4 March 2017

'டயாபெடிக் 'காரனின் மனநிலை :)

பையன் கேட்டதில் தப்பிருக்கா :)
           ''மாடுகளுக்கு  ஆடத் தெரியுமா ,பாடத் தெரியுமான்னு ஏண்டா கேட்கிறே ?''
           ''ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் ,பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்னு  சொல்றாங்களே !''

இப்படியும் பெருமையா சொல்லிக்கலாமா  :) 
          ''புருஷன் பஸ்லே வேலைப் பார்க்கிறதா அவ பீற்றிக்கிறாளே ,யூனிபார்ம் டிரஸ்ஸை அவர் போட்டுக்கிற மாதிரி தெரியலையே ?''
           ''பிக்பாக்கெட் வேலைக்கு யூனிபார்ம் எதுக்கு ?''

மனைவியின் சமையலும் வெறுத்து போச்சா :)
           ''என்னங்க ,ஊற வச்சாலே சோறாகும் அரிசியை அசாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சு இருக்காங்களாமே ?''
          ''அப்படியே காய்கறியையும் கண்டு பிடிச்சுட்டா , கண் காணாத இடத்துக்குப் போய் நானே சமைச்சு  சாப்பிட்டுக்குவேன் !''

'டயாபெடிக் 'காரனின் மனநிலை :)
இரத்த சர்க்கரை அளவு கண்ட்ரோலில் 
இருப்பது தெரிந்ததும் ...
இனிப்பாக ஒரு கப் காபி சாப்பிடத் தோன்றும் !

விவேகானந்தர் சொன்னதில் அர்த்தம் உள்ளது :)
நூறு இளைஞர்கள் என் பின் வரட்டும் 
நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ...
இது ,விவேகானந்தர்  அன்று சொன்னது !
இன்று லட்சம்  இளைஞர்கள் தயார்.. 
ஒரு 'விவேகானந்தரை'காணாம் !

16 comments:

 1. ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது...!

  என் புருஷனுக்கு ஓடும் பஸ்ஸில் பிக்கப் உத்தியோகம்...!

  பசியாத நல்வயிறா பாருங்களேன்...!

  அந்த சர்க்கரை... இந்த சர்க்கார்தானே இந்தப் பாடு படுத்துது...!

  விவேகம்...ஆனந்தர்... கம் இன்...!

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. உடம்பில் கொழுப்பும் சேராது :)

   பிக்கப் இல்லாத பஸ்ஸில் இதுவும் நடக்குதா :)

   பசிக்கும் போதே சோம்பேறியா திரியுறான் ,அதுவும் இல்லைன்னா :)

   சர்க்கரைதான் இனிப்பா இல்லே ,ஸ்மார்ட் கார்டு வந்தால் சரியாய் போகுமா :)

   கம் ஆன் என்று கத்தலாம் என்றால் குதிரைப் பந்தயம் கூட இல்லையே :)

   Delete
 2. ''புருஷன் பஸ்லே வேலைப் பார்க்கிறதா அவ பீற்றிக்கிறாளே ,//

  இனி இதுவும் நடக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. இப்போ நடக்காமல் இருக்கா என்ன:)

   Delete
 3. மாடுகளுக்குத் தெரிவது இருக்கட்டும். இவருக்கு ஆடவும், பாடவும் தெரியணுமே... எக்குத்தப்பாய் செய்து உதய் வாங்கி விட்டால்!!!

  பிக்பாக்கெட்டுக்கு பிளேட் படம் போட்ட டிஷர்ட் போடலாம்!

  சோறு வைக்கறது அவ்வளவு கஷ்டமா ஜி?

  அப்புறம் மறுபடியும் அளவு பார்க்கலாம்!

  அவர் கேட்டமாதிரி இளைஞர்கள் இல்லாமல் இருக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. மாடு டான்ஸ் ஆடினால் எப்படியிருக்கும் ?லுங்கி டான்ஸ் மாதிரி அதையும் கற்றுக் கொள்ளணுமோ:)

   அப்புறம் தொழில் எப்படி அவரால் பார்க்கமுடியும் :)

   அடுப்பு இல்லாமல் சோறு வைக்கிறது கஷ்டம்தானே :)

   பார்த்தால் மயக்கமே வந்திடும் :)

   நாட்டைத் திருத்துவதில் பேதம் வருமா :)

   Delete
 4. Replies
  1. இங்கேயே அந்த அரிசியைக் கொண்டு வரமுடியாதா :)

   Delete
 5. ஒரு 'விவேகானந்தரை' காணோம்!
  என்பதை விட
  ஜல்லிக்கட்டுக்கு எழுந்த
  இளைஞர் அணியாலே
  நாட்டையே மாற்றிக் காட்டலாமே!

  ReplyDelete
  Replies
  1. தலைமைக்கு ஒரு நல்லவர் இருந்தால் சாதிக்கலாம் தானே ;)

   Delete
 6. பால்கறக்க ஆடற மாதிரி ஆடவும் பாடற மாதிரிப் பாடவும் தெரிஞ்சிருக்கணும்
  ஆளின் வேலை எது என்று தெரியாமல் இருப்பது தானே பஸ் வேலைக்கு முக்கியம்
  அங்கும் மனைவி தேவையாக இருக்கும்
  இனிப்பான காஃபி சுவைக்காதே
  பாவம் விவேகாநந்தர் விவரம் தெரியாமல் ஏதோ சொன்னதைப் பிடித்துக் கொண்டு......

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் கிராமராஜன் ஆகமுடியுமா :)
   எந்த ஆளின் வேலையென்று தெரியாமல் முழிப்பதுதானே பாமரன் நிலை :)
   அவ்வளவு சோம்பேறித்தனமா:)
   சுவையான காபி போதும் :)
   கனவு கண்டாரா :)

   Delete
 7. கண்டேன்!நன்று முற்றும்

  ReplyDelete
  Replies
  1. முற்றும் நன்று என்பது தானே அய்யா பொருத்தம் :)

   Delete
 8. அருமை யோ அருமை

  ReplyDelete
 9. எனக்கு வர மாட்டேங்குதே ,ஏன் ?''//

  போதும் என்ற மனம் இருந்தால் நல்ல தூக்கம் வரும். சரிதானே?

  ReplyDelete