15 April 2017

ஓடிப் போனா...மனைவி பெயரும் மாறிடுமா :)

எது சரி :)
                ''காலிங் பெல் ரிப்பேரான்னு  ஏன் கேக்குறீங்க ?''
               ''கதவுலே 'தட்டுங்கள் திறக்கப் படும்'னு  வாசகம் இருக்கே !''  

புருசனைத் தாக்க மட்டுமா பூரிக்கட்டை :)
              ''பூரிக் கட்டையை  இப்படியும் பயன்படுத்தலாம்னு இன்னைக்குத் தான் தெரிஞ்சுதா ,எப்படி ?''
              ''தீர்ந்து போன டூத் பேஸ்ட்டை ,பிதுக்கி எடுக்கிறதுக்கு பதிலா பூரிக்கட்டையால் உருட்டி எடுத்தாளே என் பெண்டாட்டி !''
                 ( பெண்டாட்டி அப்படின்னா 'டாஸ்மாக் அடிமை 'புருஷன்  இப்படித்தான் பூரி மாவை உருட்டியாகணும்..ஹி..ஹி:)
நண்பனின் மனம் அறிந்த நண்பேண்டா  :)
               ''பக்கத்துத் தெருவிலே இருக்கிற அந்த ராசியான மருத்துவமனையின் பெயரும் ,டாக்டரின் பெயரும் ஞாபகத்தில்  வரவே மாட்டேங்குதே.....!''
                ''சரி ,சரி ..நர்ஸோட பெயரைச் சொல்லு,நான் போய் பார்த்துக்கிறேன் !''

ஓடிப் போனா... மனைவி பெயரும் மாறிடுமா :)
            ''உன் மனைவி பெயர் கலாவதிதானே ,காலாவதின்னு ஏன் சொல்றே ?''
           ''ஓடிப் போனவளை வேற எப்படி சொல்றது?''

போலிகள் நிறைந்த உலகமடா :)
      ''நீங்க போலி டாக்டர்னு பேசிக்கிறாங்க ,நீங்க தர்ற மாத்திரையும் போலின்னா ,எப்படி குணமாகும் ?''
     ''ஸ்கேனைப் பார்த்து நான்  சொன்ன நோயும் போலிதான் ,டோன்ட் ஒர்ரி !''

ஒரு தலைக் காதல் ஜெயிக்குமா :)
நீ விரும்புவதோ அவளை ...
அவள் விரும்புவதோ அவனை ...
மூணு சீட்டிலேயே  உன்னால் ஜெயிக்க முடியாது !
முக்கோண காதலில் ...?நோ சான்ஸ் !

32 comments:

 1. நோயும் போலி!.... :)

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நோயோட ஒரிஜினல் பெயர்கூடச் சொல்லத் தெரியாதே :)

   Delete
 2. நகைப்பணி தொடர்க
  தம +

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு அறிவான புருஷன் எப்படி குடிக்கு அடிமை ஆனார்ன்னு தெரியவில்லை:)

   Delete
 3. Replies
  1. நண்பனின் மனம் அறிந்த நண்பனையும்தானே:)

   Delete
 4. Replies
  1. போலிகள் நிறைந்த உலகம் தானே இது :)

   Delete
 5. நர்ஸ் பெயர் ஜொள்ளவே இல்லையே... ஜி

  ReplyDelete
  Replies
  1. வேலைக்காரின்னா அஞ்சலை ,நர்ஸ் என்றால் நளினி தானே :)

   Delete
 6. ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’... யோசிக்காம கேக்க வேண்டியத கேளுங்க...!

  சரக்கு வச்சிருக்கேன்... உள்ளே இறக்கி வச்சிருக்கேன்...’ எதையும் வீணாக்கக் கூடாது... பிளான் பண்ணி பண்ணணும்...!

  எந்த நர்ஸோட பெயரச் சொல்றது...!

  கலா... கலா... கலக்கலா...?!

  காயமே இது பொய்யடா...?!

  டைம் பாஸ்தானே பாஸ்...!

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. ஐ நாக்ஸ் சினி டிக்கெட் வேணும் ,கிடைக்குமா :)

   இம்புட்டு அறிவாளியா நீங்க :)

   இப்படியும் ஒரு கஷ்டமா :)

   கலக்கலே கதின்னு கிடங்கன்னு சொல்லாம சொல்லிப் போயிட்டாளே :)

   காயத்தைக் குணப்படுத்த மட்டும் அசல் டாக்டர் வேணுமா :)

   மறுத்தாள்னு டைம் பாம் வைக்காம விட்டா சரி :)

   Delete
 7. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  (நேற்று சொல்லியிருக்க வேண்டும்.. ஆனால் நேற்று இரண்டு Shift..
  இன்று காலையில் தான் கணினியிடத்தில் அமர்ந்தேன்..)

  ReplyDelete
  Replies
  1. தாமதமானால் என்ன ?உங்கள் அன்பான வாழ்த்து ஒன்றே போதுமே !
   மிக்க நன்றி ஜி :)

   Delete
 8. நீங்கள் தட்டினால் உங்களுக்கும் கேட்கும் உள்ளிருப்பவருக்கும் கேட்கும்
  பூரிக்கட்டையால் கடைசி பேஸ் வரை பிதுக்க முடியுமா இன்னும் இன்னும் இருக்குமே
  நினைவுக்கு வர அதையல்லவா முதலில் சொல்லி இருப்பேன்
  அவள் காலம் நன்றாக இருந்ததால்தான் ஓடிப்போனா
  இங்கு எல்லாமே போலிதான்
  அவன் விரும்புவது.....?

  ReplyDelete
  Replies
  1. நமக்கு உள்ளேயிருந்து அல்லவா பதில் கிடைக்கணும் :)

   கழுவி கழுவி ஊற்றலாமோ :)

   அது எப்படி மறக்கும் :)

   காலங்களில் அவள் வசந்தம்ன்னு நினைச்சது தப்பா போச்சே :)

   எது அசல்னு தெரிய மாட்டேங்குதே:)

   தண்ணீர் இல்லா வைகையிது,மீனாட்ஷியைத் தேடலாமோ:)

   Delete
 9. ரசித்தேன் ஜி அருமை

  ReplyDelete
  Replies
  1. கலாவதி என்கிற அருமையான பெயரையும்தானே :)

   Delete
 10. பூரிக் கட்டையால் ரூத் பேஸ்ட்டா ஹா ஹா ஹா..

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியாதானே :)

   Delete
 11. முக்கோண காதலில்...?
  நோ சான்ஸ்!
  அருமையான முடிவு!

  ReplyDelete
  Replies
  1. பய பிள்ளே ,ஆசிட் தேடாம போனால் சரி :)

   Delete
 12. Replies
  1. பயம்மா இருக்கு ,தப்பா எதையும் சொல்லிட்டோமோன்னு:)

   Delete
 13. ரசித்தேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் அடிமையின் ஐடியா அருமைதானே :)

   Delete
 14. Replies
  1. ஸ்மார்ட் போன் வாங்கிட்டீங்க போலிருக்கே ஜி :)

   Delete
 15. தட்டுங்கள் திறக்கப்படும் வசனமும் டாஸ்மாக் கணவன் பூரியை சுடும் முறையையும் இரசித்தேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வாசகத்தை வசனமாக்கி,உருட்டும் போதே பூரி சுட்டு சாப்பிட்டு முடிச்சிட்டீங்களே,நன்றி வைசாலி :)

   Delete
 16. அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஒரு தலைக் காதலையுமா :)

   Delete