10 April 2017

ரஜினி ரசிகர் என்பதற்காக இப்படிப் பாடலாமா :)

குடிகாரன் என்பதை இப்படியா குத்திக் காட்டுவது :)       
           '' பால் கார்டு வாங்கப் போற அப்பா ,பால் பூத் நம்பரைக் கேட்டா ,ஏம்மா எரிஞ்சு விழுறே ?''
           ''மாசாமாசம் சொன்னாலும் மண்டையில் ஏற மாட்டேங்குது ,டாஸ்மாக் கடை நம்பரைச் சொன்னா போதும்  ,அது இருக்கிற இடத்தை  சரியா சொல்றாரே !''

மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை :)
          "என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே ஒற்றுமையா  இருக்காங்களா ,எதிலே?"
          "புருசன்களை திட்டுவதில் தான் !" 

கணவர் ரஜினி ரசிகர் என்பதற்காக இப்படிப் பாடலாமா :)
      ''உன் புருஷன்  இமயமலைக்கு போகத்  துடிக்கிறாரா ?'சேலை சோலையே 'ன்னு பாடிகிட்டு ,உன்னை சுற்றிச் சுற்றி வந்தவராச்சே அவர் ?''
      ''இப்போ 'சேலையில் சிக்கிக் கொண்டா  சொர்க்கத்தின் வழியேதும் தெரியாது'ன்னு  பாட ஆரம்பித்து விட்டார்டி!''

'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைச்சிக்குங்க :)
           ''என்னங்க ,அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன சொல்லி உங்களைத் திருத்தினார் ?''
         ''பசியும்  ,ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு ...கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி ,பசிச்சா மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே !''

தானாடா விட்டாலும் தன் சதை ஆடுமோ :)
மேடையில் முழங்கும் தலைவர் ...
தன்னையறியாமல்  ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் ...  
''பாரதி அன்றே சொன்னார்  ,
பெண்மை வாழ்கவென்று கூத்தடிப்போமடா ''என்று !

18 comments:

 1. 1. ஹஹஹ் அதானே

  2. ஹஹஹ்

  4 நொறுக்குத் தீனி அட்வைஸ் நன்று...

  அனைத்தும் ரசித்தோம்..ஜி

  ReplyDelete
  Replies
  1. சும்மாவா சொன்னார்கள் ,பாலை கூவித்தான் விற்க வேண்டுமென்று :)

   ஒற்றுமை ஓங்கட்டுமா:)

   வாய் எங்கே அடங்குது :)

   Delete
 2. //பசியும் ,ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு// தத்துவத்தை ரசித்தேன். வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இனி ஃபிரிட்ஜ் திறக்கும் போதெல்லாம் இது ஞாபகத்துக்கு வரும் ,அப்படித்தானே :)

   Delete
 3. மண்டையில அதுதானே நல்லா ஏறுது...!

  எ புருஷன் எனக்கு மட்டும்தான்... திட்டுவதற்கு...!

  இது சொர்க்கத்தின் திறப்பு விழா...!

  பல்பு பியூஸ் போயிடுச்சு டாக்டர்...!

  "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

  த.ம. 5


  ReplyDelete
  Replies
  1. எது தேவையோ அது ஏற மாட்டேங்குதே :)

   தாலி கட்டியவளுக்கு இல்லாத உரிமையா :)

   சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல் ஆகாதாமே :)

   பியூஸ் இல்லாட்டி அது யுஸ்லஸ்,வீசிப் போடுங்க :)

   கூத்தடிப்பது ரிசார்ட்டில் என்றாலும் வெளியே தெரியாமல் போகாது :)   Delete
 4. Replies
  1. மனோ தத்துவ டாக்டரின் உத்தியையும் தானே :)

   Delete
 5. அனைத்து பதிவு க்கு மிக மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. பால் பூத் நம்பர் மறக்கக் கூடாதது தானே :)

   Delete
 6. மாசாமாசம் சொல்வதற்கும் தினமும் போகுமிடம் தெரிந்துகொள்வதும் ஒன்றாகுமா
  அவரவர் புருஷர்களைத்தானே
  இந்தப் பாட்டெல்லாம் கேட்டது இல்லை
  பல்ப் எரியாவிட்டால் பசி எடுக்காதா
  பாரதி இந்த அர்த்தத்திலா சொன்னார்

  ReplyDelete
  Replies
  1. கார்டு ஒரு தரம்தான் ,பால் தினசரி வாங்கி வருகிறாரே ,மறக்கலாமா :)
   அதுக்கு மட்டும்தான் லைசென்ஸ் :)
   மறக்க முடியாத பாடல்களாச்சே ,கேட்கலையா :)
   பசி எடுத்தா பல்பும் பறந்து போகுமே :)
   கூத்தடிப்போமடா என்று அவர் சொன்னதாக இவர் சொல்கிறார் :)

   Delete
 7. அனைத்தும் ரசித்தேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. ஃபிரிட்ஜ் பல்பு சூப்பர்தானே :)

   Delete
 8. நான் சிரிச்சிட்டுப் போறேன்ன்:).. சொறி டங்கு ஸ்லிப்ட்:).. சிரிச்சுக்கொண்டே போறேன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. 'டங்கு'வார் கழன்றுடும் சொல்றாங்களே ,ஏன் :)

   Delete
 9. ''பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு... கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி, பசிச்சா மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே!'' என மனோ தத்துவ டாக்டர் சொன்னது சரி தானே!

  உண்டது உள்ளே (வாயூடாக வயிற்றுக்குள்ளே) போய் சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நான்கு மணி நேரம் தேவை. 'நொறுக்குத் தீனி' என்றாலும் நான்கு மணி நேரம் கழித்துச் சாப்பிடலாமே!

  'பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் மாதிரி என்றால் 'நொறுக்குத் தீனி' என வடை, பச்சி, அப்பம் என்றவாறு வயிறு முட்ட உண்பதில்லை. 'நொறுக்குத் தீனி' எனக் கொஞ்சம் மிக்சர் அல்லது கொஞ்சம் கச்சான் கொறிக்கலாம்.

  அடேங்கப்பா! நள்ளிரவிலும் நொறுக்குத் தீனியா? அப்ப தூக்கம் (நித்திரை) என்னவாகும்? ஆறு தொடக்கம் எட்டு மணி நேர தூக்கம் (நித்திரை) பேணவிட்டால் உங்கள் ஆயுள் கெட்டுப் போகலாம்.

  உணவு சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நேரம் கொடுத்து உண்டால் நீண்ட ஆயுள்!

  ReplyDelete
  Replies
  1. நாலும் எட்டும் ஆரோக்கியத்துக்கு உறுதி எனலாமோ :)

   Delete