12 March 2017

முதல் ராத்திரியில் இப்படியா பேசுவது :)

1
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
நம்பிக்கை மோசடி செய்த ராசிபலன்:) -
 12/12
Who Voted?Bagawanjee KA

2
Total pageviews     666666 
3
பகல் வெளிச்சம் போல் வராதோ  :)                   ...மேலும் வாசிக்க
 

     
இந்த முப்பெரும் சாதனை ,வலையுலக உறவுகளால் வந்தது ,நன்றி !உறுதுணையாய் இருந்த தமிழ்மணத் திரட்டிக்கும் நன்றி!!

பசங்களுக்கு 'கட் 'அடிக்க சொல்லியாத் தரணும்:)               
                  ''நாமதான் வீட்டுப் பாடம் செய்துகிட்டு வந்திருக்கோமே ,ஏண்டா வெளியே எடுக்காதேன்னு சொல்றே ?''

                  ''செய்யாதவங்க  எல்லாம் வகுப்பை விட்டு வெளியே போங்கன்னு வாத்தியார் சொல்றாரே !''

படிச்சா மண்டைக் காயும் ,பரவாயில்லையா :)
                '''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
                 ''காய்ஞ்ச எள்ளுலேர்ந்து எண்ணெய் வரும்னு தெரியும்  ,புழுக்கை ஏன் காயுதுன்னு  எலியைத்தான் கேட்கணும் !''

 முதல் ராத்திரியில் இப்படியா பேசுவது  :)      
                  ''நேற்றுதானே  கல்யாணம் ஆச்சு ...டாஸ்மாக்கில்  வேலைப் பார்க்கிறவரை  கட்டிக்கிட்டது வம்பா போச்சா ,ஏண்டி ?''
                  ''நான் , சரக்கை வேணும்னா  'விட்டுக்' கொடுப்பேன் , உனக்காக எதையும்  'விட்டுத்' தர மாட்டேன்னு சொல்றாரே !''
'புரிந்துணர்வு ஒப்பந்தம் 'னா புரிங்சுக்கிடணும் :)
          ''அந்த காலத்திலே நல்ல நல்ல காரியம் நடந்தது ...இப்போ  எதை எடுத்தாலும் ஊழல் ,லஞ்சமுமா இருக்கே ,ஏன் ?''
         ''இது 'புரிந்துணர்வு 'ஒப்பந்தம்  போடுற  காலமாச்சே !''

இதுவும் 'குடிக்காதே 'என்பதை போலத் தானா ?:)
  மக்கள்  தொகையை கட்டுபடுத்த 'கு . க ' திட்டம் கொண்டு வந்த அரசு...
  பாலிதீன்  பை உற்பத்தித் தடைச் சட்டம் கொண்டு வரலாமே ?
  உற்பத்தி செய்வானேன் ?உபயோகப் படுத்தாதே என்பானேன் ?

32 comments:

 1. வாழ்த்துகள் ஜி...

  ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் 'ஜோக்காளி'யில் தமிழ்மணப் பட்டையை இணைத்து தந்தவராச்சே ,உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி :)

   Delete
 2. முதற்கண் அதிகப் பரிந்துரைக்கு எங்கள் வாழ்த்துகள்.

  வகுப்பை விட்டு வெளியே போகும் சுவாரஸ்யத்துக்காக நானும் இந்த வேலை செய்ததுண்டு.

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பரிந்துரைக்கு வர உதவும் உங்களை எப்படி மறக்க முடியும் :)

   என் கற்பனையை உண்மையாக்கி விட்டீங்களே ஜி :)

   Delete
 3. கவனிக்க + இணைக்கவும் :-

  Total Pageviews - Side Gadget

  ReplyDelete
  Replies
  1. இணைச்சாச்சு ஜி :)

   Delete
 4. “ஐ சே யு கெட்அவுட்...” என்ன தமிழ் அய்யா இங்கிலிஷ் எல்லாம் பேசுறாரு...?! அய்யா...!

  எள்ளுல இருந்து எண்ணெய் வரும்... என்ன நல்ல எண்ணெய்யா...? எலிப் புழுக்கை கலந்தாலுமா...?! இந்த லொள்ளுதானே வேணாங்கிறது...!

  “கிண்ணத்தில் தேன்வடித்து கைகளில் ஏந்துகிறேன் எண்ணத்தில் போதைவர எங்கெங்கோ நீந்துகிறேன்...
  நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்...” ரச(னை)வாதியா இல்லையோ...?!

  சமாதியில் அடிச்சு... அடிச்சு... அடிச்சு... சத்தியம் செய்தாலும்... ஊழல்வாதிகளின் தலைமையில்தானே நாடு தலைநிமிர்ந்து நடக்கிது...! எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...!
  தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா...!

  புகை... குடி... சாவு... சாகடி... ‘நெகிழி’செய்... செத்துமடி...யவை...!

  த.ம. 4
  ReplyDelete
  Replies
  1. அந்த கிழம், ஆங்கிலத்தில் சொன்னாலென்ன தமிழில் சொன்னாலென்ன ,ஜாலிதான் :)

   புழுக்கை எண்ணெய் என்றாலும் யாருக்குத் தெரியப் போகிறது :)

   போதை பேச்சு கேட்டு கேட்டு அலுத்துப்போய்விட்டாரோ :)

   இப்பவே வெறுத்துட்டா எப்படி ,இன்னொரு முதல்வரையும் பார்க்க வேண்டியிருக்கே :)

   அரசின் கொள்கை நெகிழ வைக்குதே :)

   Delete
 5. வணக்கம்
  ஜி

  வாசகர்களின் எண்ணிக்கை அதிகம் என்னும் போது மிக்க மகிழ்வு.... ஏனைய பதிவுகளை படித்து மகிழ்ந்தேன் த.ம 5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சோறாக்குவதன் பலன் ,பல பேரின் வயிற்றை நிரப்பினால் தானே கிடைக்கும் :)

   Delete
 6. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. நெகிழி போல் நெகிழ்ந்து போனேன் ஜி ,உங்கள் வாழ்த்தினால் :)

   Delete
 7. Replies
  1. சூரஜ் குண்டு பிள்ளையாரே வந்து வாழ்த்தியதை போல் இருக்கே ஜி :)

   Delete
 8. முப்பெரும் சாதனைகள் புரிந்த
  தனிப்பெரும் நாயகருக்கு வாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. சாதனைகள் தொடர உங்களின் தொடர் ஆதரவை வேண்டுகிறேன் :)

   Delete
 9. Replies
  1. உங்களின் மௌனத்தை சம்மதமாய் நினைக்கிறேன் :)

   Delete
 10. Replies
  1. சாதனைகளையும் தானே ஜி :)

   Delete
 11. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்குரிய சாதனைதானா இது ,சொல்லுங்க ஜி :)

   Delete
 12. கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை//

  தொடர்ந்து மகுடம் சூட வாழ்த்துகள் பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தன்னம்பிக்கை பதிவைக் கண்டு ஊக்கத்துடன் தொடர்கிறேன் :)

   Delete
  2. வாழ்த்துக்கள் வெற்றி கிடைக்கும்

   Delete
  3. வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் ,அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களைச் சேரும் :)

   Delete
 13. ரசித்தேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜி :)

   Delete
 14. இன்றைய எனது பதிவில் [http://dindiguldhanabalan.blogspot.com/2017/03/Poottu.html] ஸ்ரீராம் அவர்களுக்கு சொன்ன மறுமொழி உங்களுக்கும் தான் ஜி...

  நீங்கள் அது போல் செய்தால் இந்நேரம் உங்களின் பக்கப்பார்வை இரண்டு மடங்காகி இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. இன்றே செய்து விட்டேன் ஜி !நேற்றுதான் பக்கப் பார்வை 666666 யைத் தாண்டினேன் ..இதை முன்பே செய்து இருந்தால் ....அய்யோ அய்யோ..போச்சே போச்சே ...தருமி மாதிரி புலம்புவதைத் தவிர வேற வழியில்லையா :)

   Delete
 15. சாதனைகள் தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வயதும் ,எழுத்தும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறதே :)

   Delete