24 April 2017

இராத்திரி 12 மணிக்கு கதவைத் தட்டலாமா :)

செருப்புக்குப் பதிலா இதுவா :)             
                ''மந்திரி மேலே ஏன் நூலையும் ஊசியையும் எறியுறாங்க ?''
                ''உருப்படியா ஒரு காரியமும் செய்யலைன்னாலும், பேச்சு மட்டும்  வாய் 'கிழிய ' பேசுறாராமே!''
இந்த ஐடியாவின் காப்பிரைட்  எனக்கே :)          
             ''நீரிழிவு நோயாளிகளின் ஒட்டு மொத்த வாக்குகளையும்  அந்த கட்சி அள்ளிடுமா,ஏன் ?''
            ''தேவைப்படுவோர்க்கு , ரேஷனில் சீனிக்குப் பதிலா  சுகர் ப்ரீ  மாத்திரை தருவோம்னு தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருக்காங்களே !''

முட்டாள்களை வேலை வாங்க முடியுமா :)
          ''என்னை ஏன் வேலையிலிருந்து  நீக்குறீங்க ,முதலாளி ?''
          '' ஃபோர்மேனைக் கூப்பிடுன்னு சொன்னா ,நாலு பேரைக் கூட்டி வர்றீயே !''

சம்பாதிக்க முடியாதவனை ஆம்பளையான்னு மனைவி கேட்கிற மாதிரி ....!
          '' பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்குப்  பணம் கிடைக்கலை போலிருக்கா ,ஏன் ?''
          '' பணம் தர வக்கற்றவன்  எல்லாம் தேர்தல்லே ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுகிட்டு இருக்காரே !''

இராத்திரி 12 மணிக்கு கதவைத் தட்டலாமா :)
             ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
             ''ஒண்ணாம் தேதி பிறந்ததும் இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்து கதவை தட்டுகிறாரே !''

விண்மீன் உயரத்தில் மீன் விலை !
உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் 
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும் 
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?

இதான் ,நம்ம அதிரா பூஸ்>>>
பூசார் ஓடியே விட்டார் ,நான் அழைத்தாலும் வர மாட்டேனென்று :)

சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்து, அதிரா பூசாரை இழுத்துட்டு வந்துட்டேன் ...ங் கொய்யாலே ,மதுரகாரன் கிட்டேவா:) 

41 comments:

 1. ஆவ்வ்வ்வ் என்னாச்சு இன்று டமில்மணத்துக்கு?:).. நான் இணைக்க ட்ரை பண்ணினேன் முடியல்ல.. இப்போ இணைச்சிட்டீங்கபோல.. மீ 1ஸ்ட்ட்ட்ட்ட் என்பதை சொல்லிக்கொண்டு...:).. நல்லாத்தால் ஹெடிங் போட்டு.. நடுச்சாமத்தில போஸ்ட்டும் போட்டு மிரட்டுறீங்க ஹா ஹா ஹ...:)

  ReplyDelete
  Replies
  1. 12மணிக்கே வந்து கதவு தட்டினது நீங்கதானா ,அதிரா :)
   நேற்று சண்டேயாச்சே,மட்டன் சாப்பிட்ட அசதியில் சீக்கிரமே தூங்கிட்டேன் ,தமிழ் மணமே பதிவை சேர்த்துக்கட்டும் னு நினைச்சா,அரையும குறையுமா முகப்பில் தெரியுதே :)

   Delete
  2. ஆடு சாப்பிடாதீங்க எனச் சொன்னால் யாரு கேக்கிறா என் பேச்சை:).. அதனாலதான் சாமமா இருக்கே எனப் பயந்து வந்தா, மே...மே... எனச் சத்தம் மட்டும் கேட்டுது.. ஆள் அரவமே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. டமில் மணத்தோடு போராடி அப்போ இணைச்சது நானாத்தான் இருக்கும்.. அதுக்காக பரிசைக் கொடுங்கோ நான் சீக்கிரம் போகோணும்:).

   Delete
  3. பரிசா ....அரையும் குறையுமா சேர்த்தது நீங்கதானா ?கோவத்துலே தேம்ஸ்லே தள்ளிடப் போறேன் ,தள்ளியே நில்லுங்கோ :)

   Delete
  4. என்னாது அரையும் குறையுமாவோ கர்ர்ர்ர்:) சேர்க்க மாட்டேன் என அடம்புடிச்சுது .. கஸ்டப்பட்டு சேர்க்கப்பட்ட பாடு எனக்கெல்லோ தெரியும்:).. உங்களுக்கென்ன மட்டினை சாப்பிட்டிட்டுத் தூங்கிட்டீங்க..:). சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ச்:).

   Delete
  5. சும்மா தமாசுக்கு சொன்னேன் , தமிழ்மணம் செய்த தவறுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும் அதிரா :)
   உங்களிடம் எனக்கு பிடித்ததே ஊர் வம்ஸ்ஸ்ச்தான் ,அதுவும் அஞ்சுவை வம்புக்கு இழுத்தால் ரொம்பவே பிடிக்கும் :)

   Delete
  6. //உங்களிடம் எனக்கு பிடித்ததே ஊர் வம்ஸ்ஸ்ச்தான் ///

   https://pbs.twimg.com/media/C6PkpoBXEAAMlWy.jpg

   Delete
  7. https://pbs.twimg.com/media/C6PkpoBXEAAMlWy.jpg.இதை ஓபன் பண்ணிப் பார்த்தேன் ,போக்கிரிப் பூனை கடிக்க பாய்ந்து வருதே ,கூகுள் ஆண்டவரே காப்பாற்று :)

   Delete
  8. ஹா ஹா ஹா தப்பாக புரிஞ்சிட்டீங்க:).. பூஸ் கடிக்க வரவில்லை... தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் எனத் தப்பி ஓடுது:)..

   Delete
  9. அப்படியா ,தளத்தில் பூஸ் படத்தைப் போட்டு விட்டேன் ,நம் வலை உலக உறவுகளே முடிவு சொல்லட்டும் :)

   Delete
  10. ///சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்து, அதிரா பூசாரை இழுத்துட்டு வந்துட்டேன் ...ங் கொய்யாலே ,மதுரகாரன் கிட்டேவா:) ///
   ஹா ஹா ஹா இப்போதான் பார்த்தேன்:)

   Delete
 2. மீனுக்கு மட்டுமல்ல
  வாழ்விலும்
  தரகர் தொல்லை தான்

  ReplyDelete
  Replies
  1. தரகர்கள் சுயநலத்துக்கு பலிகடா ஆவது என்றுதான் ஒழியுமோ :)

   Delete
 3. ரசித்தேன் ஜி.

  இன்று மின்னல் வேகத்தில் தம வாக்கு விழுந்து விட்டது!

  ReplyDelete
  Replies
  1. வாக்கு பெட்டியில் ஏதோ கோளாறு இருக்கே ,செல்லாத வாக்கு விழுந்த மாதிரி காட்டுகிறதே :)

   Delete
 4. வேலைக்காரன் இங்கிலீஷும் தெரிஞ்சவனோ ?

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு இங்கிலீசைத் தெரிஞ்சிக்காமலேயே இருந்திருக்கலாம் :)

   Delete
 5. Replies
  1. படமும் இதயத்தைத் தைத்து இருக்குமே :)

   Delete
 6. முந்தையத்தின் தொடர்ச்சியா ஜி!! சுகர் பிரீ ரேஷன்ல ....ஆஹா...

  4மென் ரசித்தோம்....

  அணைத்ட்ஹ்உம் ரசித்தோம் ஜி

  இணையம் சரியாக வேலை செய்யாததால்....வரும்...வராது போல...வேலை செய்வதால் மோவைளில் இருந்து கருத்து....த ம பிட முடியவில்லை...சில நாட்களாகவே...

  ReplyDelete
  Replies
  1. நீரிழிவு வந்தால் போகாது ,நீரிழிவு மொக்கைகளும் தொடர்ந்து வரும் :)

   மென் இன் பிளாக் மாதிரியிருக்கா :)

   Delete
 7. நீ படிச்சுக் கிழிச்சது போதுமுன்னு சொல்லிட்டாங்களாம்...!

  சுகருக்கு பிரியா மாத்திரை கொடுத்திட வேண்டியதுதானே...!

  ரொம்ப போரடிக்கிதா மொதலாளி...!

  பணம் இன்னும் வந்து சேரலை... அதுக்குள்ள தேர்தலுக்குத் தடையா?! அவசரப் பட்டுட்டீங்களே...!

  சில்லரை புத்தி உள்ளவர் என்பதற்காக வாடகையை சில்லரைக் காசாகக் கொடுக்கிறாரே...!

  வேலை செய்றவனுக்கு வேலை கொடு... வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு...!

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. செல்லப்பா சாரின் 'எழுதிக் கிழிச்சது 'பதிவைப் படிச்சிருப்பாரோ :)

   தெர்மகோல் திட்டச் செலவே பத்து லட்சம் ,இதுக்கு எவ்வளவு ஆகுமோ :)

   நாலு பேரோட பேசிட்டு இருங்கோ ,போரடிக்காது :)

   நமக்கு எதிரி தேர்தல் ஆணைய்ம்தானா :)

   அதிலும் நாணயமா :)

   வேலை இல்லாதவன் கொள்ளை அடிக்கட்டுமா:)

   Delete
 8. ரசித்தேன்,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  Tamil News

  ReplyDelete
  Replies
  1. ரசித்த எதையாவது சொன்னால்தான் நம்புவேன் :)

   Delete
 9. Replies

  1. #வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் ஒரே தினம். அது ஏப்ரல் 23. அந்த நாள் தான் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது#
   உங்களின்'தமிழ்ப் பூ'வலைப் பூவின் மூலமாக மூன்று தகவலை அறிந்தேன் அய்யா ,நன்றி :)

   Delete
 10. '' பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்குப் பணம் கிடைக்கலை போலிருக்கா...//

  எனக்கும் இதுவரை யாரும் பணம் தரவே இல்லை!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இருப்பது கரூர்தானே ?போன முறை பல கோடி பணம் பிடிபட்டு ,தேர்தல் தள்ளிப் போனது அங்கேதானே :)

   Delete
 11. முதல் ஜோக் காலத்திற்கேற்றவாறு உள்ளது

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஏதாவது செய்தாலும் தெர்மகோல் திட்டம் போலத்தானே இருக்கு :)

   Delete
 12. என்னது ராத்திரி 12 மணிக்கா..... சம்திங் ராங்...இதிலே....மர்மம் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் சந்தேகப் படுவதால் ,உண்மையை விசாரிக்கிறேன் :)

   Delete
 13. tamilmanam - 11
  மிக ரசித்தேன் அனைத்தும் நல்லது சகோதரா.
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. நீங்களே பதிவைப் போட்டு இருக்கீங்களே ,ஆசியான வாசிப்பு என்று :)

   Delete
 14. கஷ்டப்பட்டு பின்னூட்டம் எழுத வேண்டி இருக்கு என்ன எழுதுவது என்று ம் தெரியவில்லை இப்போதைக்கு பதிவைப் படித்து
  ரசிச்சேன் என்பது மட்டும்

  ReplyDelete
  Replies
  1. எதையும் இஷ்டப் பட்டு செய்ஞ்சா கஷ்டப் பட வேண்டியிருக்காது ...வசனம்தான் நினைவுக்கு வருது :)

   Delete
 15. வணக்கம் ஜி !

  எல்லாம் அசத்தலா இருக்கு அதிலும் வாடகைப்பணம் கொடுப்பவரின் நேர்மை மெய்சிலிர்க்க வைக்கிறது (ராத்திரி நேரத்து பூசையில் பாடல் நினைவுக்கு வருது ) மீனவர் பிரச்சினை சிந்திக்கவைக்கிறது ! வாழ்த்துகள்
  தம +1

  ஆமா பூசாரி வம்புக்கு இழுக்குறீங்க நல்லதுக்கு இல்ல ஜி அப்புறம் நடக்கப்போகும் விபரீதத்துக்கு நான் பொறுப்பல்ல ஆங் ...

  ReplyDelete
  Replies
  1. அந்த பாட்டை விட ,அந்த நடனம் ரசிக்க வைத்தது :)

   தேம்ஸ் பக்கம் நான் வர்றதா இல்லையே ,என்னை தள்ளி விட முடியாதே :)

   Delete
  2. அப்போ கூவம்தேன்ன்ன்:)

   Delete
  3. வைகையே பெட்டர் ,என்னா ஒரு சொட்டு தண்ணி இல்லே :)

   Delete