15 March 2017

குறட்டை விடா மனைவி அமைவதும் வரம்தான் :)

 செருப்புக்குப்  பதிலா :)
               ''பாடகர்  ரோஷப் பட்டு கச்சேரியை  முடித்துக் கொண்டாரே, அப்படியென்ன  அவர் மேல்  வந்து விழுந்தது ?''
               ''காது கேட்கும் கருவிகள்தான்!''

வெள்ளையா இருந்தால் மோர்  :)
             ''என்ன கேட்கிறீங்க ,மஞ்சள் மோரை ஊற்றவா ?'' 
              ''நீ வச்ச மோர்க் குழம்பு அப்படித்தானே இருக்கு !''

 குறட்டை விடா மனைவி  கிடைப்பதும் வரம்தான் :)        
             ''என்னங்க ,நான் தூங்கினா உங்களுக்கு சந்தோசமா,ஏன் ?''
             ''அப்பதானே ,நீ  சைலென்ட் ஃ மோடில் இருக்கே !''

 மேனி எழிலின் ரகசியம் இதுதானோ :)
         ''உப்பில்லா சோப்பு வேணுமா ,அப்படின்னா என்னம்மா ?''
        ''துணிக்கு போடுறது  உப்பு சோப்புன்னா, உடம்புக்குப் போடுறது உப்பில்லா சோப்தானே ?''
நடுவர் இப்படின்னா ,பேச யார் வருவாங்க :)
           ''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர்  போலிருக்கா ,ஏன் ?''
           ''மணி  அடிச்சும் பேசிக்கிட்டு இருந்த பேச்சாளர் மேல்,மணியையே தூக்கி எறிஞ்சுட்டாரே !''

கரெண்ட் கட் நேரத்து ஞானோதயம் :)
UPS சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் ...
இருக்கும்போதே சேர்த்து வைப்பதுதான்
இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் !

28 comments:

 1. செருப்பைவிட கௌரவமான பொருள்தானே... ஜி

  ReplyDelete
  Replies
  1. கௌரவமானப் பொருள் என்றாலும் ,போதும் நிறுத்து கேட்கச் சகிக்கலேன்னுதானே அர்த்தம் :)

   Delete
 2. கரெண்ட் கட் நேரத்து ஞானோதயத்துடன் எல்லாம் ரசித்தேன் சகோதரா.
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. அது உங்களுக்கும் கை கொடுக்கும்தானே :)

   Delete
 3. Replies
  1. பட்டிமன்ற நடுவர் செய்வதையுமா :)

   Delete
 4. அவ்வ்வளவு மோசமாவா பாடறார்?!!

  குழம்பிட்டார் போல!

  ஹா... ஹா..

  காரமில்லா சோப்பாப் பார்த்துப் போடுங்க!

  அசாத்(தியவே)வீகம்!

  சரி!

  ReplyDelete
  Replies
  1. இல்லையென்றால் ஹியரிங் எய்டை தூக்கியெறிய மனம் வருமா :)

   மனைவிதான் சொதப்பிவிட்டார் :)

   ஆரவார பேய்கள் எல்லாம் அடங்கின மாதிரி இருக்காம் :)

   உங்க சோப்பிலே காரம் இருக்கான்னுகூட விளம்பரம் வரலாம் :)

   தூக்கியெறியும் வேகம் அசத்துதே :)

   எங்கே சேர்த்து வைக்க முடியுது :)

   Delete
 5. Replies
  1. இருட்டினில் பிறந்த ஞானோதயமும்கூட :)

   Delete
 6. அந்தக் 'காது கேட்கும் கருவி வந்து விழும்..'ஜோக் புதுமையாக இருந்தது. இப்படித்தான் காலத்திற்கேற்ப சிந்திக்கவேண்டும்.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி.

  ReplyDelete
  Replies
  1. நேற்றைய கம்ப்யூட்டர் ஜோதிடம் புதிய மொந்தையில் பழைய கள்ளா:)

   Delete
 7. Replies
  1. மேனி எழிலின் ரகசியம் புரிந்ததா :)

   Delete
 8. நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆதரவு இருக்கையில் எனக்கென்ன கவலை :)

   Delete
 9. ''காது கேட்கும் கருவிகள்தான்!''

  பாடகர் ‘ஹியரிங் எய்டு’ கடை போட்டுடலாம்!

  ReplyDelete
  Replies
  1. பிழைக்க நல்ல வழி :)

   Delete
 10. ஏன் அவர் பாடியது கேட்கவில்லை என்னும் கோபமா
  சிலர் வீட்டு மோர்க்குழம்புகள் அப்படித்தானிருக்கிறது
  யாராவது ஒழுங்கா தூங்கவேண்டும் அல்லவா
  துணிக்குப் போடுவது உப்பு சோப்பா
  சொன்னாக் கேட்காவிட்டால் அப்படித்தான்
  கரண்ட் கட் ரொம்பவே சிந்திக்க வைக்கிறதா

  ReplyDelete
  Replies
  1. கேட்கவில்லை என்றால் பாடகர் மேல் ஏன் எறிகிறார் :)
   கைமணம் அப்படி :)
   யார் முதலில் தூங்குவது போட்டியிருக்குமோ :)
   உங்களுக்குத் தெரியாததா :)
   வீட்டிலும் அப்படித்தானா :)
   அதுகூட நல்லதுதானா :)

   Delete
 11. Replies
  1. முன் கோபக்கார நடுவரையுமா :)

   Delete
 12. Replies
  1. உங்க மனம்கவர்ந்தவர் நடுவரா ,பாடகரா :)

   Delete
 13. செவிடன் காதில் ஊதிய சங்கில்லல்ல...!

  மஞ்சத் தண்ணிய ஊத்தி என்னக் கவுத்தலாச்சே...!

  ‘கரட்டு... புரட்டு’ன்னு நீங்க தூங்கினாத்தான் எனக்குத் தோசம்...!

  உப்பில்லா பண்டம் குப்பையிலேன்னு சொல்லி இருக்காங்களே...!

  இதுக்குத்தான் ‘மணிகண்டன்’னு பேரு வக்கக்கூடாது...!

  U P யில் SERVICE செய்யும் M L A தானே சொல்றீங்க... ஜனாதிபதிக்கு கை கொடுப்பார்களோ...?!

  த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. அதுவும் இழவு வீட்டு சங்கு சத்தம்:)

   அவரே வியாபாரத்தில் நொடித்து மஞ்ச நோட்டிஸ் கொடுத்தவராச்சே :)

   இல்லைன்னா சந்தோஷமா :)

   நிறைய பேர் வீசுவார்கள் :)

   வெண்கலக் குரலுக்கு பொருத்தமான பெயராச்சே :)

   காசு கொடுப்பவருக்கு கை கொடுப்பார்கள் :)

   Delete
 14. அப்படியா..!!நல்லா இருக்கட்டும்... குறட்டை விடா மனைவி பற்றி எனக்கு அனுபவம் இல்லீங்கோ.......

  ReplyDelete
  Replies
  1. கொடுத்து வைத்தவர் நீங்கள் :)

   Delete