29 March 2017

கணவன் வேகத்திற்கு இரண்டு தேவைதானே :)

 அடிக்கிற வெயிலுக்கு தேவைதானே இது :)      
           ''அந்த லேடீஸ் ஒன்லி கடையிலே கூட்டம் அலை மோதுதே ,ஏன் ?''
          '' புதுசா, ஜன்னல் வைச்ச நைட்டி வந்திருக்காம்!''   
பீரோ சாவியை வாங்கிக்குவாளோ:)
               ''உன் மனைவி ஜென்மத்துக்கும் சமையல் செய்ய மாட்டாள் போலிருக்கா ,ஏன் ?''
               ''காக்கா வலிப்பிலே துடிக்கிறப்போ கூட ,இரும்பு கரண்டியை கையிலே வாங்க மாட்டேங்கிறாளே !''

காதலனை இப்படியா நோகடிப்பது :)

               ''இவரோட காதலி , இதைப் படித்தால் என்ன வேண்டிக்குவா  ?''
               ''நல்ல வேளை, வண்டி நம்பர்லே AK கிடைச்சமாதிரி ,இவன் கைக்கு AK47 துப்பாக்கி கிடைக்காம  இருக்கணும்னுதான் !''

கணவன் வேகத்திற்கு இரண்டு தேவைதானே :)
                "எதுக்கு இரண்டு தோசைக்கல் வாங்குறே ?"
                "உங்களுக்கு சுடச் சுட தோசை வேணும் ,தோசை வேகிற வேகத்தைவிட, நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே  !"'

இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு :)
                 ''அந்த இயக்குனடரோட படங்களில் ஹீரோ ஹீரோயின்கள் எப்படி  ?''
                  ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி 'கம்மியாவும் இருக்கும் !''

பழி ஓரிடம் ,பாவம் ஓரிடம் :)
அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !

22 comments:

  1. ஜன்னல் வைத்த..'அது' எந்தக் கடையில் கிடைக்கும் என்று நண்பர்கள் கேட்கிறார்கள்..

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம்தானே கேட்கிறார்கள் ,சொல்ல வேண்டியது தானே :)

      Delete
  2. ரசித்தேன் அனைத்தையும்!

    ReplyDelete
  3. பற்கள் பாவம்தான் ஜி

    ReplyDelete
    Replies
    1. நாக்கு மாதிரி இருக்கிற இடம் தெரியாமல் பல்லுக்கு இருக்கத் தெரியலையே :)

      Delete
  4. இந்தக் கடையில கதவு வச்ச நைட்டி வந்திருக்காம்... இந்தக் கடையில இப்ப கூட்டமோ கூட்டம்...!

    பூர்வ ஜென்மப் புண்ணியம்... செய்திருக்க வேண்டும்...!

    வண்டிய மாத்த வேண்டியதுதான்... போலிருக்கு...!

    வேகத்துக்கு ஏத்த விவேகம் வேணுமுல்ல... அதுக்குத்தான்...!

    படம் முழுவதும் நீச்சல் உடையில்தானே வருகிறார்கள்... ‘துணிவே துணை’ தானே படத்தின் பெயர்...!

    பேச்சுப் பேச்சாத்தான் இருக்கனும்...!

    த.ம. 4








    ReplyDelete
    Replies
    1. கதவு என்றால் முன்னாடி ஸ்ப்ரிங் கதவும் இருக்கணுமே :)

      கைமண சமையல் செய்வதற்குமா :)

      காதலியை மாற்றிக் கிட்டா போதாதா :)

      வேகம் விவேகமல்ல என்று சொல்ல வேண்டியதுதானே :)

      இந்த துணிச்சல் எல்லோருக்கும் வருமா :)

      இருந்தால் பல்லு தப்பிக்கும் :)

      Delete
  5. ரசித்தோம் அனைத்தையும் ஜி!

    ReplyDelete
    Replies
    1. வசதிதானே ஜன்னல் வைச்ச நைட்டி:)

      Delete
  6. வாடிக்கையாளர்கள் ஆண்களா
    நாமே சமைத்துச் சாப்பிடுவது தெரியுமா
    இப்படியும் ஒரு ஆசையா
    தோசை தின்பதில் மட்டும்தான் வேகமா சுடுவதிலும் இருக்க வேண்டும் அல்லவா
    இதெல்லாம் இப்போதைய படங்களில்தான்
    பழிஓரிடம் பாவமோரிடம்

    ReplyDelete
    Replies
    1. கேள்வியே வேடிக்கையா இருக்கே ,அது லேடீஸ் ஒன்லி கடையாச்சே :)
      தெரிந்த பிறகுதானே கல்யாணமே :)
      காதல் கொலைகள் பெருகிப் போச்சே :)
      இரட்டைக் குழல் துப்பாக்கி வச்சிருக்காரே :)
      பழைய படங்களில் இரண்டுமே இல்லையோ :)
      பேச்சில் பல்லின் பங்கும் இருக்கே :)

      Delete
  7. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் சூப்பர், இப்படித்தானே இருக்கிறது இக்காலம்.

    ReplyDelete
    Replies
    1. ஆத்திரமா வருதா அதிரா :)

      Delete
  8. Replies
    1. செட்டு தோசை ருசிதானே :)

      Delete
  9. Replies
    1. nice நைட்டியா,தோசையா :)

      Delete
  10. மிகவும் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நைட்டி டிசைனும்தானே:)

      Delete
  11. இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு
    அது தானே உண்மை!

    ReplyDelete
    Replies
    1. கதை இருந்தால் சதையை நம்ப வேண்டியிருக்காதுதானே :)

      Delete