Tuesday, 11 April 2017

மகளின் உள்ளங்கவர் 'கள்வன் 'இதில் தெரிவானா :)

  நாசூக்கா  சொல்லணும் :)
             ''என்னோட டூத் பிரஷ்  எப்பவுமே புதுசா இருக்கும்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
            ''நீ பக்கத்திலே வந்தாலே, அதை நீ பயன்படுத்துறது இல்லைன்னு தெரியுதே !''

மேனேஜர் சிடுமூஞ்சியாய் இருப்பதும் முன்எச்சரிக்கைதானா :)
           ''மேனேஜர் எப்ப பார்த்தாலும் சிடுமூஞ்சியாவே இருக்காரே ,ஏன் ?''
          ''சிரிச்சுப் பேசினா  மூஞ்சியை நக்க ஆரம்பிச்சிடுதாமே சில ஜென்மங்க !''

நடிகைக்கு ஆப்ரேசன்னா கிண்டல் செய்யலாமா :)
        ''அந்த நடிகைக்கு டான்ஸில் ஆப்ரேசன்னு கேள்விப்பட்டு ,டான்ஸ் மாஸ்டர்  கமெண்ட் அடிக்கிறாரா,எப்படி ?''
        '' டான்ஸில் அவர் வீக் ,அவரோட டான்ஸிலுமா  வீக்னு கேட்கிறார் !''

மகளின் உள்ளங்கவர் 'கள்வன் 'இதில் தெரிவானா :)
        ''என் பொண்ணைக் காணலைன்னு ,மந்திரவாதியை  போய் பார்க்கலாம்னு சொன்னா ,ஏன்  வேண்டாங்கிறே ?''
        ''அவர் மை போட்டு பார்த்தா , கள்வன் தெரிவான்... ஆனா ,உங்க மகளின் உள்ளங்கவர் 'கள்வன் ' தெரிய மாட்டானே  !''

பிள்ளைப் பேறு, தாமதம் கூடாது :)
பள்ளிக்குப் புறப்படும்  பையன்...
சூ சாக்ஸ் டை சீருடை போட்டுவிடச் சொல்லும் போது..  
வரும் எரிச்சலில் ஒரு உண்மை புரியும்  ...
 பிள்ளைப்பேறில் தாமதம் கூடாதென்று  !

20 comments:

  1. Replies
    1. தாமதம் கூடாது தானே ஜி :)

      Delete
  2. முதல் ஜோக் அனுபவம் எனக்கும் இருப்பதால் உணர்ந்து சிரித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. துர்நாற்ற அனுபவத்தை எப்படி மறக்க முடியும்:) :

      Delete
  3. டூத் பிரஷ்னா பிரஷாத்தானே இருக்கனும்...!

    பொம்பள மேனேஜரோ...!

    நான் என்ன டான்(ஸி)ல் மாஸ்டாரா...?

    'மந்திரவாதி கள்வன் ' என் காதலன்...!

    பிள்ளையைப் தள்ளிப் போடக் கூடாது...!

    த.ம. 3







    ReplyDelete
    Replies
    1. பல்லு எப்படிப் போனாலும் பரவாயில்லையா :)

      இருந்தாலும் தப்பில்லையே :)

      மாஸ்டர் ஏன் கிண்டல் பண்றார்னு தெரியுதா :)

      வெற்றிலை வைத்தும் வராத அவர் மாயக் காதலன் தான் :)

      போட்டால் ,வயதான காலத்தில் அவனும் தள்ளிப் போட்டிருவான் :)

      Delete
  4. ரசித்தேன்
    தம +

    ReplyDelete
    Replies
    1. மேனேஜர் சிடுமூஞ்சியையுமா :)

      Delete
  5. அவர் பிரஷ் வாங்குவாரா ?

    ReplyDelete
    Replies
    1. தேவையில்லைதான் ,ஆனாலும் வெளியில் காட்டிக்க வாங்கிக்குவார் :)

      Delete
  6. மிகவும் நன்று

    ReplyDelete
    Replies
    1. உள்ளங்கவர்கள்வன்தானே :)

      Delete
  7. '' டான்ஸில் அவர் வீக் ,அவரோட டான்ஸிலுமா வீக்னு கேட்கிறார் !''//

    கவர்ச்சி காட்டுவதில் வீக் அல்லவே!!

    ReplyDelete
    Replies
    1. அதில் வீக்கானால் சம்பாதிக்க முடியாதே :)

      Delete
  8. நேற்று வாங்கின ப்ரஷாக இருக்குமோ
    நன்றியைக் காட்டும் நாய்களோ
    டான்சில வீக் டான்சில் வீக் படித்த மாதிரி இருக்கிறதே
    மகளின் மனங்கவர் கள்வன் தெரியாவிட்டாலும் பணங்கவர் கள்வன் தெரிவானே
    முன்பே பிறந்திருந்தால் இவையெல்லாம் செய்ய வேண்டாமோ

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னு அவரே சொல்லட்டுமே :)
      இந்த நன்றியை மேனேஜரே விரும்ப வில்லையே :)
      இது மட்டும்தான் படித்த மாதிரியிருக்கா :)
      இப்போ யாருங்க பணத்தைக் கவர்லே வச்சுக்கிறா ,எல்லாம் கார்டாகிப் போச்சே :)
      செய்வதுக்கு பலம் இருந்து இருக்குமே :)

      Delete
  9. அந்த டூத் பேஸ்ட் ஜோக் சூப்பர் நண்பரே!

    - இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததில் பிரஷ்சை பேஸ்ட் ஆக்கிட்டீங்களே :)

      Delete
  10. ஏன்? கள்வன் தெரியும்போது உள்ளம் கவர்ந்த கள்வன் தெரிய மாட்டானா.....????

    ReplyDelete
    Replies
    1. கள்வன் தெரிந்தால் துப்பறியும் படை எதுக்கு :)

      Delete