17 April 2017

கட்டாம வைச்சிருக்கிறது தப்பா :)

படித்ததில்  இடித்தது :)
                 ''சென்னை ஆர் கே நகரில்  டூரிஸ்ட்  வேனே கிடைக்க   மாட்டேங்குதா ,ஏன் ?''
                 ''வோட்டுக்கு கிடைச்ச  பணத்திலே எல்லோரும் ஜாலியா ஊட்டி ,கொடைக்கானல்னு  கிளம்பிட்டாங்களே!''
இடித்த செய்தி ....ஓட்டுக்கு ரூ.6,000 வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள் !

மகன் பெரிய விஞ்ஞானியா வருவான் :)
               ''எதுக்குடா ,நான் பயன்படுத்திய  இன்சுலின் ஊசியை வேணும்னு கேட்கிறே ?''
               ''இங்க் பில்லரா அதைப் பயன்படுத்திக்கலாம்னுதான் , அப்பா !''
இப்படியும் சந்தேகம் வரலாமா :)
              '' வாத்தியார் ,மூட் அவுட் ஆனமாதிரி இருக்காரே ,ஏன் ?''
              ''வரிக் குதிரைக்கு ,கருப்பு தோல் மேல் வெள்ளை வரியா ,வெள்ளை தோல் மேல் கருப்பு வரியான்னு எவனோ  ஒருவன் கேட்டுட்டானாமே?''

கட்டாம  வைச்சிருக்கிறது தப்பா :)
           ''என்னங்க , உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு போன்லே கேட்டது என் காதுலே விழுந்ததே ,உண்மையைச் சொல்லுங்க !''
           ''அடப் பைத்தியமே ,சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி அவன் கேட்டான் ...அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !''

ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி :)
         '' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
          ''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !''

படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை :)
கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ...
கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ...
படிப்பைக் 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ? 

26 comments:

 1. அப்போ அந்தப் பணத்தை அவங்க ஸ்கூல் ஃபீஸுக்கு வைத்துக் கொள்ளவில்லையா!!

  வாத்தியாரைக் குழப்பிய மாணவன் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. ஸ்கூல் ஃபீஸ் வழக்கமான வரவு செலவில் ...இது அனாமத்துக் காசுதானே.. அதான்,ஜாலியா சுற்றுறாங்க:)

   இவன் படிக்க வேண்டிய இடமே வேற :)

   Delete
 2. Replies
  1. யானையையும் தானே :)

   Delete
 3. Replies
  1. கட்டாம வைச்சிருக்கிற பிளாட்டைத் தானே :)

   Delete
 4. பிளாட்டை சும்மாவும் போடக்கூடாதோ...

  ReplyDelete
  Replies
  1. போட்டால் கருவேல மரங்கள் வளர்ந்து விடும் ,அப்புறம் அதை ஏன் வெட்டலைன்னு நோட்டீசும் வரும் :)

   Delete
 5. Replies
  1. இங்க் பில்லரையையும்தானே :)

   Delete
 6. ''என்னங்க , உங்க நண்பர் '//

  நட்புப் போர்வை போர்த்திய எதிரி!!!

  ReplyDelete
  Replies
  1. நீங்களுமா நம்பிட்டீங்க :)

   Delete
 7. ///கட்டாம வைச்சிருக்கிறது தப்பா :)//
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப்புத்தேன்ன்ன்:).. கட்டாட்டில் ஓடிடுமெல்லோ:)..

  ReplyDelete
  Replies
  1. எங்கேயும் ஓடாது ,வம்புக்காரன் எவனாவது வந்து குந்திடுவான் :)

   Delete
 8. Replies
  1. பேரன் பேத்திகளோடு நேரம் சரியாய் இருக்கும் போலிருக்கே :)

   Delete
 9. நகைப்பணி தொடர்க

  ReplyDelete
  Replies
  1. வாத்தியார் மூட் அவுட் ஆனமாதிரி,நானாக மாட்டேன் :)

   Delete
 10. இடை இடையே இப்படி இடைத்தேர்தல் வருக... தருக...!

  பெரிய அறிவாளியா வருவானாக்கும்...!

  இதுக்குத்தான் வரிக்கு வரி பார்கோனுங்கிறது...!

  உன்னிட்ட போயி எதைக் காட்டாம இருக்க முடியும்...?!

  இது மாலை நேரத்து மயக்கமா...!

  பி.ஏ. பாஸாகலைன்னாலும் பரவாயில்லை... நடிகைக்கு பி.ஏ.வாக ஆனாப் போதும்...!

  த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. இடைத் தேர்தலே வருக ..காசை அள்ளித் தருக :)

   இனிமேலா வருவது ,இப்பவே :)

   பார்த்ததால் வந்த குழப்பம் தான் இது :)

   காலி மனையைக் காட்டாமல் மறைக்கலாமா :)

   அது ஊற்றினால் வருவது ,இது கழுத்தில் மாட்டினால் வருவது :)

   டபிள் எம்மே வேலைப் பார்க்காமல் போனால் சரிதான் :)

   Delete
 11. பையன் ரொம்ப சிக்கனமா ஆளோ, சிரிஞ்சையே இங்க் பில்லரா பயன்படுத்துறான்

  ReplyDelete
  Replies
  1. கஞ்சத் தனம்தான் கூடாது ,சிக்கனம் நல்லது தானே :)

   Delete
 12. ...வரிக்குதிரையையும், வாத்தியாரை கன் பியூஸ் பண்ணிய அந்த மானவனையும் ரசித்தோம் ஜி.....

  ReplyDelete
  Replies
  1. மானத்தை வாங்கியதால் மானவன் ஆக்கிட்டீங்களே ஜி :)

   Delete
 13. சென்னை ஆர் கே நகரில்
  அடுத்த தேர்தல் எப்போ?
  அப்போ
  வோட்டுக்குப் பத்தாயிரம் கொடுப்பாங்க

  ReplyDelete
  Replies
  1. அந்த காசிலே காஷ்மீர்,குலு மணாலி டூர் போடுவாங்களோ:)

   Delete