24 March 2017

தூக்கம் போனதே உன்னால்தானடி :)

இது எல்லோருக்கும் பொருந்துமா :)
           ''அரசியல்லே இறங்கலாம்னு இருக்கேன் ,ஆசீர்வாதம் பண்ணுங்க !''
           ''கையிலே மஞ்சப் பையோட ,டிக்கெட் எடுக்காம சென்னைக்கு கிளம்பு ,நல்லா வருவே !''

இது எனக்கும்  பொருந்தும் :)
             ''வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்னு நம்புறீங்க ,ஆனால் என் ஜோக் புத்தகத்தை ஏன் வாங்க மாட்டேங்கிறீங்க ?''
             ''சிரிக்கிற மாதிரி எதுவுமே அதில் இருக்காதே  !''

மாத்தி யோசி  என்பது இதுதானோ :)
                ''டி வி யில் வர்ற தொடர்களை ராத்திரி ஒருமணி வரைப்  பார்ப்பதால் ,தூக்கம் கெடுதுன்னு மனைவியை திட்டிக்கிட்டே இருந்தீங்களே ..இப்போ எப்படி ?''
                ''நானும் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ,உடனே   தூக்கம்  அருமையா வருதே !''

இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு :)
             ''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா  இருக்கே ,எப்படி ஆச்சு ?''        
             ''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம்  !''

இதுவும் ஒரு நல்ல பொருத்த'மே ':)
           ''நான்  'மே 'மாதத்தில் பிறந்தது ரொம்ப பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
          ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''

தூக்கம் போனதே உன்னால்தானடி  :)
உன்னைக் கண்டதுமே 
எனக்குப் புரிந்த உண்மையை ...
ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள் ...
சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் 
தூக்கத்தைக் கெடுக்குமாம் !

24 comments:

 1. நல்லவேளை நான் மே மாதம் பிறக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. 'மே'யில் பிறந்த நான் வலைத்தளங்களில் மேய்ந்து கொண்டுதானே இருக்கேன் :)

   Delete
 2. Replies
  1. உங்களுக்கும் சாக்லேட் பிடிக்கும்தானே :)

   Delete
 3. அரசியல்லே இறங்கலாம்னு இருக்கியா...? தலைவரோட வீட்ல வேலைக்குச் சேர்ந்து... வருமானத்துக்கு அதிகமா சுருட்டி... எஸ்டேட் பங்களான்னு வாங்கி... அரசியல்ல இருந்து இரந்து... வெளியே உள்ளே வாழ்ந்து... இறக்க என்னோட வாழ்த்துகள்... எல்லா வளமும் பெற்று... பெற்றால்தான் பிள்ளையா...? ‘வாழ்க வளமுடன்!’

  ‘அழக்கொண்ட எல்லாம் அழப்போம்...’ சும்மா அழ வைக்காதிங்க... எதையுமே சிந்திச்சுப் பேச மாட்டீங்களா...?!

  தொட(ர்)த் தொட(ர்)த்தானே... சுகம் சுகமே...! தொடத்தொட மலர்வதென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன?

  (ஏ)மாத்தி யோசிச்டாங்களோ...?!

  நீங்க ஒருத்தர்தான் என்ன (லேட்டா) வேலை செய்றேன்னு சொன்னது...! ரெம்ம நன்றிங்க... செத்த ரெஸ்ட் எடுத்திட்டு வர்றேன்...!

  இருந்தாலும் ஒங்களுக்கு இந்த அகங்‘காரம்’ ஆகாது...!

  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. இப்படி கூட இருந்து கழுத்து அறுப்பதை சாணக்கியத் தனம் என்று சொல்லிக்கலாம் :)

   சிந்தித்தால் சிரிப்பு வருமா ,மனம் நொந்தால் அழுகை வருமா :)

   விடிய விடிய தொடருக்குப் பின்னால் போனால் தொடக் கூட நேரமிருக்காதோ:)

   உடம்பு முழுவதும் தேய்த்தால் தலையில் முளைக்குமோ :)

   வேலை செய்யுதுன்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் :)

   அலங்காரம் மட்டுமே போதுமா :)

   Delete
 4. அனைத்தும் ரசித்தோம் ஜி!

  ReplyDelete
  Replies
  1. மாத்தி யோசித்தது சரிதானே ஜி :)

   Delete
 5. Replies
  1. அவருக்கு வந்தமாற்றத்தையும்தானே :)

   Delete
 6. மஞ்சள் பை ஐடியா அருமை ..
  தம

  ReplyDelete
  Replies
  1. நாலைந்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார் ,வரும் போது மஞ்சப் பையோடு வந்தார் என்று மக்கள் பேசணும் இல்லையா :)

   Delete
 7. //''நானும் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ,உடனே தூக்கம் அருமையா வருதே !''//

  எனக்கு டி.வி.தொடர்களைப் பார்த்தா கோபத்தில் மண்டை கொதிக்குது!

  ReplyDelete
  Replies
  1. யார் யாரோடு எனக்கென்ன என்ற நினைப்பில் பார்த்தால் மண்டைக் கொதிக்காது :)

   Delete
 8. ''நானும் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தேன் ,உடனே தூக்கம் அருமையா வருதே !''//

  எனக்கு டி.வி.தொடரைப் பார்த்தா கோபத்தில் மண்டை கொதிக்குது!

  ReplyDelete
  Replies
  1. என் உச்சி மண்டையுலே கிர்ர் என்குதுன்னு பாடுங்க ,சரியாய் போகும் :)

   Delete
 9. அரசியலில் இறங்க மனிதத்தனம் கூடாது எதற்கும் தயாராய் இருக்க வேண்டும் மஞ்சள் பை எதுக்கு
  வாய்விட்டு சிரிக்க முடியாவிட்டாலும் ஒரு புன்னகையாவது வரவேண்டாமா
  ராத்திரி ஒரு மணிவரைப் பார்தால் தூக்கம்கெடாமல் என்ன செய்யும்
  விதைத்தது தலையில் இல்லையா
  அட் லீஸ்ட் வேலை செய்யுதே
  நீதான் சாக்கலேட் ஐஸ் க்ரீம் போல இருக்கிறாயேபார்த்துக் கொண்டிருந்தால் போதுமா சுவைக்க வேண்டாமா தூக்கம் கெடாமல் இருக்குமா

  ReplyDelete
  Replies
  1. வரும்போது மஞ்சப் பையோடு வந்தார் என்று மக்கள் பேச வேண்டாமா :)
   புன்னகை என்ன விலைன்னு தெரிந்தால் கொடுத்து விடலாம் :)
   அப்புறம் விடிந்ததும் தொடர் ஆரம்பித்து விடுகிறதே :)
   தலையில் தேய்த்தால் இப்படி தலைகீழாய் வேலை செய்யுதே :)
   லேட்டா செய்தாலும் லேட்ஸ்ட்டா செய்ய வேண்டாமா :)
   ஏக்கம் தூக்கத்தைக் கெடுக்கத் தானே செய்யும் :)

   Delete
 10. டி.வி சிரியல் பார்த்தா தூக்கம் வருதா ? பைத்தியம் புடிக்கும் நினைச்சிகிட்டிருந்தேன்

  ReplyDelete
  Replies
  1. தொடர் பைத்தியங்கள் நாட்டில் பெருகித்தான் விட்டார்கள் :)

   Delete
 11. சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் சாப்பிடாதவுகளுக்கு தூக்கம் வர மாட்டுதே..அதுக்கு காரணம் என்னவோ...???

  ReplyDelete
  Replies
  1. கிடைக்கலையே என்ற ஏமாற்றம்தான் :)

   Delete
 12. இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு :)
  ''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா இருக்கே ,எப்படி ஆச்சு ?''
  ''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம் !''

  இதனை எனது வலைப்பூவிலும் அறிமுகம் செய்துள்ளேன்.

  இனிய பதிவுகள்

  ReplyDelete
  Replies
  1. வாசிக்கிறேன் உங்கள் தளத்தையும் ,நேசிக்கிறேன் உங்கள் நலத்தையும் :)

   Delete