11 March 2017

கள்ளத் தொடர்புக்கு இந்த தண்டனை சரிதானே :)

பகல் வெளிச்சம் போல் வராதோ  :)                                                                    
           ''கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கி இருக்கே ,நீதி மன்றத்தில் ,ஏன் நைட் ஷிப்ட் போட்டு விசாரிக்க மாட்டேங்கிறாங்க ?''
           ''சட்டம் ஒரு இருட்டறையாச்சே !''

மனைவி மாவு வாங்கி வரச் சொல்லும் காரணம் :)
            ''உங்க மனைவி  தோசை மாவு பாக்கெட் தானே வாங்கி வரச் சொல்றாங்க ,ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''

             ''வாங்கி வந்தா ,நீங்களா தோசை சுட்டுத் தருவீங்க ?''

கள்ளத் தொடர்புக்கு இந்த தண்டனை சரிதானே :)
       ''நம்ம ராஜா ,ராணிக்கு சிரச்சேதத் தண்டனைக் கொடுத்துட்டாரா ,ஏன் ?''
       ''மந்திரி வேஷத்தில்  அந்தப்புரம் போன ராஜாவை  'வாங்க மந்திரியாரே ,வந்து ரொம்ப நாளாச்சே 'ன்னு ராணி  வரவேற்றாங்களாமே!''

கஞ்சப் பிசினாறிக்கு கண்ணாடி எதுக்கு :)
         ''தூரத்தில் வர்ற பஸ் நம்பர் தெரியலைன்னா கண்ணாடி வாங்கி மாட்டிக்க வேண்டியதுதானே ?''
          ''பஸ் பக்கத்திலே வராமலா போயிடும் ?நம்பர் தெரியாமலா போயிடும் ?''

செல் இல்லையெனில் பைத்தியமாகக் கூடுமோ :)
     செல்போனும் காதுமாகவே இருப்பவரைப் பார்த்தால் ...
     கர்ணனின் நினைவுதான் வருகிறது ...
     பிறக்கும் போதே கர்ணனின் காதில் கவசக் குண்டலம் இருந்ததாம் !

30 comments:

 1. Aaha!.... ''சட்டம் ஒரு இருட்டறையாச்சே !''
  ''.வாங்கி வந்தா ,நீங்களா தோசை சுட்டுத் தருவீங்க ?''..Ha!...ha!....
  Athu thaane .....''பஸ் பக்கத்திலே வராமலா போயிடும் ?நம்பர் தெரியாமலா போயிடும் ?''
  கவசக் குண்டலம் ...nanru..nanru....sitippuththaan.....rasiththensakothara..
  Tamil manam - 2

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் சொல்லப் போனால் இரவிலும் நீதித் துறை செயல்பட்டால் நல்லது :)
   சுடும் வருத்தம் இருக்கத்தானே செய்யும் :)
   பொறுமைசாலிக்கு கண்ணாடி எதுக்கு :)
   தொங்கு மாடல் செல் வந்தால் நல்லது :)

   Delete
 2. அன்று
  கர்ணனின் காதில் கவசக் குண்டலம்
  இன்று
  நம்மாளுங்க காதில் (செல்போனோ) நடைபேசியோ?

  ReplyDelete
  Replies
  1. பெற்றவங்க பேச்சுகூட பிள்ளைங்க காதுலே ஏற மாட்டேங்குதே ,இந்த செல் கொடுமை :)

   Delete


 3. //''உங்க மனைவி தோசை மாவு பாக்கெட் தானே வாங்கி வரச் சொல்றாங்க ,ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''
  ''வாங்கி வந்தா ,நீங்களா தோசை சுட்டுத் தருவீங்க ///

  பேசாமல் அவர் தோசையையே நேரடியாக ஹோட்டலில் இருந்து வாங்கி வந்திடலாமே

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு மேலிட உத்தரவு கிடைக்க வேண்டுமே :)

   Delete
 4. நீதிபதிகளை நியமிக்க வேண்டுமே...! நியமித்தால்... பிறகு ஷிப்ட் போட்டு யோசிப்பார்கள்... நிறைய குமரன்கள்... சாமி வடிவத்தில் வந்து நின்று கொல்லுவார்கள்... நீதியை...! உயிரோடு இருக்கையில் விரைவில் தீர்ப்பு வந்து விடுமே...! இருபது வருடம் வழக்கை இழுத்தடிக்க முடியாதே...! ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்...!’

  ‘ஆசை... தோசை... அப்ளளம்... வடை...!’ சுடச்சுட...சுட்டுத் தள்ள வேண்டுமே...!

  ராஜா வேஷத்தில்தான் மந்திரி உள்ளே இருக்கிறாரே...! இந்த ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்... அவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள்... இவை காணாது நீயின்றித் தீராதென்றான்...’ இன்று கணக்குத் தீர்ந்தது...!

  நெம்பர் எல்லாம் தெரியுது... எண்ணா நெம்பர்ன்னுதான் தெரியல...! ஆமா... நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி சும்மா தகதகன்னு சிகப்பா இருக்கீங்க...! ஆமா... பஸ்ஸு கூட்டமா வருது...?!

  காது கொடுத்துக் கேட்டால் ‘குவா... குவா... வ்வா... வ்வா...!’ சத்தம்...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. வழக்கு தொடரப் பட்ட மூன்று மாதத்துக்குள் தீர்ப்பு சொல்லப் பட வேண்டும் ஒரு சட்டம் போட்டால் நல்லது :)

   துப்பாக்கி கிடைத்தால் ஒரேயடியாய் சுட்டுத் தள்ளி விடுவாரோ :)

   அந்தப் புறத்தில் ஒரு மகராணி ....காமன் திருச்சபைக்கு வழி கேட்டால் ராஜா வழியனுப்பி வைத்து விட்டாரே :)

   சிகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானா ?சிகப்பா இருக்கிறதா நீங்களே பொய் சொல்றீங்களே:)

   இனி கணவனுக்கு கிட்டாது ,செல்போனுக்குத் தான் முத்தம் :)

   Delete
 5. Replies
  1. முறுகல் தோசை நல்லாயிருக்கா :)

   Delete
 6. Replies
  1. வெளிச்சத்தில் செய்ய வேண்டியதை இருட்டிலும் ,இருட்டில் செய்ய வேண்டியதை வெளிச்சத்தில் செய்யக் கூடாதா ஜி :)

   Delete
 7. ராஜா- மந்திரி ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. ராணியை ஏன் மறந்துட்டீங்க :)

   Delete
 8. Replies
  1. நீங்க தோசை மாவு பாக்கெட் வாங்கிட்டுப் போவதுண்டா ஜி

   Delete
 9. Replies
  1. வாங்க மந்திரியாரே ,வந்து ரொம்ப நாளாச்சே 'ன்னு ராணி வரவேற்றது ,அருமைதானா :)

   Delete
 10. நீதிக்குப் பகலிலேயே பசுமாடு தெரிவதில்லை. நைட் ஷிஃப்ட் போட்டால்,,,,,!
  எள் என்றால் எண்ணையாக இருக்கவேண்டாமா. தோசை மாவு வாங்கச் சொன்னால் தோசையாக வாங்கி வந்து பெயர் எடுக்கலாமே
  ராணிக்குக் கணவனுக்கும் மந்திரிக்கும் வித்தியாசம் தெரியலையோ
  விவரம் தெரிந்த மனிதர் பாராட்டுவதை விட்டு......
  காது பாக்கியம் செய்ததோ

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,நீதிபதிக்கும் சேர்த்து தண்டனை அறிவிக்கும் காலம் நெருங்கிக் கிட்டிருக்கே :)

   இப்படி விளக்கெண்ணை மாதிரி இருந்தால் விளங்குமா :)

   ஹோட்டல் அயிட்டம் எதுவும் ஒத்துக்காதாம் :)

   மாறு வேடம் அவ்வளவு கச்சிதமா இருக்கே :)

   அதானே ,எவ்வளவு விஞ்ஞானம் முன்னேறினாலும் திருந்தவா போறார் :)

   இந்த பாக்கியம் ரொம்ப நாள் நீடிக்காது :)

   Delete
 11. ரசித்தேன், சிரித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. கஞ்சப் பிசினாறிக்கு கண்ணாடி தேவையில்லை தானே :)

   Delete
 12. Replies
  1. அருமை செல்போனா ,கவசக் குண்டலமா :)

   Delete
 13. கஞ்சதனத்துக்குபஞ்சமில்லை

  ReplyDelete
  Replies
  1. இதைச் சொல்ல நெஞ்சில் வஞ்சகமுமில்லை :)

   Delete
 14. ப்சட்டம் இருட்டறை!! அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. இருட்டறையில் குருட்டுப் பூனைகளிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும் :)

   Delete
 15. பல ராணிகள வச்சுயிருக்கிற ராஜாவுக்கு தணடனை........????

  ReplyDelete
  Replies
  1. இப்படியெல்லாம் கேட்டால் ,உங்களுக்கும் சிரச் சேதத் தண்டனை கிடைக்கும் :)

   Delete