18 April 2017

ராசியான கட்டில் போலிருக்கே :)

                ''இந்த கட்டில்லே யார் தூங்கினாலும் நல்லா தூக்கம் வருமா ,ஏன் ?''
               ''தூங்கு மூஞ்சி மரக் கட்டையால்  செய்ததாச்சே !''

படிக்க நேரம் இல்லைன்னா  எதுக்கு பேப்பர் வாங்கணும் :)
            ''  எடைக்குப் போடுற பேப்பருக்கு , கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகமாத் தரணுமா ,ஏன்  ?''
            ''வர்ற பேப்பரை அப்படியே போட்டு விடுறோம் , பிரிக்கிறதுகூட இல்லையே !''

யோசிக்க வேண்டிய விஷயம் இது :)          
               ''பசி  மயக்கத்தில்  எனக்கு   காது கேட்கலைங்கிறதை  நம்ப முடியலையா ,ஏன் ?''     
              ''சாப்பாடு ரெடின்னு சொன்னதும் , கையைக் கூட  கழுவாம  தட்டைத் தூக்குறீங்களே !''

மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதியுபகாரம் :)
            ''அந்த முதியோர்கள் இல்லத்திற்கு தேவையான தூக்க மாத்திரையை தானமா தர்ற ,உன் வீட்டுக்காரரின் தாராள மனசைப்  பாராட்டலாமே !''
           ''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''
நன்றி மறவாத வெஜிடேரியன் :)
          ''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர் SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''
           ''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !''

தடை எதுக்கு வரணுமோ ,அதுக்கில்லையே :)
மீனைப் பிடிக்ககூட தடைக் காலம் போடுறவங்களாலே ...
சிங்கள ராணுவம் நமது மீனவனைப் பிடிப்பதை ஏன் தடை செய்ய  முடியலே ?
மீனைக் கூட கொல்லாமல் பிடிக்கும் நிராயுதபாணி  மீனவனைக்
கொன்றுக் குவிப்பதை  ஏன் தடை செய்ய  முடியலே ?

28 comments:

 1. இந்த கட்டிலை பெங்களூரு ஜெயிலுக்கு அனுப்பி வைங்க ஜி

  ReplyDelete
  Replies
  1. இன்னொன்னு சேர்த்து ஆர்டர் பண்ணியாச்சு ,வரட்டும் அனுப்பிடலாம் :)

   Delete
 2. இப்படி ஒரு கட்டில் நிறைய இடங்களில் தேவைதான்!

  ReplyDelete
  Replies
  1. அலை பாயும் மனம் ,எந்த கட்டிலிலாவது அமைதி பெறுமா :)

   Delete
 3. மட்டற்ற மகிழ்ச்சி ஜி....!

  ReplyDelete
  Replies
  1. என் பிளேடுகள் தொடர்வதற்குமா :)

   Delete
 4. ரசித்தேன்.

  த.ம. +1 - இன்னிக்கு என்னமோ உடனே வாக்கு விழுகிறது! வாக்குப் பொட்டில ஏதோ மாத்திட்டாங்க போல!

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் தமிழ் மணம், முழுவதும் சரியாகி விட்டது என்று நம்பத் தோன்றவில்லை !இன்றைய என் பதிவு ,முகப்பில் வரவேயில்லை ,மீண்டும் மாற்றம் செய்து இணைக்க வேண்டியதாயிற்று :)

   Delete
 5. Replies
  1. படிக்க நேரம் இல்லைன்னா பேப்பர் வாங்குவது வேஸ்ட் தானே :)

   Delete
 6. அட... கட்டையில போறவனே... தூங்க முஞ்சி...!

  பக்கத்து வீட்டுக்காரர் பார்க்க... இங்கிலிஸ் பேப்பர்ல வாங்கிறோம்...!

  தட்டுங்கள்... திறக்கப்படும்... காது...!

  அப்ப... தூக்க மாத்திரை அங்க கொடுக்கக் கூடாதில்ல...!

  அவருக்கு என்ன பிரஷரோ...?!

  இராணுவம் இந்திய கைவசமல்ல இருக்கு... இதுக்குத்தான் நம்ம கைவசம் இருக்கனுங்கிறது... இராணுவ மந்திரிரியாவது...!

  த.ம. 6

  ReplyDelete
  Replies
  1. endaவன் மட்டுமா ,நீண்ட தூக்கத்தில் எல்லோரும் கட்டையிலே போறவங்கதானே :)

   தமிழ் பேப்பர் என்றால் அவர் ஓசி கேட்டு வந்திருவாரா :)

   முதல்லே வீட்டுக் காரிக்கு கொடுக்கணும் ,அப்படித்தானே ;)

   அதான் ஆடு தின்கிற கத்தரி சாம்பாரை இப்படி புகழ்கிறாரோ:)

   நம்ம ஆளும் .பதவிக்கு பசையுள்ள துறை வேணும்னு கேட்டு வாங்கிறான் ,ராணுவத் துறையை வேண்டாங்கிறானே:)

   Delete
 7. மீனவன் சிந்திக்க வைத்துவிட்டான்....

  பசி மயக்கம் ஒன்னாங்கிளாஸ்

  ReplyDelete
  Replies
  1. நாம சிந்தித்து என்னவாகப் போகிறது :)

   அப்பவே அப்படியா :)

   Delete
 8. நம்ம வீடு இனி திறந்திருக்கும். அடிக்கடி வாங்க பேசிக்கிட்டிருக்கலாம். வெலாசம் தெரியுமில்ல

  ReplyDelete
  Replies
  1. வந்து ஹோலியை கொண்டாடி விட்டேனே :)

   Delete
 9. சோம்பேறிகளுக்கு உகந்த கட்டில்

  ReplyDelete
  Replies
  1. தூக்கம் தராத கட்டில் நல்லதா :)

   Delete
 10. நான் இன்று சிரிக்கவில்லை என ஜோக்காளியிடம் சொல்லி வையுங்கோ.. அடுத்தமுறை பலமாக சிரிக்கும் ஜோக்காகச் சொல்லச் சொல்லிடுங்கோ:).. ஆனா 10 என்னோடது:).

  ReplyDelete
  Replies
  1. மணி ஐந்தாச்சு ,இன்னைக்கு இன்னும் வரலையே :)

   Delete
 11. ''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !''//

  ‘.....மட்டனற்ற மட்டமான விருந்துன்னு எழுதாம விட்டாரே!!

  ReplyDelete
  Replies
  1. நான்கூட இப்படித்தான் எழுதியிருப்பேன் :)

   Delete
 12. பகவான் ஜி அந்த தூங்கு மூஞ்சி கட்டிலை கொஞ்ச அனுப்பிக் கொடுங்க......

  அனைத்தும் ரசித்தோம்....

  ReplyDelete
  Replies
  1. ஓசியில் வாங்கினால் தூக்கம் வராதே :)

   Delete
 13. அடடா....எனக்கு அந்த கட்டில் கொடுத்து வைக்கலையே...

  ReplyDelete
  Replies
  1. தூக்கமே உங்களுக்கு கொடுத்து வைக்கலியே :)

   Delete
 14. தடை எதுக்கு வரணுமோ,
  அதுக்கில்லையே - அது தானே
  இன்றைய சிக்கல்!

  ReplyDelete
  Replies
  1. தீராத சிக்கலா இருக்கே அய்யா :)

   Delete