20 March 2017

இளம் மனைவிக்கு பிடித்ததைச் செய்யாமல் :)

படித்ததில் இடித்தது :)
              ''குடிகாரனுக்கும் ,குபேரனுக்கும்  என்ன ஒற்றுமை ?''
              ''குபேரனுக்கும் ஊறுகாய் பிடிக்குமாமே !''    
படித்த  செய்தி .....
வீட்டிலே ஊறுகாய் இருந்தால் குபேரன் அருள் கிடைக்குமாம் !

இளம் மனைவிக்கு பிடித்ததைச் செய்யாமல் :)
          '' உன் கணவன்கூட  என்னடி சண்டை ?''

           ''நான் கேட்காமலே இட்லி மாவு பாக்கெட் வாங்கத் தெரியுது , மல்லிகைப் பூ வாங்கி வரத் தெரியலையே !''
வயசுப் பொண்ணு ஆடினாதான் நாட்டியமா :)
           ''இந்த வயசுலே ,கோவில்லே உன் நாட்டிய அரங்கேற்றம்  வேண்டாம்னு சொன்னேனே,கேட்டீயா ?''
            ''இப்போ என்னாச்சு ?''
            '' கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா ,இங்கே உண்மையாவே ஒரு கொடுமை ஆடிட்டு இருக்கேன்னு  சொல்றாங்களே !''

ஓமனக் குட்டி மனைவி ஆனதால் கிடைத்த பலன் :)
           '' நான் கேரளப் பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டது ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
            ''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு அவன் பயோடேட்டாவிலே எழுதி இருக்கானே !''

ஆமை புகுந்த வீடும் 'அ.மீனா ' புகுந்த வீடும் உருப்படாதா :)
         ''மீனாங்கிற என்  மகளோடப் பெயரை மாத்தினாதான் புகுந்த வீட்டுக்குப் போற யோகம் வருமா ,ஏன் ?''
         ''உங்கப் பெயர்  'அ'வில் ஆரம்பிக்கிறனாலே ,பொண்ணுபெயரை அபசகுனமா நினைக்கிறாங்களே !''

16 comments:

 1. Replies
  1. ஊறுகாய் இல்லாத ஏழைகள் வீடு ஏது?அங்கெல்லாம் குபேரன் போகாததை ரசிக்க முடியுதா :)

   Delete
 2. ஓ... ஜம்ப் பிரேக் போட்டாச்சா?!!!

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த ஜம்பினால்,பார்வைகளின் எண்ணிக்கையில் பெரிய ஜம்ப் வந்த மாதிரி தெரியலே :)

   Delete
 3. ‘ஊறுகாய்...’ ஊறியகாய்... ஊறுகின்றகாய்... ஊறும்காய்... ‘வினைத்தொகை’... வடுமாங்காய் ஊறுதடி...!

  மதுரை மல்லிதானே...! தீந்துபோச்சாம்...! மல்லிகைப்பூப்போல இட்லி சுட்டுத்தருவது பத்தாதான்னு நெனச்சுட்டாரோ...?!

  அதுவும் ‘ஐம்பதிலும் ஆசைவரும்...’ பாட்டுக்கா ஆடனும்...!

  ‘தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை... குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்’

  ‘மீனா... அ...’ கேப்டனச் சொல்லச் சொல்ல வேண்டியதுதானே...!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. வடுமாங்காய் ஊறுதடி...!குபேரன் வரவுக்கு காத்திருக்கோ :)

   வாய்க்கு ருசியா கிடைச்சா எல்லாம் மறந்து போகுமா :)

   ஆசையுடன் பாசம் வரும் ,பாசத்திலே எல்லோரும் வழுக்கி விழுந்து விட்டார்களே :)

   இலவச கண் சிகிச்சை முகாம் போடப் போறாரோ :)

   அவர் உச்சரிப்பு உங்களுக்கு பிடிக்குமா :)

   Delete
 4. ஊறுகாய் சுவைத்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. வெறும் ஊறுகாயை தானே :)

   Delete
 5. புளிப்பும காரமும் எனக்கு ஒத்துகிராது தலைவரே................

  ReplyDelete
  Replies
  1. இதை வெளியே சொல்லாதீங்க ,உங்களுக்கு வயசாயிடுச்சு என்பார்கள் :)

   Delete
 6. ஊறுகாய் இருக்குமிடமெல்லாம் குபேர வாசமா
  அவருக்கு தேவை இட்லி. இப்போது மல்லிகைப் பூ அணிந்த மனைவி அல்ல, அந்தந்த நேரத்தில் அதது
  படத்தில் இருக்கும் பெண்போல் ஒருத்தி ஆடினால் அப்படிச் சொல்லத் தோன்றுமா
  இவ்வளவு லேட்டா தெரிய
  வார்த்தை விளையாட்டு

  ReplyDelete
  Replies
  1. அதானே ,ஊறுகாய் இல்லாத குடிசை இருக்கா :)
   வயிறுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி மனைவியின் வயசுக்கும் தரணுமில்லையா :)
   ஆடவே வேண்டாம் நின்றாலே போதும் :)
   இப்போதானே பய டேட்டாவில் சொல்லியிருக்கான் :)
   மீனாவை யாருக்குத்தான் பிடிக்காது :)

   Delete

 7. இந்தக் குபேரன் கதை புதிதாக இருக்கிறதே!

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் புதுசாத் தான் தோன்றுகிறது :)

   Delete
 8. அனைத்தும் ரசித்தேன் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. குபேரன் அருள் கிடைக்குமன்னு உங்களால் நம்ப முடியுதா ஜி :)

   Delete