17 March 2017

அக்மார்க் இரட்டை அர்த்த ஜோக்தான் இது :)

                 ''விவாக ரத்து பெருக என்ன காரணம் ?''
                 ''சிலர் 'வைப்பு ' தொடர்பிலும் ,இன்னும் சிலர் மனைவியைக் கூட மறந்து 'வை ஃபை'தொடர்பிலும்  இருக்காங்களாமே !''

அது அரியாசனமா ,சொறியாசனமா :)
              ''மந்திரிகளைப் பார்த்து 'ஒரு நாள் அரசனாய் 'இந்த அரியாசனத்தில்  அமர்ந்து பாருங்கள் ....என் கஷ்டம் புரியும்னு அரசர் சொல்றாரே ,ஏன் ?''

              ''மூட்டைத் தொல்லைத் தாங்க முடியலையாம் !''

முட்டாள் யாருன்னு தெரியுதா :)
                 ''என்னங்க ,பேப்பரைப் படிச்சீங்களா ? 15 +7 எவ்வளவு என்று கேட்டதுக்கு ,17ன்னு பதில் சொன்னவனைக் கட்டிக்கவே மாட்டேன் என்று மாலையைக் கழற்றி எறிஞ்சிட்டாளாமே புதுப் பொண்ணு ?''
                 ''சரியாத் தானே சொல்லியிருக்கான் புது மாப்பிள்ளை ?''

ஆளையே  export  செய்யுமோ   :)
          '' ஆப்பிளில்  export qualityன்னு ஸ்டிக்கர் ஓட்டியிருக்கோம் ...அதாவது மேல் நாட்டுத்தரம் ,உங்களுக்கென்ன சந்தேகம் ?''
         ''பிறகேன் ,நேற்று ஆப்பிளை சாப்பிட்ட என் நண்பர் மேலோகம் போய் சேர்ந்தார்?''
          ''ஸ்டிக்கரைக் கிழிக்காம சாப்பிட்டு இருப்பார்  !''

நடிகையை ரசித்தால் மட்டும் போதாதா :)
        '' கும்பாபிசேகம் செய்யணும்னு  போராட்டம் செய்தவர்கள்  கைதாமே ,ஏன் ?''
        ''அவங்க கும்பாபிசேகம் செய்யச் சொல்றது ,நடிகைக்கு கட்டப்பட்டிருக்கும் கோவிலுக்கு  !''

டாக்டர் தெய்வமா ,எமனா :)
டாக்டரை ....
தெய்வம் என்றார்கள் ...
 கோமாவில் இருந்தவன் ,எழுந்து நடந்ததும் !
எமன் என்றார்கள் ...
தலைவலி என்று வந்தவன் ,இறந்ததும் !

26 comments:

 1. அரிய ஆசனம்தான் ஜி

  ReplyDelete
  Replies
  1. வேறு யார் பெறுவார் இந்த அரியாசனம் :)

   Delete
 2. Replies
  1. முதல் ஜோக் விகாரமாக இல்லைதானே :)

   Delete
 3. Replies
  1. 'வை ஃபை'தொடர்பே போதும் என்று இருக்கக் கூடாதுதானே :)

   Delete
 4. செமை
  தொடர்க
  தம

  ReplyDelete
  Replies
  1. விவாகரத்து புள்ளி விபரம் சரிதானே :)

   Delete
 5. வை ராஜா வை... ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல...! வை பை கை...!

  கூமூட்டைகளின் தொல்லைதானே...?!

  அது சரி...!

  உள் நாட்டுச் சரக்க வச்சிட்டு வெளிநாட்டுச் சரக்குன்னு ஏமாத்தாதிங்க...!

  இப்பவாவது குளிப்பாட்ட விடமாட்டீங்களே...!

  எலும்பில்லா நாக்குத்தானே...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. ஸ்பெக்ரம் ராஜாவும் அப்படித்தானா :)

   அது வெளியே இருந்து வரும் தொல்லை :)

   தூக்கி எறிந்தது சரிதானே :)

   ருசித்தால் தெரியாதா :)

   முதல்லே நீங்க குளிங்க :)

   எலும்பு இருந்தா மட்டும் உண்மையை பேசுமா :)

   Delete
 6. நடிகையின் கோவிலுக்கு
  கும்பாபிசேகம்
  ஏழையின் வயிறே
  பட்டினியில் வாட்டம்!

  ReplyDelete
  Replies
  1. கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது இதுதான் தோன்றுகிறது :)

   Delete
 7. ''அவங்க கும்பாபிசேகம் செய்யச் சொல்றது ,நடிகைக்கு கட்டப்பட்டிருக்கும் கோவிலுக்கு !''//

  நடிகைக்கும் அபிஷேகம் செய்யச் சொல்வாங்களோ!!!

  ReplyDelete
  Replies
  1. பணத்தால் கனகாபிஷேகம் செய்தால் ஏற்றுக் கொள்ளக் கூடும் :)

   Delete
 8. அக்மார்க் இரட்டை அர்த்தம் என்றால் என்னசரியாகப் புரிந்து கொள்ளக் கூடாததா
  அரிப்பசனமா கடிப்பாசனமா
  15+7 எவ்வளவு போட்டிக்கு நானும்
  விளங்கச் சொல்ல வேண்டாமா
  கும்பமிருக்கிறதா இல்லையா
  கல் என்றால் அது கல் தெய்வமென்றால் அது தெய்வம் நினைவுக்கு வருகிறது

  ReplyDelete
  Replies
  1. இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள வேண்டியது :)
   எல்லாம்தான் :)
   எனக்கு குழப்பமாகி போச்சு :)
   நல்ல விளக்கம்தான் :)
   இல்லாமலா நடக்கும் :)
   நம்பிக்கைதான் அடிப்படையா :)

   Delete
 9. அருமையாசொன்னீங்க

  ReplyDelete
  Replies
  1. அய்யா சாலமன் பாப்பையா சொல்ற மாதிரியிருக்கே :)

   Delete
 10. Replies
  1. 'வைப்பு ' தொடர்புக்கும் ம் தானா :)

   Delete
 11. Replies
  1. அதிலும் அந்த புது மாப்பிள்ளை கணக்கிலே புலியாய் இருப்பதையும்தானா :)

   Delete
 12. அக்மார்க் மாதிரி வைப்பு ஒன்று என்றால் பராவாயில்லை...ஒன்றுக்கு மேல் இருக்கிறதே...!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. யாருக்கு இருக்கிறது சொல்லுங்க தோழரே :)

   Delete
 13. Replies
  1. மூட்டைத் தொல்லையை ரசிக்க முடியுதா:)

   Delete