22 April 2017

பெண் 'பேய்' என்பதற்கு இதுதானே ஆதாரம் :)

இவ்வளவு விவரமா என் பிள்ளையா :)                
              ''ஆபீசுக்கு போகும்போது ,வெங்காய வெடியை ஏண்டா என் கையிலே கொடுக்கிறே ?''
             ''புது மானேஜர் ரொம்ப மோசம் ,அவருக்கு  சீக்கிரம் வேட்டு வைக்கணும்னு நீங்க தானேப்பா சொல்லிக்கிட்டு இருந்தீங்க !''

பெண் 'பேய்' என்பதற்கு இதுதானே ஆதாரம் :)
                 ''என்னங்க ,அந்த இருட்டுப் பங்களாவில் இருக்கிறது பொம்பளைப் பேய்தான்னு எப்படிச் சொல்றீங்க ?''
                ''இடுப்பு சைசைப் பார்த்தால்  அந்த மாதிரியிருக்கே !''
                ''அடச்சீ ,பேயைப் பார்த்தாலும் உங்க கண்ணு இடுப்புக்குத் தான் போகுமா  !''
இவனல்லவா  உண்மை நண்பன் :)
             '' எனக்கு நல்லா பால் கறக்கத் தெரியும்னு சொல்லியும் ,பாங்கிலே மாட்டு லோன்  தர மாட்டேங்கிறாங்க ,ஏன்னு தெரியலே ? ''
             ''பணத்தை உன்னிடமிருந்து கறக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கும் !''

கன்னம் என்ன 'இச் ' கொடுக்கவும் ,வாங்கவும்தானா :)
                 ''கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாதுன்னு அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா  ,ஏன்  !''
                ''இதை கப்பல் உரிமையாளர் யாரிடமாவது சொல்ல உனக்கு தைரியம் இருக்கான்னு கேட்கிறாரே !''

சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தானோ :)
             ''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
            ''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் போறாங்களாமே !''

கணவனை  இப்படியா சோதிப்பது :)
மனைவிக்கு கணவன் மேல் நல்ல அபிப்பிராயம் 
இருப்பது தெரிகிறது  ...
அழகான வேலைக்காரி !

31 comments:

 1. ஜேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இன்று மீ தான் 1ஸ்ட்ட்ட்ட்ட்டூஊஊஊஊஊஊஊஊஊ:).. இரு.. ஜீ :) க்கும் இல்லையாக்கும்:).. இரண்டிலுமே மீ த 1ஸ்ட்டூஊஊஊ:) ஹா ஹா ஹா:)

  ReplyDelete
  Replies
  1. ஸ்டேஷன் கடையில் பிளட் டெஸ்ட்டா? ஹா ஹா ஹா:)

   Delete
  2. எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருது, ஊரில் மினி பஸ்ல, இருக்க இடமில்லை, அப்போ ஒரு பெண் ஏறினா, யாரும் எழுந்து இடம் கொடுக்கவில்லை, ஒரு நடுத்தர வயது ஆண் இருந்தார் சீட்டில், அவரின் சீற்றுக்கு பக்கத்திலேயே இப்பெண் தள்ளாடிக்கொண்டு நின்றா, அப்போ அங்கு , இடமில்லாமல் நின்றிருந்த இன்னொருவர் சொன்னார்.. “பெண் என்றால் பேயும் இரங்குமே.. நீங்க இப்படி இரக்கமில்லாமல் சீற் கொடுக்காமல் இருக்கிறீங்களே” என, அதற்கு அந்த சீற்றில் இருந்தவர் சொன்னார் பதில்... “அது பேய் தான் இரங்கும், நான் எதுக்கு இரங்கோணும்?” என.. ஹா ஹா ஹா...

   Delete
  3. பேய் சமாச்சாரம் அறிந்தவரோ...

   Delete
  4. //KILLERGEE DevakottaiSat Apr 22, 04:44:00 am
   பேய் சமாச்சாரம் அறிந்தவரோ...//
   ஹா ஹா ஹா கர்ர்ர்:)

   Delete
  5. #இரண்டிலுமே மீ த 1ஸ்ட்டூஊஊஊ:) ஹா ஹா ஹா:)#
   நீங்கதான் 1ஸ்ட்டூஊ வர வாய்ப்பு அதிகம் ,காரணம் ,இங்கே அர்த்தராத்திரி என்றால் லண்டனில் மாலை நேரம்தானே ,அதிரா :)

   Delete
  6. நாலரை மணித்தியாலம் நீங்க முன்னே நிற்கிறீங்க.. ஆனா நீங்க கொஞ்சம் லேட்டாப் போஸ்ட் போட்டால், நாங்க விடிந்ததும்தான் பார்க்க முடியும்.. நீங்க எலாம் வச்சு எழும்பிப் போஸ்ட் போடுவதனால்தான் என்னால் 1ஸ்ட்டா வர முடியுது:) ஹா ஹா ஹா .. வெளியே சொல்லிடாதீங்க பின்பு கில்லர்ஜி யும் எலாம் வச்சு எழுந்து வந்து கொமெண்ட் போட்டிடப்போறார் 1ஸ்ட்ட்டா:).

   Delete
  7. அதாவது பனிரெண்டு மணிக்கு வெளியாகிற என் பதிவை ஏழரை மணிக்கு வாசிக்கிறீர்கள் ..பொருத்தம் தான் ,ஏழரைக்கு ஏழரை :)

   Delete
  8. #ஸ்டேஷன் கடையில் பிளட் டெஸ்ட்டா? ஹா ஹா ஹா:)#
   ரயில்வே ஸ்டேஷன் நினைப்பா அதிரா :)

   Delete
  9. #பேய் தான் இரங்கும், நான் எதுக்கு இரங்கோணும்?” என.. ஹா ஹா ஹா...#
   இதை போலவே ....கர்ப்பமா இருக்கிற எனக்கு இடம் கொடுக்கலாமே என்று ஒரு பெண் கேட்க ,உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என அமர்ந்து இருந்தவர் கேட்க,அந்த பெண் சொன்னாளாம்...பத்து நிமிசந்தான் ஆகுது ,கர்ப்பமாகி :)

   Delete
 2. பதிவில் உங்கள் ஜோக்கையும், பின்னூட்டத்தில் அதிராவின் ஜோக்கையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் இப்போ படிங்க ,இன்னும் ரசிக்கலாம் ஜி :)

   Delete
 3. நல்லா பால் கறக்கத் தெரியும்
  என்றவருக்கு
  மாடு வாங்கக் கடன் இல்லையாம்
  அவரிடம்
  பணத்தைக் கறக்க இயலாதென
  வங்கிகள் மறுப்பாம் - அப்ப
  எப்படி வாழுவதாம்?

  ReplyDelete
  Replies
  1. மாடு வாங்க கடன் தரமாட்டாங்க ,விமானம் வாங்க கடன் கேட்டா அள்ளிவிடுவாங்க :)

   Delete
 4. ....ஆகா, அந்த கடைசி இரண்டு வரிகளின் யதாரத்தம் தான் என்னே!
  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கையை கணவன் கெடுத்துக்காம நடந்துகிட்டா சரிதான்:)

   Delete
 5. Replies
  1. ஜீன்ஸ் பேண்ட்டும் தானே ஜி :)

   Delete
 6. வேட்டு ஜோக்கும், மனைவியின் நம்பிக்கையும் அருமை

  ReplyDelete
  Replies
  1. அதாவது ,முதலும் முடிவும் மட்டும் :)

   Delete
 7. ஜி உங்கள் பேயையும் அதிரா வின் பேயையும் ரசித்தோம்....
  அனைத்தும் ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. இது பங்களா பேய் .அது மினி பஸ் பேயாச்சே:)

   Delete
 8. ரசித்தேன்,அருமை.
  Tamil News

  ReplyDelete
  Replies
  1. டெம்பிளேட்டை மாற்றிப் போடுங்க :)

   Delete
 9. அப்போ...ஆண் பேய்க்கு ஆதாரம்.....?????

  ReplyDelete
  Replies
  1. இடுப்பு எலும்பு குழியின் டயா குறைந்தால் ஆண் பேய் :)

   Delete
 10. ''... உங்க கண்ணு ‘இடுப்பு’க்குத் தான் போகுமா !''//

  ரொம்ப நல்ல மனுசனாக்கும்!

  ReplyDelete
  Replies
  1. இப்படி கேட்டா கடுப்பு வருமா ,வராதா :)

   Delete
 11. எதுவும் பேசாதிங்க... ஓங்கி அடிச்சிப்புடுவேன்... ஆமா... வெங்காய வெடியை...!

  இடுப்பா... இது இடுப்பா... இல்ல துடுப்பா... அது இல்லாதது போல் இருக்கிது...!

  பசு மாட்டை வதை செய்யக் கூடாதாம்...!

  நீர் மூழ்கி கப்பல்தானே...!

  சீனி விலை படு வீழ்ச்சியாகப் போகுதுன்னு சொல்லுங்க...!

  வீட்டுக்கு வெளியே போய் கணவர் எந்தப் தப்பும் பண்ணி நம்ப மானத்த வாங்கக் கூடாதிங்கிறதில் மனைவி உறுதியா இருக்காங்க...!

  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. வெங்காய வெடி பெருங்காயத்தை ஏற்படுத்துமா :)

   அப்படி இருந்தாலும் தப்பா :)

   எருமையைச் செய்யலாமா :)

   அது நீரிலேயே மூழ்கிட்டா கப்பல் இல்லே ,சொதப்பல் :)

   அப்படி நடந்தால் உங்க வாயிலே சீனி போடலாம் :)

   வீட்டோட வச்சுகிட்டா சம்மதம்தானா:)

   Delete