3 March 2017

கண்விழியும் பேசுமோ :)

 கொசுவுக்கு தெரியுமா இரத்த வகை :)
                '' இரத்தத்திலே ஏ பி  ஓன்னு பலவகையிருக்கு,மனித உடம்பில்  இரத்த வகையை மாற்றி ஏற்றினால் மரணம்தான் !''
                   ''எல்லா வகை இரத்தமும் குடித்து கொசு உயிர் வாழுதே ,எப்படி டாக்டர் ?''

காயமே இது பொய்யடா :)
             '' கிழிஞ்சு இருக்கிற  என் சட்டை ,பனியனைப்பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்குமே?'' 
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை  எப்படி  காட்ட முடியும் ?'' 

Maal சென்று தேடினால் இவர் கண்ணில் படுவாரா :)
           ''என் அருமை மவனே... நான் கும்பிடுற முருகன் எங்கே இருக்கார்னு கேட்கிறீயே ,நீ எங்கெல்லாம் தேடுனே ?''
           ''மால் முருகானு நீங்க பாடுறீங்களேன்னு எல்லா MALLலேயும் தேடி பார்த்துட்டேன்பா !''

முதல் ராத்திரியிலாவது விழித்திருந்திருப்பாரா :)
       '' ஆபீஸ் நேரத்திலே ,நான் முடி வெட்டிக்க வந்தா ,உனக்கென்னப்பா  கஷ்டம் ?''
        ''ஆபீஸ் பழக்க தோஷத்திலே தூங்கி வழியுறீங்களே !''

 கண்விழியும் பேசுமோ  :)
               ''வள்ளுவர் இரண்டு அடியில் புரிய வைப்பார் ,மனைவி ஒரே அடியில் புரிய வைப்பார்னு சொல்றாங்களே  ,உண்மையா ?''
               ''அதெல்லாம் பொய் ,மனைவி முறைச்சாலே எனக்கு புரிஞ்சிடுதே !''

புனிதமான காதலின் இலக்கணம் :)
   காதலன் காதலியை கைவிடக் கூடாது ...
  இதைவிட முக்கியம் ...
  காதலன் காதலி மேலும்  கைவிடக் கூடாது !

18 comments:

 1. பார்வை ஒன்றே போதுமே... அப்படித்தானே ஜி...?

  ReplyDelete
  Replies
  1. பல்லாயிரம் சொல்ல வேண்டியதில்லைதானே ஜி :)

   Delete
 2. Replies
  1. இளமை சேஷ்டையையும்தானே:)

   Delete
 3. முதல் ஜோக்கில் வரும் கேள்விக்கு எந்த மருத்துவரும் பதிலளிப்பதில்லை!

  அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. நாம் குடித்தாலும் ஒன்றும் விபரீதம் ஆகாதோ ;)

   Delete
 4. ‘என் இரத்தத்தின் இரத்தமே!’ இனி இதுக்குத்தான் பொருந்துமோ...?!

  அடிச்சுத் துவைக்கிறா...! உள் குத்து வேற...!

  இந்தக் கோல்மால் வேலைதானே வேணாங்கிறது...! ‘கோமணத்துடன் ஏன் இப்படி ஆண்டியானாய்...?!’ கேக்க... பார்க்க பழநி மலையில் போய்த் தேட வேண்டியதுதானே...!

  ‘தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்...?!’

  ‘என்ன முறைப்பு வேண்டிக்கிடக்கு...?’ கேக்க முடியுமா...? ஒரே அறைதான்... பணிவுடன் வேண்டி அண்டிக் கிடக்க வேண்டியதுதான்...!

  ‘ஒரு கை ஓசை’ கை ‘மேல்’ கை வை மவனே...!

  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. உண்மையே அதானே :)

   துணியைத் துவைக்கிறாளில்லை:)

   ரெண்டு பெண்டாட்டிக் காரன் பாடு இதுதான் சொல்றாரோ முருகர் :)

   பென்சனும் பாதியைக் கொடுத்தால் சரி என்பாரா:)

   பார்வையால் கேட்க வேண்டியதுதானே :)

   ஃபீமேல்தான் ஜாக்கிரதையா இருக்கணும் ,கிழியப் போறது இலைதான் :)

   Delete
 5. மால் மருகா... :)

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பையன் அங்கேதானே குடியிருக்கான் :)

   Delete
 6. ''எல்லா வகை இரத்தமும் குடித்து கொசு உயிர் வாழுதே ,எப்படி டாக்டர் ?''

  எப்படி...எப்படி!?

  ReplyDelete
  Replies
  1. குடித்தால் நேரடியா இரத்தத்தில் கலக்காதே :)

   Delete
 7. சில நாட்கள் கொசுக்கடி இல்லாமல் இருந்தது இப்போது மீண்டுமா
  வீட்டுக்கு வீடு வாசப்படி இதையே தெலுங்கில் இண்டிக்கு இண்டி ராமாயணம் என்று சொல்வார்கள்
  எங்கே தேடுவேன் மாலவனே உன்னை எங்கே தேடுவேன்
  ஆபீசில் தூங்குவதற்கும் முதல் ராத்திரியில் விழித்திருப்பதற்கும் முடிச்சா
  பார்வை ஒன்றே போதுமே
  கைப்படாத காதலா பின் குழந்தைகள் பெற்றுக் கொள்வது எப்படி

  ReplyDelete
  Replies
  1. என் கடிக்கு கொசுக்கடியே பரவாயில்லையா :)
   லண்டனில் வீட்டுக்கு வீடு பைபிள் என்பார்களோ :)
   பர்கர் சாப்பிட வருவாயோ ,அங்கேயும் தேடுறேன் :)
   அது மூணு முடிச்சு போட்ட ராத்திரியாச்சே ,எப்படி தூக்கம் வரும் :)
   பல் ,ஆயிரம் இல்லை இல்லை கடியும் வேண்டுமா :)
   தாலி ஏறினால் லைசென்ஸ்தானே :)

   Delete
 8. எல்லாமே சிரிப்புதான்

  ReplyDelete
  Replies
  1. கடைசி மட்டும் காதலிக்கு வலைவிரிப்பு :)

   Delete
 9. ஓ...பெண போலீசின் கண்விழியும் பேசுச்சே...கெட்ட கெட்ட வார்த்தையால்...!!!

  ReplyDelete
  Replies
  1. அதுவும் அப்படி எல்லோரோடவும் பேசாதே :)

   Delete