14 March 2017

காதலின் எல்லை எது வரை :)

காலத்துக்கு தகுந்தபடி மாறித்தானே ஆகணும் :)
             ''பென் டிரைவ் கிளி ஜோதிடம் சொல்றீங்களா ,எப்படி ?''
             ''ராசி அட்டைக்குப் பதிலா ,கிளி எடுத்துக் கொடுக்கிற பென் டிரைவை கணினியில் போட்டு நீங்களே கேட்டுக்கலாம் !''

அடச் சீ ,காதல் கடிதங்களை மகனை படிக்க விடலாமா  :)
           ''காதலிக்கிறப்போ  நான் எழுதிய கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
           ''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''

காதலின் எல்லை எது வரை :)
         ''இப்போ அழுது என்ன பிரயோசனம் ? உன் காதலன் உன்னைக்  'கை விட'  நீதான் முதல் காரணம் !''
           ''என்னடி சொல்றே ?''
          ''உன் மேலே கையை விட, அவனை அனுமதிச்சது நீ தானே ?''
நகரத்துப் பிள்ளைகள் வளரும் விதம் :)
            ''பால் எப்படி கிடைக்குதுன்னு , பையனிடம் கேட்டா 'டிப்போவில் இருந்துன்னு 'சொல்றான் !''
            ''உங்க  பையன் பரவாயில்லை ,என் பையன் 'வாசலில் தொங்க விட்டிருக்கிற பையில் இருந்து 'ன்னு சொல்றானே !''

கொசு அடிக்கவும் கத்துக்கணும் :)
பறந்து வந்து ...உடம்பின் மேல்  உட்கார்ந்து ...
கடி இடத்தில் 'லூப்ரிகேசன் 'செய்யும்  வரையிலும்  நமக்குத் தெரியாது ...
மெய் மறந்து ரத்தம் உ றிஞ்சும் கொசுவை அடிக்க வேண்டாம்  ..
மெதுவாக நசுக்கினாலே செத்துவிடும் ...
கொசு சொல்லும் பாடம் ...
பறப்பதை பிடிக்க நினைக்காதே !
சாதிக்க பொறுமை வேண்டும் !
மெய்   மறந்து இருக்கையில் ஆபத்து அதிகம் !

28 comments:

 1. பென் டிரைவ் பெண் எங்கு அமையும் என்பதையும் ஜொள்'ளுமா ?

  ReplyDelete
  Replies
  1. படிதாண்டா பத்தினியா இருப்பாளான்னுகூட கேட்பீங்க போலிருக்கே :)

   Delete
 2. கம்பியூட்டர் ஜோசியம்!

  நல்லதொரு குடும்பம்

  அது சரிதான்.

  ரெண்டாவது பையன் சூப்பர்!

  ம்ம்ம்...

  ReplyDelete
  Replies
  1. இதையும் கேட்க நாலு பேர் இருக்கத்தானே செய்கிறான் :)

   பல்லிளிக் கழகமா:)

   புத்திசாலியா நடந்துகிட்டா சரிதான் :)

   நல்லா வருவானா :)

   மெய் மறக்கக் கூடாதுதானே :)

   Delete
 3. மெய் மறந்து போயிட்டீங்க ஜி... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. கஷ்டமும் சுகமும் நாம் எதில் மெய்மறக்கிறோம் என்பதில்தானே :)

   Delete
 4. கிளி கிழிச்சதெல்லாம் போதும்... கிலியாக் கிடக்கிது... சப்பானிங்கிற பேருக்கு ஒரு பென் டிரைவ் எடுத்துப் போடு...! சீக்கிரம் கல்யாணமா... கருமாதியான்னா பார்ப்போம்...!

  என்னத்த எழுதுனீங்க... ‘ஐ லவ் யு’ன்னு எழுதுறதுக்குப் பதிலா... ‘ஐ லைவ் யு’ன்னு பத்து கடிதம் தப்பாஎழுதிக் கொடுத்தீங்க... அப்போதைக்கு மூனாங்கிளாசு பாஸ் பண்ணுனது நம்ப ஊர்லயே நீங்கதான்...! நான்தான் மூனாங்கிளாசு பெயிலே...!

  பலே... கை கொடுக்கும் கை...!

  விவரமே தெரியாம பையன்க இருக்காங்களே...!

  டங்கு... டங்கு...ன்னு போனா... டெங்கு வந்ததுதான் மிச்சம்...! இத்தனை சிறிய விதையிலிருந்து எத்தனை பெரிய மரம் வந்தது...?! ஆளையே கட்டையிலே தூக்க வைக்கிதே...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. சில பேருக்கு ரெண்டுமே ஒண்ணா வந்திடுதே :)

   தப்பா எழுதினாலும் சரியா புரிந்ததா இல்லையா :)

   தொடாம எப்படி காதலிக்கிறதுன்னு படத்தைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கணும் :)

   ஜல்லிக்கட்டுப் போராட்டமே விவரம் புரிய வைக்க நடந்ததுதானே :)

   மரம் வந்ததா ,சாய்ந்ததா :)

   Delete
 5. மெய் மறந்து போனால்! :)

  அனைத்தும் ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தியானத்தில் மெய் மறக்கலாமா ஜி :)

   Delete
 6. //காதலின் எல்லை எது வரை :)//

  ‘கை விட’...‘கையை விட’ -ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க இதிலே மெய் மறந்து விட்டீர்கள் போலிருக்கே :)

   Delete
 7. //காதலின் எல்லை எது வரை :)//

  ‘கை விட’...‘கையை விட’ -ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கை விடக் காரணம் கையை விட்டதுதானே :)

   Delete
 8. பால் கிடைக்கும் விதம்.. சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,மரத்தில் இருந்து பால் கிடைக்குதுன்னு சொல்லாம போனாங்களே :)

   Delete
 9. ஒரு குறிப்பிட்ட ரத்தம் உள்ளவரைதான் கொசு கடிக்குமாமே என் மனைவி கொசுக்கடி என்பாள் எனக்குத் தெரியவே தெரியாது
  பெண்ட்ரைவ் சோசியம் காஸ்ட்லியோ
  காதலிக்கும் போது எல்லாமே மொக்கைதான் என்று மகன் புரிந்து கொள்ள நாளாகும்
  காதலிக்கும் பொது கைவிட அனுமதி கூடாது
  பால் கிடைக்கும் விதம் இன்னும் இருக்கிறதே நல்ல காலம் அதைச் சொல்லவில்லை

  ReplyDelete
  Replies
  1. உங்களிக் கடித்தது மனக் கொசுவாக இருக்கும் , அதுதான் நம்மை மட்டுமே கடிக்கும் :)
   ஏமாளிக்கு காஸ்லியாவது,ஒண்ணாவது:)
   அவனுக்கும் அனுபவம் கிடைக்காமலா போய்விடும் :)
   ஆசையா பேசினாலே ஆபத்து என்கிறார்கள் ,கையும் பேசினால் ....:)
   அந்த(ரங்க) விதம் பையனுக்கு தெரிய நாளாகும் :)

   Delete
 10. நல்ல ஐடியா பெண் டிரைவ் ...ஜோசியம்
  நகைபணி தொடர்க
  தம

  ReplyDelete
  Replies
  1. விஞ்ஞான வளர்ச்சியை முட்டாள்கள் இப்படியும் பயன் படுத்திக் கொள்கிறார்களே !
   சாமி படமாம் ,அதை ஷேர் செய்தால் நினைத்தது நடக்குமாம் ,இப்படியும் முட்டாள்கள் சிலர் பேஸ்புக்கில் :)

   Delete
 11. காதல்கடிதம்நன்கு

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் படித்து விட்டீர்களா :)

   Delete
 12. Replies
  1. காதலின் எல்லை வரை சென்று ரசீத்தீர்களா :)

   Delete
 13. என்னது “கை விட”கையை விட அனுமதிச்சது காரணமா...????????

  ReplyDelete
  Replies
  1. இந்த காரணம் ஒன்று போதாதா :)

   Delete
 14. காதலின் எல்லை எது வரை
  ஆளுக்கு ஆள் கை போடும் வரையா?
  நம்மட இளசுகள்
  இது பற்றி எண்ணிப் பார்த்ததுண்டா?

  ReplyDelete
  Replies
  1. எல்லை மீறாமலே நம்ம மீனவன் படும் பாடு தெரிந்ததுதானே ?காதலில் எல்லை மீறினால் தொல்லைதான் :)

   Delete