10 March 2017

நம்பிக்கை மோசடி செய்த ராசி பலன் :)

கொழுப்பு ஜாஸ்தி ,குடும்பத்தில் எல்லோருக்கும்  :)                      
           ''பொறித்த அப்பளம் எங்கே கிடைக்கும்னு ஏன் கேட்கிறீங்க ?''                                                 ''வீட்டிலே எண்ணெய் வாங்குவதை டாக்டர் விடச் சொல்லிட்டாரே !''

இந்த குணம் , புருஷ லட்சணம் ஆகுமா :)
       'செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு உன் புருஷன் ஏன் சொல்றார் ?''

      ''கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

செவப்பா இருந்தா மார்பிள் சிலைன்னே சொல்லலாம் :)
           ''கடவுள் ஏன் கல்லானார் ?''
          ''இதென்ன கேள்வி ,கல்லுலே செய்ஞ்சாங்க கல்லா இருக்கார் !''

நம்பிக்கை மோசடி செய்த ராசி பலன் :)
            ''உங்களுக்கு  போன வார ராசி பலன்லே 'கையிலே காசு கொட்டும்'னு இருந்ததே ,பலிச்சதா ?''
            ''உள்ளதும் போனதுதான் மிச்சம் ,அது 'காலை 'வார்ற ராசி பலனாப் போச்சு !''

கிரிக்கெட்டிலும் ஆணாதிக்கமா  :)
ஆண்கள் ஆடும் கிரிக்கெட்டின்  , நடுவில் ஆடும் 'சியர்ஸ் கேர்ள்ஸ்'களை ரசிக்கப்படும்  அளவுக்கு கூட ...
பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை பெண்களே ரசிப்பதாக தெரியவில்லை !

28 comments:

 1. கடவுள் கல்லாகிட்டாரா ?

  ReplyDelete
  Replies
  1. கல்லாக இருக்கத்தான் பலரும் விரும்புகிறார்கள் :)

   Delete
 2. அது நம்பிக்கை மோடி செய்த ராசி பலனாக இருக்குமோ...?

  ReplyDelete
  Replies
  1. மோடி வித்தை என்று சும்மாவா சொல்வார்கள் :)

   Delete
 3. நோயாளி பயங்கர சின்சியர் போல இருக்கே... டாக்டர் சொல்வதை அப்படியே கேட்கிறாரே!

  ReplyDelete
  Replies
  1. எதுக்காக எண்ணெய் வேண்டாம்னு டாக்டர் சொல்லவில்லை போலிருக்கே :)

   Delete
 4. வறுத்த மீன் கடைக்குப் பக்கத்திலே கிடைக்கும்...!

  செருப்பு பிஞ்சிடும்...!

  கல்லுளி மங்கனா இருக்கானே...!

  இராசி பலிக்கனுமுன்னு கோயில்ல கையேந்தி வேண்டினேன்... கை மேலே காச வீசிவிட்டுப் போனார்கள்...!

  பெண்கள் ஆடினால்தான் இரசிப்பார்கள்... ஆடவரெல்லாம் ஆடவரலாம்...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. வருத்தப் படாம வாங்கி சாப்பிட்டா போச்சு :)

   பரவாயில்லை ,அடுத்து ஒரு கல்யாணம் வராமலா போயிடும் :)

   இருந்தாலும் பாலாபிஷேகம் தேனாபிஷேகம் நடக்குதே :)

   பண்டாரம் மாதிரி தோற்றத்தில் இருந்தால் காசு விழத்தானே செய்யும் :)

   பெண் அனாட்டமி டிசைன் அப்படியோ :)

   Delete
 5. ரசித்தேன் நண்பரே
  தம முயன்று கொண்டேஇருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஒரு வாக்கு விழுந்தாலே இருபது தடவை உங்களின் பெயரைக் காட்டுகிறது தமிழ் மணம்,இது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை :)நீங்களே கூட அதை பார்க்கலாம் நண்பரே !

   Delete
 6. வணக்கம்
  ஜி
  இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மட்டைப் பந்திலும் ஆணாதிக்கம் இருப்பது உண்மைதானே :)

   Delete
 7. Replies
  1. கற்சிலையை விட சலவைக் கற்சிலை அழகுதானே :)

   Delete
 8. ராசி பலனே மோசடிதான்... இதுல நம்பிக்கை வேறா

  ReplyDelete
  Replies
  1. நமக்கு தெரியுது ,காலையில் எழுந்ததும் காலண்டர் காட்டும் ராசி பலனை பார்கிறவர்களும் இருக்கிறார்களே :)

   Delete
 9. அதுதான் கொழுப்பு அதிகம் என்று சொல்லி விட்டீர்களே
  அதுவரை வெறுங்கால்களில் தானா
  ஃபொட்டோவில் வந்தால் என்ன செய்ய. எப்படிச் சொல்ல
  கையில் இருக்கும்காசு கொட்டிப் போகும் என்றிருக்கும்
  அதுசரி ஏன் சீய்ர் பாய்ஸ் இல்லை

  ReplyDelete
  Replies
  1. இப்படி திருட்டுத் தனமா அப்பளம் சாப்பிட்டா கொழுப்பு அடங்குமா :)
   படிதாண்டா பத்தினியாய் இருக்கச் சொல்றாரே :)
   சாமியே இல்லையா , போட்டோ சாமி இல்லையா :)
   நல்ல வேலை வங்கி இருப்பை சொல்லலே :)
   பாய்ஸ் ஆட்டத்தை பார்க்க ஆளில்லையே :)

   Delete
 10. Replies
  1. மோசடி ராசி பலனையுமா :)

   Delete
 11. கல்லுலே செய்ஞ்சாங்க கல்லா இருக்கார் !''//

  கலக்கல் ஜோக் பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. சுயம்பு என்பதெல்லாம் ரீல் தானே :)

   Delete
 12. கல்லுலே செய்ஞ்சாங்க கல்லா இருக்கார் !''//

  கலக்கல் ஜோக் பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. செய்யப் பட்டவர், நம்மை உருவாக்கி இருக்க வாய்ப்பில்லைதானே :)

   Delete
 13. பரவாயில்லையெ டாக்டரின் சொல் கேட்கும் நோயாளியும் இருக்காங்களா...

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் சொல்வதையும் கேட்கணும் ,நாக்குக்கும் பதில் சொல்லணும்னா இப்படித்தானே செய்யணும் :)

   Delete
 14. Aaha!......''கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

  அனைத்தும் ரசித்தேன் சகோதரா.
  தமிழ் மணம் 11
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. இப்படிப் பட்டவர் மொய் வைப்பார் என்றா நினைக்கிறீர்கள் :)

   Delete