13 April 2017

'குட்டி யானை ' நடிகைன்னா யார் தெரியுமா :)

இப்படியும் சந்தேகம் வரலாமா :)
                '' என்னைப் பார்த்து ,என் வக்கீல் இருக்கிற கட்சியில்தான்  இருக்கிறீர்களான்னு ஏன் கேட்கிறீர்கள் ,நீதிபதி  அவர்களே ?''
               ''என் கட்சிக்காரரை விடுவிக்கும்படி உங்க வக்கீல் சொல்றாரே !''

நன்னடத்தைக்கு  ,அவங்க அகராதியில்  இதான் அர்த்தமா :)      
              ''  நன்னடத்தைக் காரணமா ,அவருக்கு எம் .எல் .ஏ. சீட் கொடுத்து இருக்காங்களாமே,என்ன செய்தார் அவர் ?''
               ''ஜாதிக் கலவரத்தைத் தூண்டி , நாலு பஸ்ஸை எரித்தாரே !''

 இது சென்ற ஆண்டு ஜோக் :)         
          ''இன்னைக்கென்னடி விசேஷம் ?  மல்லிகைப் பூ விற்பனை அமோகமா இருக்கே ?''
          ''இருக்காதா பின்னே ,பிறந்திருக்கிறது 'மன்மத 'வருசமாச்சே !''                                                                         Image result for மல்லிகைப் பூ பெண்
குளிக்கிறதை பார்க்க நினைப்பாங்களா :)
           ''உனக்கேன்டி , இந்த விபரீத ஆசை ?முத்து குளிக்கிறதைப்  பார்க்கணுங்கிறே  ?''
          ''அட நீ வேற ,கடல்லே முத்து எடுக்கிறதைப் பார்க்கணும்னு  சொன்னா ,தப்பா  அர்த்தம் எடுத்துக்கிறீயே !'' 

'குட்டி யானை ' நடிகைன்னா யார் தெரியுமா :)
            ''ஜூவுக்குப் போன அந்த நடிகை ,குட்டி யானைக்கு தன்னோட பெயரை வைச்சது தப்பா போச்சா ,ஏன் ?''
        '' கிசுகிசுவிலே 'குட்டியானை நடிகை'ன்னு எழுத  ஆரம்பிச்சுட்டாங்களே !''

ருசியான ரசத்திற்கு ஏங்கும் USA மாப்பிள்ளை :)
மணப்பெண் தேவை !
முறத்தால் புலியை விரட்டத் தெரியாவிட்டாலும் 
ரசத்திற்கு புளியைக் கரைக்கத் தெரிந்தாலே போதும் !

24 comments:

 1. 1 வது வோட்டோ என்னோடதுதான்... பரிசைத் தாங்கோ:).

  ReplyDelete
  Replies
  1. பரிசுக்கு முன் பதிலைச் சொல்லுங்க ....போட்டோ நீங்க எடுத்ததா?போட்டோவில் இருப்பது நீங்களா?நீங்கள் நிற்பது இடது புறமா ,வலது புறமா ?வலது இடது புறத்தை எப்படி தீர்மானிப்பது ?முகத்தைப் பார்த்தா ?சடையைப் பார்த்தா ?

   Delete
  2. சேம் சேம்,நீங்க வோட்டோன்னு சொன்னதை போட்டோன்னு நினைச்சிட்டேன் :)

   Delete
  3. அதிராவைக் காணோம் ,தேம்ஸ் நதிப் பக்கம் பார்த்தால் சொல்லுங்க :)

   Delete
 2. Replies
  1. பதிவைவிட படம் ரசிக்க வைத்து இருக்குமே :)

   Delete
 3. Replies
  1. மல்லிகை மகள்ஸ் அருமைதானே :)

   Delete
 4. ரசத்தை ரசித்தோம்...குட்டியானையையும்..

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. அனைத்தும் என்பதில் அதுவும் அடக்கம்தானே :)

   Delete
 5. என் கட்சிக்காரர் என் கட்சியில்தான் இருக்கிறார்... சந்தேகம் வேண்டாம் நீதிபதி அவர்களே... அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்க்க வில்லை ... அவருடைய கணக்கெல்லாம் அதுக்கு மேலே... அதையும் தாண்டி மிகவும் கேவலமானது... அவருக்காக வக்கிலாகிய நான் வக்காலத்து வாங்குகிறேன்... கனம் நீதிபதி அவர்களே...!

  பேருந்தில் நடத்துனராக இருந்திருப்பாரோ...?!

  மன்மத ராசா... கண்ணுல லேசா என்னை கணக்கு பண்ணாதே...!

  முத்து... குளிக்க வாரீகளா? கத்து கொடுக்க வாரீகளா?

  குட்டி... யா(னை)ன நடிகை...!

  மாப்பிள்ளை நல்ல ரச வாதியா இருக்கிறாரே...!

  த.ம. 4  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றதை நம்ப முடியாது ...ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவரே,வாரிசு இல்லாமலே சேர்த்த சொத்து பல கோடியாச்சே :)

   எந்த பேருந்து நடத்துனர் இவ்வளவு நல்ல காரியம் செய்தார் :)

   பனியிலே நனைந்த மல்லிகை வாசத்தில் மன்மத ராஜாவே மயங்கிவிடுவாரே:)

   நீச்சலைத் தானே சொல்றீங்க :)

   உங்களுக்கு தேவ யானை நினைப்போ :)

   கல்யாணமாகட்டும்,தான் நவரசவாதின்னு நிரூபிப்பார் :)

   Delete
 6. மன்மத வருஷமா ?

  ReplyDelete
  Replies
  1. கடந்த ஆண்டுக்கு முந்தின ஆண்டு வந்து போச்சே ,மறந்து போச்சா :)

   Delete
 7. கட்சியில் இருக்கும் வக்கீல்களை நாடக்கூடாது போல் இருக்கிறதே
  சில கட்டுப்பாடுகளுக்குள் இருப்பதே நன்னடத்தையா
  அல்வா அமோக விற்பனையானால் எந்த ஆண்டு
  முத்துப் பொருக்க வாரீயளா முத்தம்பெற வாரீயளா
  அந்தக் குட்டி யானையின் பெயரென்ன
  ரசம் வைக்கக் கற்றுக் கொண்டபின் இவர் யாரோ அவர் யாரோ


  ReplyDelete
  Replies
  1. யாரை நாடினாலும் அவரது கட்சிகாரர் ஆகிவிடுவீர்கள் நீங்கள் :)
   அரசியல் கட்சி நன்னடத்தை என்றால் என்னத்தைச் சொல்றது :)
   சர்வசித்து என்று ஒரு பெயர் இருக்கே ,அது பொருந்துமா :)
   அதுக்கு கடலுக்கு உள்ளே வரணுமாக்கும் :)
   தமிழ் திரைஉலகத்தில் குட்டியானைகளுக்கு பஞ்சமா :)
   ரசம் விவாகரத்தும் செய்யச் சொல்லுமா :)

   Delete
 8. ''இருக்காதா பின்னே ,பிறந்திருக்கிறது 'மன்மத 'வருசமாச்சே !''//

  அழகா இருந்தா எல்லா வருசமும் மன்மத வருசம்தான்!

  ReplyDelete
  Replies
  1. காதலர்களுக்கு எல்லா நாளும் காதலர் தினம் என்பதைப் போலவா :)

   Delete
 9. புன்னகைத்து ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. USA மாப்பிள்ளையின் எதிர்பார்ப்பு சரிதானே :)

   Delete
 10. ரசத்திற்கு புளியை தேடும் நகைச்சுவை மற்றும் அனைத்தும் நன்று

  ReplyDelete
  Replies
  1. சிலர் வைத்த ரசத்தைக் குடித்தால் ,நமக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறதே :)

   Delete
 11. Replies
  1. காக்காவைப் பற்றி நான் ஒண்ணுமே எழுதவில்லையே :)

   Delete