22 March 2017

துணை (எழுத்து ) ரொம்ப முக்கியம்தான் :)

நன்றி மறவாத  டாக்டர் :)
         ''அந்த டாக்டர் ,அறையிலே  நிறைய பேர் போட்டோவை மாட்டி வச்சிருக்காரே ,யார் அவங்க  ?''
          ''டாக்டரிடம் காசும் கொடுத்து ,உயிரையும் தியாகம் செய்தவங்கதான் ! ''
                   
மின்சார மந்திரிக்கு பிடிச்ச பூச்சி :)
          '' மின்சார மந்திரி அடிக்கடி தன்னோட பேச்சிலே மின்மினிப் பூச்சியை உதாரணம் காட்டுகிறாரே ,ஏன் ?''
           ''ஒரு பூச்சிக் கூட தன் தேவைக்கு வெளிச்சத்தை தானே உண்டாக்கிக் கொள்ளும்போது  ,மனுஷனாலே ஏன் முடியாதுன்னு மறைமுகமா கேட்கிறாரோ !''

துணை (எழுத்து ) ரொம்ப முக்கியம்தான்  :)
         ''பஸ்ஸை எடுக்க வர்ற என்கிட்டே  வேப்பிலைக் கொத்தை ஏன் கொடுக்கிறீங்க,மெக்கானிக்  ?''
         ''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''

டாஸ்மாக் 'தண்ணி'யை மறந்த கவிஞர் :)
               ''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ,தண்ணீர் கரையில் முடிக்கிறோம்ன்னு எழுதின கவிஞர் ,நடுவிலே ஒரு வரியை விட்டுட்டார் !''
               ''எந்த வரியை ?'''
               ''தண்ணியில் தினமும் மிதக்கிறோங்கிறதை !''

இவனன்றோ பாரதியின் பேரன் :)
மரணபயம் வென்றவன் ...
எருமைக்குப் பதிலாய் 'YAMAHA 'வை 
எமனுக்கு பரிசளிப்பான் !

16 comments:

 1. அந்த டாக்டர் ஜோக்கும் மின்சார மந்திரி ஜோக்கும் சூப்பர் தலைவரே!

  - இராய செல்லப்பா நியூஜெர்சி.

  ReplyDelete
  Replies
  1. டாக்டருக்கு மக்கள் மீதுள்ள விசுவாசம் மந்திரிக்கு இல்லையே :)

   Delete
 2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் 'தண்ணி'யை கவிஞர் மறந்தது தப்புதானே :)

   Delete
 3. Replies
  1. சுய தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளும் மின்மினிப் பூச்சி அருமைதானே :)

   Delete
 4. பேய் ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. இந்த பேயைப் பார்க்க அலைய வேண்டியதில்லை ,எங்கும் பார்க்கலாம் :)

   Delete
 5. இந்த அறையில் போட்டோ மாட்ட அரை லட்சத்துக்கு மேல செலவாகும்... கோல்டு பிரேம் போட்டு மாட்டுவாங்களாம்... நீங்க யாரும்... அப்போ...லோ...லோன்னு அலைய வேண்டியதில்லை...!

  ‘வயித்தில நெருப்பக் கட்டிட்டு இருக்கேன்’ மின்மினி பேசலாம்...!

  பிரேக் பிடிக்க வில்லையென்றால் நான்தான் பேயாய்த் திரியணும்...!

  தண்ணியில் தினமும் மிதக்கக் கூடாதுன்னுதான் இந்த வருஷம் குடிக்கத் தண்ணிய குறைச்சிட்டோம்... 500 கடை குறைக்க நடவடிக்கை... கனத்த இதயத்தோடு எடுத்திருக்கோமில்ல...!

  ‘’காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்
  காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்’’ 'YAMAHA'வால்...!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. அங்கே...அலைந்தாலும் இந்த மரியாதைக்கூட இல்லையே :)

   என்னமோ வயசுப் பிள்ளையை வச்சிருக்கிற மாதிரி சொல்றீங்களே :)

   நீங்க மட்டுமா ,கூட எத்தனைப் பேர் அலைய வேண்டியிருக்குமோ :)

   ஒரு பக்கம் மூடிட்டு இன்னொரு பக்கம் திறக்கவில்லைதானே :)

   இன்னுமா புஸ ஸ்டார்ட் :)

   Delete
 6. அதுதான்சொல்லி விட்டீர்களே நன்றி மறவாத டாக்டர்
  அவர் எப்படி.?
  வேப்பிலைக் கொத்துக்கு பயப்படுமா ப்ரேக் பேய்
  நான் யமண்டா இல்லை யமஹாடா என்பானோ அந்த யெமன்

  ReplyDelete
  Replies
  1. நான்தான் நன்றி இல்லாதவனாகி விட்டேன் ,மறுமொழிக்கு தாமதமாகி விட்டதே :)
   புகழ் வெளிச்சம் அவரைச் சுற்றி இருக்கிறதாமே :)
   அப்படித்தான் பல ஓட்டுனர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் :)
   எமனும் காலத்துக்கு ஏற்ற மாதிரி வாகனத்தை மாற்ற வேண்டாமோ :)

   Delete
 7. டாக்டரையும், துணை நிற்கும் பேயையும் ரசித்தோம் ஜி!!! அனைத்தும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றதைப் பார்த்தா ,டாக்டரும் பேயும் கூடப் பிறந்தவங்க என்று சொலவதைப் போலிருக்கே :)

   Delete
 8. துணையும் துணை எழுத்தும் ரெம்ப முக்கியம் என்பது தாமதமாகத்தான் தெரிந்தது தலைவரே...

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப என்று சொல்வதில் இருந்தே தெரியுதே :

   Delete