிக்கக் கூடியவை

  ReplyDelete
  Replies
  1. ஆனால் ரசிப்பார்களா என்றுதான் தெரியவில்லை :)

   Delete
 6. ஆகா.....அருமை..இதைத்தான் மனைவி சொல்லே மந்திரம் என்றார்களோ...???

  ReplyDelete
  Replies
  1. மந்திரம் இல்லை இது 'புருஷனை விரட்டும் தந்திரம் இது :)

   Delete
 7. ....ஏ டி எம் ஆஹா.....அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. காரியம் ஆகணும்னா இரவாவது ,பகலாவது :)

   Delete
 8. அந்த நடிகை அமெரிக்கா வரமாட்டாங்களா?

  ReplyDelete
  Replies
  1. #சீனா, நேபாளம், ஜப்பான் நாடுகளை சேர்ந்த பலரை ஆந்திர போலீஸார் கைது செய்து, பதுக்கி வைத்திருந்த செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்#
   இதைப் பார்த்தால் அவருக்கு அமெரிக்காவில் யாருடனும் தொடர்பு இல்லை போலிருக்கு !அது சரி ,நீங்க எதுக்கு அங்கே வரணும்னு எதிர்பார்க்கிறீங்க :)

   Delete