26 March 2017

மனைவிக்குத் தெரியாதா கணவனின் புத்தி :)

சாம்பிள்  டீ  குடித்ததும் ரோஷம்  வந்திடுச்சோ :)        
           ''வேலைக்காரி ,தன் வீட்டில் இருந்து போட்டுக்  கொண்டு வந்த டீயை ஆசையா   குடிச்சிட்டு ,இனிமேல் வேலைக்கு வர வேண்டாம்னு  ஏன் சொன்னே ?''
          '' இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் எனக்கு பழக்கம்னு சொல்றாளே !''

இது தோஷ நிவர்த்தி மாதிரி தெரியலே :)           
          ''அந்த ஜோதிடர் குஷ்பு ரசிகர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
          ''தோஷ நிவர்த்திக்கு குஷ்பு கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும்னு சொல்றாரே !''

மனைவிக்குத் தெரியாதா  கணவனின் புத்தி :)
          ''என் கிளாஸ்  டீச்சரை  வந்து பார்த்ததில் இருந்து ,அப்பா என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார் ,ஏன்னு  கேளும்மா !''
           ''உன் கிளாஸ்  டீச்சரை நீ மிஸ் ன்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டார் போலிருக்கு  ,என்னன்னு கேட்கிறேன் !''

கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் :)
            ''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
           ''சுயமரியாதை இல்லாம நீங்க இருக்கும் நாள் வரைக்கும் !''

கற்புக் கரசிகளும் ,ஏகபத்தினி விரதன்களும் :)
ஆண்களே இல்லைஎன்றால் எல்லா பெண்களுமே 
கற்புக்கரசிகளாய் திகழ்வார்கள் ...
                           இது ஒரு  சம்ஸ்கிருதப் பழமொழி !
உலகில் ஒரே ஒரு பெண்தான் என்றால் எல்லா ஆண்களுமே 
ஏகபத்தினி விரதன்களாய் திகழ்வார்கள் ...
                        இது ஒரு 'ஜொள்ளனின் 'புதுமொழி !

18 comments:

 1. அந்த கோயிலைத்தான் இடித்து தரை மட்டமாக்கி என்னை பழி வாங்கிட்டாங்களே ஜி

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? இடிச்சுட்டாங்களா ஜி?

   Delete
  2. ஆமாம் திருச்சி பர்மா காலனியில் 1992-ல்

   Delete
  3. இப்படிச் சொல்றீங்களே ஜி ,மொட்டைக்கு நேர்ந்து கொள்ளலாம்னு இருந்தேன் :)

   Delete
 2. கட்சி உறுப்பினர் அட்டை ஜோக்கையும், க்ளாஸ் டீச்சர் ஜோக்கையும் அதிகம் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டேக் இல்லாம புரிஞ்சிகிட்டீங்களா :)

   Delete
 3. வேலைக்காரி ஒங்களப்போலவே ஸ்ட்ராங்கான பார்ட்டின்னு சொல்லுங்க...!

  கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செஞ்ச கையோட குஷ்பு இட்லி ஒரு டஜன் அந்த ஜோதிடர் கேக்குறாரே... சோம சுந்தரா...சி... இது ஒரு பொழப்பா...?!

  அந்த மிஸ்... அடுத்த மாதம் ரிட்டையராம்...!

  ஏன் தலைவரே... நம்ம கட்சிக்குச் செம்மறி ஆட்டுச் சின்னம்தான் வேணுமா...?!

  கற்பு என்றால் அஃது இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்... அரசனும் அரசியும் ‘நீ பாதி நான் பாதி’ எனப் பிரித்துக் கொள்ளட்டும்...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. வம்பிலே வம்ப மாட்டிக்க சொல்றீங்களே :)

   ஜோதிடருக்கு வந்த ஆசை நிறைவேறுமான்னு எந்த ஜோதிடரிடம் போய் கேட்பது :)

   பேரக் குழந்தைகள் எட்டு இருக்காமே :)

   சிம்பாலிக்கா இருக்கட்டு'மே' :)

   பாதி கற்பா:)

   Delete
 4. அனைத்தும் ரசித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. கொடுத்து வச்ச பாம்பையுமா :)

   Delete
 5. ...இன்னிக்கு எல்லாமே சுமார் தான்!

  ReplyDelete
  Replies
  1. சிலநேரம் மனைவியின் கைமணம்கூட சில நேரம் மாறிடுதே :)

   Delete
 6. பின்னூட்டம் போடுறேனோ இல்லையோ.. வோட் மட்டும் ஒழுங்காப் போட்டுவிட்டுப் போவேன் என.. குஸ்பூ அக்கா கையிலிருக்கும் அந்தப் பாம்பின் மீது அடித்துச் சத்தியம் பண்றேன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. உங்களிடம் எனக்கு பிடித்ததே ,வம்பு தும்பு கருத்துதான் ,அது இல்லாமலா :)

   Delete
 7. நீங்க கடிக்கறது போதாதா, பாம்பை வைச்ச பயமுறுத்தலாமா தோழரே

  ReplyDelete
  Replies
  1. இந்த குஷ்பூ நாகம் பயமுறுத்துதா:)

   Delete
 8. இரசித்தேன் சகோதரா...
  தமிழ் மணம் - 7
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. ஸ்ட்ராங் டீ எப்படி :)

   Delete