2 April 2017

143 vs 144 :)

 இப்படியா குத்திக் காட்டுவது  :)      
             ''நான் , பஸ் டிரைவரானதும்  நல்லதுதானா .... ஏன்  ?''
              ''ரயில் டிரைவர் ஆகியிருந்தால் , ஸ்டேசனைத்  தாண்டித்தான்    ரயில்  நிற்கும் போலிருக்கே !''

வேறெந்த உயிரினத்தை எப்படி கூப்பிட்டால் வரும் :)          
         ''அதிக அறிவுள்ளது  காக்கான்னு எப்படி சொல்றீங்க ? ''                      
         ''கா கா ன்னு கத்தினால் காக்காக்கள் வந்திடுதே !''

பெண் காதலிப்பது வீட்டுக்கு தெரிந்தால் :)
         "என்னடா சொல்றே , 143 ன்னு சொன்ன  உன்  காதலிக்கு  144 ஆ?''
         "என் கிட்டே அவ 'I LOVE YOU'ன்னு சொன்னது தெரிந்ததால் ,வீட்டுக்கு  வெளியே போகக் கூடாதுன்னு அவளுக்கு 'தடை உத்தரவு 'போட்டுட்டாங்களே !"  

விளையாட்டுப் பிள்ளைன்னு முடிவு பண்ணிட்டாங்களா :)
        ''தலைவர் 'மீடியா''க்கள் மேல் ஏன் கோபமா இருக்கார் ?''
       ''அவரோட பேட்டி ,அறிக்கைகளை எல்லாம் விளையாட்டு செய்திகளில் சொல்றாங்களாமே !''

இது நடிகைக்கு மட்டுமல்ல ,அனைவருக்கும் !
பணம் சம்பாதிக்க வெட்கத்தை விட்டால் ..
பல வழிகளிலும் பணம் வரும் ...
வெட்கம் வரவே வராது ... 
அது போனது ஒரு வழிப் பாதை என்பதால்  !

20 comments:

 1. ''கா கா ன்னு கத்தினால் காக்காக்கள் வந்திடுதே !''
  அதுதாங்க ஒற்றுமை
  தெருவைச் சுத்தப்படுத்த வாங்க வாங்க என்றாலும்
  நம்மாளுங்க வரமாட்டாங்க...
  அதுதாங்க ஒற்றுமை இன்மை!

  ReplyDelete
  Replies
  1. நம்ம பேர் காக்கான்னு தெரிந்து வைத்திருக்கே :)

   Delete
 2. Replies
  1. ஓட்டுனர் செய்கை தவறு தானே :)

   Delete
 3. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  வோட்டுப் போட்டபிறகும் தம வாக்குப்பட்டை காணாமல் போகாமல் காட்சியளிக்கும் வெகுசில தளங்களில் உங்கள் தளமும் ஒன்று. இன்று என்னமோ 'தம' மின்னல் வேகத்தில் விழுந்து விட்டது!

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் பகவான்ஜியிடம் பயப்படத்தான் செய்கிறது நண்பரே

   Delete
  2. எல்லாம் அந்த கூகுள் ஆண்டவரின் கருணைதான் , ஸ்ரீராம் ஜி :)

   Delete
  3. தமிழ்மணமே இன்றோ நாளையோ என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே ,கில்லர்ஜி :)

   Delete
 4. வெட்கம் ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. சோவின் யாருக்கும் வெட்கமில்லை நினைவுக்கு வருதா :)

   Delete
 5. எனக்குப் பிடிக்காததது பிரேக்தான்...!

  காக்கா பிடிப்பது இப்படித்தானோ...?! காக்கா கூட்டத்தை பாருங்க... அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க...?

  எல்லாத்துக்கும் 111 போட்டுட்டு ஓடிப்போயிக் கல்யாணம் கட்டிக்கிட்டா... பதிபக்தியுடன் திருப்பதியில...!

  விளையாடுறதுக்கு இதுவா நேரம்... தலை போற விஷயம் தலைவரே...!

  மானம்... வெட்கம் கெட்டு டாஸ்மாக் கடைய வருமானத்துக்காக நடத்தினாலும் ... மானமுல்ல நீதிமன்றம் மனித உயிர்தானே பெரிசுன்னு கடைய மூடச் சொல்லிடுச்சே...! ரோட்டோரம்.... இனி கூவி கூவி விக்க முடியுமா...? ஈடு செய்ய முடியாத இழப்பா இருக்கே...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு பிடிக்காட்டி பரவாயில்லை ,பிரேக்கே பிடிக்காத வண்டியை ஓட்டி சாவடிக்காதீங்க :)

   காக்கையை காக்கா பிடிச்சு என்ன ஆகப் போகிறது :)

   மலையை விட்டு இறங்குவதற்குள் மாற்றம் வருமா :)

   விடுங்க ,அறிக்கை விட்டு என்ன மாற்றம் வரப் போவுது :)

   ஏற்கனவே கஜானா காலி ,இது வேறையா :)

   Delete
 6. ....அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. மீடியா தலைவர் காலை வாருவதை ரசிக்க முடியுதா :)

   Delete
 7. கா-கா- அருமை மற்றவையும் அருமையோ அருமை

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் நீங்க இப்படி காக்கா பிடிக்கக் கூடாது :)

   Delete
 8. என்னாது 143 என்றால் ஐ லவ் யு அர்த்தம்மா...அடே...இது எப்ப கண்டுபிடித்தது....

  ReplyDelete
  Replies
  1. உலகத்தில் வாழ்கிறீர்களா ,உறக்கத்தில் வாழ்கிறீர்களா :)

   Delete
 9. ....அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஜோடிக் கரங்களும் அருமைதானே :)

   Delete