23 April 2017

வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் :)

ஆளில்லாக் கடையில் டீ ஆற்றிய காலம் போயிண்டே :)
        '' பிரதமர் மோடிக்கு  பன்னீர்செல்வம் மேல் தனி பிரியம் இருக்கும் போலிருக்கா ,ஏன் ?''
        ''இருவருமே ஆரம்பத்தில் டீ விற்றவர்கள்தானே !''
இடித்த செய்தி ....மோடி டீ விற்ற ஸ்டேசனுக்கு 8கோடி ஒதுக்கீடு !

தற்கொலையாளர்கள் கவனத்துக்கு  :)
               ''ரயில்வே தண்டவாளத்தில் தற்கொலைப் பண்ணிக்கிட்டவனை ,ஏன் முட்டாள் பயல்னு திட்டுறீங்க ?''
               '' ஏதாவது கட்சி  கொள்கைன்னு  செத்திருந்தா, நிவாரண நிதியாவது  வீட்டுக்குக் கிடைச்சுருக்குமே !''

கூகுள் ஆண்டவரே இவரை மன்னியுங்கள்  :)            
               ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''
               '' வீட்டை விட்டு ஓடிப் போன அவரோட மக எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''

அஞ்சு ,பத்மாவுக்கு பின்னாலே பையன் அலைஞ்சா ,அப்பன் :)
            ''அப்பன் ,மகன் ரெண்டு பேருமே  அஞ்சு ,பத்துக்கு அலையிறாங்களா,என்ன சொல்றே ?''
            ''அப்பன் கையிலே காசில்லாம அலையிறார் ,மகன் பொண்ணுங்க பின்னாலே அலையிறானே!''

கிரீன் கார்டு இதுதான் குடிகாரனுக்கு :)
            ''உன் மனைவி உனக்கு இரட்டைக்' குடி'உரிமை  கொடுத்திருக்காளா, எப்படி ?'' 
            ''பார்லேயே மொத்தமாக் குடிச்சு ரோட்லே கிடக்காம  ,வீட்டுலேயும்  வந்து குடிச்சுக் கிடங்கன்னு சொல்றாளே !'' 

வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் :)
ஒருசேர பத்து பொறாமை விழிகள் என்மேல் ...
ஒரே ஒரு வார்த்தை செய்த மாயம் ...
''நிறைய சீனி போட்டு ஒரு டீ !''

22 comments:

 1. ஆஆஆஆஆவ்வ்வ்வ் மீ த ஃபெஸ்ட்டூஊஊஊஊ:).. தற்கொலையாளர் கவனத்துக்கு ஹா ஹா ஹா...

  ReplyDelete
  Replies
  1. Referring Sites ல் miyaavbear.blogspot.co.uk 1 என்று காட்டியது ...அதான் Bagawanjee KASun Apr 23, 12:16:00 am
   வெல்கம் டு அதிரா :)ன்னு வரவேற்றேன் :)

   Delete
  2. Ohhh sorry.. நான் நினைச்சேன்ன், எலாம் அடிச்சதும் நீங்க ஒரு கண்ணை மட்டும் திறந்து, போஸ்ட்டைப் பப்ளிஸ் பண்ணிட்டு, திரும்ப மூடியிருப்பீங்க என அதனால.. ஸ்பீட்டா ஓடி முதலாவதா வந்து மை வச்சிட்டு ஓடிட்டேன்ன்:).. அந்த மியாவ்பெயார் என்பது நானா?:) ஹையோ இப்பூடி பப்புளிக்கில போட்டு உடைச்சிட்டீங்க:) பூனை கண்ணை மூடினா உலகமே இருட்டு என்றெல்லோ நினைச்சிட்டிருந்தேன்:) ஹா ஹா ஹா:)..

   Delete
 2. வெல்கம் டு அதிரா :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இதில நான் முதலாவதா வந்திட்டனே எனும் சந்தோசத்தைக் காட்டிலும், கில்லர்ஜீ யை முந்தி ஓடி வந்திட்டேன்ன்:).. [நாம ஆரு 1500 மீட்டரில முதலாவதா வந்தேனாக்கும்:)] என்பதிலதான் அதிக சந்தோசமா இருக்கூஊஊஊஊ:).. அவரால ஓட முடியல்ல ஹா ஹா ஹா:).. ஹையோ இண்டைக்கு என்னாகுமோ.. வைரவா என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்:)..

   Delete
 3. மோ(ச)டி நன்றி மறக்காதவர்.

  ReplyDelete
  Replies
  1. தேர்தல் அறிக்கையில் சொன்ன ,நதிகள் இணைப்பை மறந்து விட்டாரே :)

   Delete
 4. ஏதோ ஒரு காரணத்தால் செத்த பிறகு கூட கட்சி விஷயம் காட்டி பணம் வாங்கிய சம்பவம் எனக்குத் தெரிந்தே நடந்துள்ளதே...

  ஓ... அப்படிச் சொல்றீங்களா? நான் அப்பன் அஞ்சு பின்னால அலையறான், மகன் 'பத்து'மா பின்னால அலையறான்னு நினைச்சேன்!

  ReplyDelete
  Replies
  1. ///நான் அப்பன் அஞ்சு பின்னால அலையறான்///
   என்னாதூஊஊஊஊஊ “அஞ்சு” பின்னாலயாஆஆஆஆஆஆஆஅ??? நோஓஓஒ விடமாட்டேன்ன்ன் இப்போதே புறப்பட்டிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.. அஞ்சுவைக் காப்பாத்தியே தீருவேன்ன்ன்ன்:)..

   Delete
  2. ஹஹஹ அதிரா இதை உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்...ஹஹஹ

   கீதா

   Delete
  3. தீயிலே தள்ளிவிட்டு தியாகிப் பட்டம் கொடுத்த சம்பவம் கூட எனக்குத் தெரிந்து நடந்துள்ளதே ,ஸ்ரீ ராம் ஜி :)

   அஞ்சுன்னு சிறுசு ,பத்துமா என்றால் பெருசாச்சே :)

   Delete
  4. அதிரா ,நீங்க எங்கே கிளம்புறீங்க ,அஞ்சுவே எதுக்கும் அஞ்சுவதாக தெரியவில்லையே :)

   Delete
 5. பிராண்‘டீ’ விற்றால் பிழைத்துக் கொள்ளலாம்...!

  இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல... பக்கத்தில ஒரு சீட்ட எழுதிப் போடுங்க...!

  வெத்தலையில மைபோட்டுப் பாத்தா தெரியுது...!

  தந்தை எட்டடி... குட்டி பதினாறு அடி பாயனுமுல்ல... சம்பாதிக்க வழி தேடி அலைகிறார்கள்...!

  வீட்டு மானம் வெளியில போகக் கூடாதில்ல...!

  சீனிவாசன் அப்படித்தான் கேட்க வேண்டும்...!

  த.ம. 5  ReplyDelete
  Replies
  1. இருவருமே ஃபிரண்டியாதான் இருக்காங்க :)

   இன்ன கொள்கைக்காக செத்தார்னா:)

   பிரில் மையைப் போட்டா நல்லா தெரியுமா :)

   சம்பாதிக்க வழியை விட்டுட்டு தேடுறாங்கன்னு சொல்லுங்க :)

   இல்லைன்னாலும் குடிகாரனை யாருக்கும் தெரியாதில்லே :)

   இப்படியே குடிச்சுகிட்டு இருந்தா சீனி வாசனையைக் கூட பார்க்க முடியாம போயிடும் :)

   Delete
 6. ஓரே தொழில் செஞ்சவங்கள விட்டு கொடுப்பாங்களா ?

  ReplyDelete
  Replies
  1. நமக்குதான் அவங்களோட தொழில் ரகசியம் புரிய மாட்டேங்குது :)

   Delete
 7. நிறையச் சீனி போட்டு ஒரு டீ!
  என்றதும்
  சுகர் பேஷன்ட் யாரென்று
  கண்டு பிடிச்சிடலாமே!

  ReplyDelete
  Replies
  1. ஆச்சரியமா பார்க்கிறவங்க எல்லோரும்தானே :)

   Delete
 8. செத்துட்டு கட்ச் பேரை சொல்லி நிவாரணம்...ஆம் உண்மை கட்க்ஹ்இயி. விலம்பரம் கூட அனைத்தும் ரசித்தோம் ஜி..

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தானே நடந்துட்டு இருக்கு :)

   Delete
 9. வீட்டுக்கு ஒரு சுகர் பேசன்ட் கொடுத்தது மோடியின் வல்லமையாக இருக்குமோ....அவுக டீ வித்தவகளாச்சே....

  ReplyDelete
  Replies
  1. இதுக்குத்தான் அவரோட தோஸ்த் சாமியார் ராம்தேவ் மூலிகை டீ குடிக்கச் சொல்றாரா :)

   Delete