7 March 2017

ஆதர்ச தம்பதிகளா இவர்கள் :)

இது பாசமில்லே ,பயம் :)
          ''பெண்டாட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறீங்களே ,அவ்வளவு பாசமா ?''
          ''அட நீங்க வேற ,ஆசையா கேட்டதை வாங்கித் தரலைன்னா ஏழு ஜென்மத்திலேயும் இவதான் பெண்டாட்டியா வருவான்னு ஜோதிடர் சொல்றாரே !''


எவ்வளவு நேரம்தான் சீரியலைக் கட்டி அழுவது :)
         ''நம்ம வீட்டு விஷயம் வெளியே போகக்  கூடாதுன்னு ,வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப ஏன் அவளை வேண்டாங்கிறே ?''

          ''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரியாம ,ரொம்ப போரடிக்குதே !''
ஆதர்ச தம்பதிகளா இவர்கள் :)
         ''நீ பாதி,நான் பாதின்னு வாழ்வது  நல்லதுதானே ,அதுக்காக அந்த தம்பதிகள் மாதிரி இருக்ககூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
        ''ஒரு பாட்டில் ஃபுல் வாங்கி ஆளுக்கு பாதியை  ராவா அடிக்கிறாங்களே !''

கணவன் போட்ட கலக்கல் டீ :)
            ''என்னங்க ,டீ இவ்வளவு  மோசமா இருக்கே ,எப்படி போட்டீங்க ?''
            ''பால் கொதிக்கும் போது சீனியும் ,வடிச்சப்பிறகு டீத் தூளையும் ஏதோ ஞாபகத்தில் போட்டு கலக்கிட்டேன் !''

எமனிடமே சரண்டர் எனில் தப்பிக்க முடியுமா :)
ஒரிஜினல் மருத்துவரே சிலநேரம் எமன் ஆகிவிடுகிறார் ...
போலி மருத்துவரை என்னவென்பது ?
எமனின் பினாமி என்பதை தவிர !

28 comments:

 1. வணக்கம்
  ஜி

  படித்து இரசித்தேன் ஜி வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசித்து சிரிக்கலையா ரூபன் ஜி :)

   Delete
 2. ரசித்தேன் ஜி.

  தம காணோம்!

  ReplyDelete
  Replies
  1. இப்போதுதான், ஒரு வழியாக தமிழ்மணத்தில் பதிவை இணைத்து த ம வை கொண்டு வந்துவிட்டேன் ஸ்ரீ ராம் ஜி :)

   Delete
 3. இவர்களல்லவோ 'தம்பதிகள்'...!

  ReplyDelete
  Replies
  1. பெட்டர் ஹாப் என்பதை நிரூபித்து விட்டார்களே :)

   Delete
 4. ஜென்மப் புத்திய செருப்பால் அடிச்சாலும்... போகாதே...!

  எது நடந்தாலும் வெளியே சொல்லாம மனசுக்குள்ளே சிரிக்கிறா... சிரிக்கிறா... சிரிக்கி...றா...!

  என்னதான் இருந்தாலும் ராவில் ராவா அடிக்கிறது தப்புதானே...!

  ராவா அடிக்கக்கூடாதுங்கிறதுனால கலக்கல்டீ... தண்ணி கொஞ்சம் ஓவர்... ஆயிடுச்சு... அதான்டீ...!

  எப்படியும் ஜனத்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியலையே...! முடியலை...!

  ReplyDelete
  Replies
  1. ஏழு ஜென்மம் எடுத்தாலும் போகாதோ :)

   ஏதோ வம்பு தும்பு நடக்குது போலிருக்கே :)

   பகல்லே அடிச்சா பரவாயில்லையா :)

   என் தலைஎழுத்து டீ போடக் கூட துப்பில்லே:)

   இப்படியும் மாற்றி யோசிக்கிறதோ அரசு :)

   Delete
 5. உண்மையான ஆதர்ச தம்பதிகள் இவர்கள்தான்னு தெரிந்து கொண்டேன் தலைவரே... இருந்தால் இவர்களைப்போல் இருக்க வேண்டும் தலைவரே...

  ReplyDelete
  Replies
  1. அந்த கொடுப்பினை ,உங்களுக்கும் எனக்கும் இல்லாம போச்சே :)

   Delete
 6. ''ஒரு பாட்டில் ஃபுல் வாங்கி ஆளுக்கு பாதியை ராவா அடிக்கிறாங்களே !''//

  அடக் கடவுளே!!!

  ReplyDelete
  Replies
  1. பிள்ளைங்க என்ன பண்ணுமோ :)

   Delete
 7. Replies
  1. எமனின் பினாமிகளுமா :)

   Delete
 8. சொன்னது சோலந்தூர் சோஸியரா ?

  ReplyDelete
  Replies
  1. வேற யார் இப்படி அள்ளிவிடப் போறாங்க :)

   Delete
 9. அனைத்துமே அருமை வழக்கம்போல. மனைவியின் பாசம்...அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு பாசம் இருந்தால் கணவன் இப்படி செய்திருக்கக் கூடும் :)

   Delete
 10. பயமுறுத்தியோ பாசம் காட்டியோ பெண்டாட்டி வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறாள்
  மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை
  குளிர் பானமா
  நம்பமுடியவில்லை
  மருத்துவர்களை தெய்வத்துக்கு ஈடாக நினைப்பவர்கள் மத்தியில் இவர்களும்

  ReplyDelete
  Replies
  1. இந்த உரிமைக் கூட பெண்டாட்டிக்கு இல்லையா :)
   அடுத்த வீட்டு வம்புக்கும் ஆசையா :)
   குளிர்பானத்தை ராவா குடிச்சா தப்பில்லையே :)
   அதிசயங்களை நம்ப முடிவதில்லை :)
   தெய்வத்தை நம்பாதவனும் மருத்துவரை நம்பித்தானே ஆகணும் :)

   Delete
 11. Replies
  1. தமிழ் மணம் மீண்டு வருமா என்பதே சந்தேகமா இருக்கே ஜி :)

   Delete
 12. அருமை அருமை அனைத்துமே அருமை

  ReplyDelete
  Replies
  1. அந்த டீயைத் தவிர ,அப்படித்தானே :)

   Delete
 13. கலக்கல் டீ
  குடிச்ச பெண்டாட்டி
  கணவனை
  திட்டித் தீர்ப்பாளோ - அதையும்
  கணவனிடம் கேட்டால்
  சொல்லுவாரா

  ReplyDelete
  Replies
  1. ஏதோ ஞாபகமாய் டீ போடலாம் ,பெண்டாட்டியின் அர்ச்சனையை மறக்க முடியுமா :)

   Delete
 14. புகைப்படம் வாயிலாக பயமுறுத்துகிறீரே நகைச்சுவைகள் நன்று

  ReplyDelete
  Replies
  1. அழகு பிசாசைப் பார்த்தா பயமாயிருக்கா :)

   Delete