27 April 2017

கல்யாணமானா ஒரே சோகம்தானா :)

தமிழ் மேல் ஆர்வமில்லை :)
              ''புதுசா வந்திருக்கிற அதிகாரிக்கு தமிழ்ப் பற்று அதிகம் போலிருக்கு ...கதவுலே pushனு இருந்ததை 'தள்ளு 'ன்னு எழுதச் சொல்லிட்டாரே !''
               '' இந்த  'தள்ளு 'க்கு என்ன அர்த்தம்னு பார்க்கத் தானே  போறீங்க !''
மரமும் அவரைப் போலத்தானா :)                
             ''நீங்க முன்பு எப்போதாவது மரக்கன்றை நட்டு இருக்கீங்களான்னு ஏன் கேட்கிறீங்க ?'' 
              ''நீங்களே பாருங்க தலைவரே  ,நீங்க கும்பிடுற மாதிரியே இருக்கே !''
 பெண் பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :)
           ''என்னங்க ,பெண் பார்க்க வர்றவங்களை சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வரச் சொல்றீங்களே ,ஏன் ?''
            '' டிவி சீரியல்களைப் பார்க்காமல் ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு   !''

வாயை மூடி பேசவும் முடியும் என்றால் .....!
          ''அந்த படத்தைப்  பார்க்கப் போறேன்னு சொன்னா ...காதை  மூடி கேட்கவும்னு ஏன் சொல்றீங்க ?''
          ''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''

கல்யாணமானா ஒரே சோகம்தானா :)
         ''நீங்க கல்யாணம் ஆன பிறகுதான் ஜோக் எழுத ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''
         ''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது சிரிக்கட்டுமேன்னுதான் !''

குறள் வழி நடக்கும் நாய் :)
சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...
வாலறுந்த நாய் ...
வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் 'விசுவாசமாய் 
சுற்றி சுற்றி வருகிறதே !

34 comments:

 1. மாமு மாமூலைத் தள்ளுனு சொல்றாரோ...

  மற்றவர்களாவது சிரிக்கட்டும் உண்மை ஜி

  ReplyDelete
  Replies
  1. எச்சூச்ச்மீ பகவான் ஜீ... இங்கின நித்திரைக் குளிசை கிடைக்குமோ?:) நாளைக்கு இரவுக்கு ஒராளுக்கு இங்கின கொடுக்கோணும்:).. ரைம் ஐப் பார்த்து பதறி அடிச்சு 4 கால் பாச்சலில் ஸ்ரெப்ஸ்சால ஓடி, மாடி ஏறி றூமுக்கு வந்து கொம்பியூட்டரைத் திறந்தேனா:) மீ 1ஸ்ட் இல்லே:) ஹா ஹா ஹா சரி விடுங்கோ.. வீரனுக்கு தோல்வியும் அயகாம்:)

   Delete
  2. ஹா ஹா ஹா ஹையோ கில்லர்ஜி எதுக்கு முறைக்கிறார்ர்ர்ர் நான் அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்ன்ன்ன்?:).

   Delete
  3. இவரிடம் தமிழ் படாதபாடு படுதே ,ஜி :)

   Delete
  4. அதிரா ,நித்திரைக் குளிசை எனக்கும் சேர்த்து அனுப்புங்கோ , ராத்திரி பூரா 'தம'ன்னா நினைப்புதான் ... பதிவு 'தம'ன்னாவில் சரியாய் சேரும் வரை தூக்கம் வர மாட்டேங்குதே :)'

   Delete
  5. அப்போ தமனாக்கும் ஒரு குளிசை கொடுத்திட்டால் போச்சு:)

   Delete
  6. இன்னைக்கு பாயசம் போட்டு விடவேண்டியதுதான் ...டயலாக்கைப் போலிருக்கே :)

   Delete
 2. டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:) இது கண் துடைக்க:)..
  கடசி ரெண்டையும் ரசிச்சேன்..:)

  ReplyDelete
  Replies
  1. வருந்துகிறேன் ,என் இஷ்யூ, உங்களை டிஷ்யூ கேட்க வைச்சிடுச்சே :)

   Delete
 3. //கல்யாணமானா ஒரே சோகம்தானா :)
  ''நீங்க கல்யாணம் ஆன பிறகுதான் ஜோக் எழுத ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''
  ''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது சிரிக்கட்டுமேன்னுதான் !''//

  ஓ இதுதான், இப்பூடி புளொக் எழுதக் காரணமோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

  ReplyDelete
  Replies
  1. #மீ ரொம்ப நல்ல பொண்ணு:)#
   இதை கில்லர்ஜி சொல்லட்டும் ,நம்புறேன் :)

   Delete
  2. ஹா ஹா ஹா இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊஊ:)..

   Delete
 4. லஞ்சம் கேட்டால் வெளியே பிடித்துத் "தள்ளு"

  ஆச்சர்யமான மரம். கோவில் சிற்பம் போலுள்ளது.

  இப்போ எல்லாம் சனிக்கிழமைகளில் கூட சீரியல்கள் இருக்கு போலிருக்கே...

  ஒரு காதை மூடிக் கொண்டால் போதும். ஒரு அர்த்தம் தெரியணும் இல்லை?

  பொதுநலம் கருதி வெளியிடுவோர்... ஜோக்காளி..

  நாய் வழி தனி வழி!

  ReplyDelete
  Replies
  1. இப்படிச் சொலும் பொற்காலம் இனி வருமா :)

   இயற்கை வடித்த சிற்பம் அழகோ அழகு தானே :)

   அழாமல் ஒரு நாளும் இருக்கக் கூடாதோ :)

   ஒரே அர்த்தமாயிருந்தால் ரசிக்கலாம் :)

   நான் சிரிக்கலைன்னு முடிவே பண்ணிட்டீங்களா :)

   மோப்ப சக்தி இருந்தால் அந்த வழி நமக்கு தெரியக் கூடுமோ :)

   Delete
 5. செல்லாததை வெளியே தள்ளு... செல்லுபடியாவதை மட்டும் உள்ளே தள்ளு... எதையும் தள்ளாத வயது...!

  நான் தரையோடு தரையாக விழுந்துதானே கும்பிடுவேன்... ஓ... மரம் தரையில் விழுந்துதான் பிழைத்ததோ...?!

  அழுது வடியிலனாலும்....சனியன் பிடிக்காமலா போகும்!

  அப்படி என்னதான் நமக்குத் தெரியாமா...? பார்த்திடுவோமே...!

  நாமதான் சிரிக்க முடியலே, மத்தவங்களும் ஏன்...!

  மொத்தமா பின்னாடி ஒரு நாளைக்கு இருக்கில்ல...!

  த.ம. 3


  ReplyDelete
  Replies
  1. காரியமாக காசைத் தள்ளு ,இல்லாதவனை வெளியே தள்ளுன்னும் சொல்வாரோ :)

   ஓ ,நீங்க அந்த கட்சியா:)

   வாரத்திலே ஐந்து நாள் பார்த்தால் பிடிக்கிற சனியன் ,மீதி ரெண்டு பார்க்காமலே பிடிக்குமோ :)

   நமக்கு எதுதான் தெரியாது :)

   சிரிக்கணுமா :)

   பின்னாடியா ,விபரீதமா இருக்கே ,நீங்க சொல்றதைப் பார்த்தால் :)

   Delete
 6. ர்சித்தேன் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. காதை திறந்து கேட்க முடியுதா ,சில படங்களின் வசனத்தை :)

   Delete
 7. மரம் அழகு...இயற்கையாகவே சிற்பம் போல் உள்ளது. ..

  அணைத்ட்ஹ்உம் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. தலைவர் தோள்மேலே யாரோ நிற்பதுபோலிருக்கே கவனித்தீர்களா ஜி :)

   Delete
 8. தள்ளு ஜோக் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தள்ளு என்பது சிம்பாலிக்கா எழுதியிருப்பது உண்மைதானே :)

   Delete
 9. Replies
  1. ஆறு ,மிகுந்த ஆறுதலைத் தருகிறது :)

   Delete
 10. மத்தவங்களாவது சிரிக்கட்டுமேன்னுதான் !''----ஆகா...என்ன பா...பரந்த உள்ளம்

  ReplyDelete
  Replies
  1. சார்லி (சாப்ளின் )வாழ்க்கை அப்படித்தான் இருந்ததாமே:)

   Delete
 11. '' இந்த 'தள்ளு 'க்கு என்ன அர்த்தம்னு பார்க்கத் தானே போறீங்க !''//

  ஏதேனும் பத்திரிகைக்கு அனுப்புனீங்களா? அசத்தல் ஜோக் ஆயிற்றே.

  ReplyDelete
  Replies
  1. அனுப்பிட்டு, காத்திருக்க நேரமில்லை :)

   Delete
 12. பெண் பார்க்க ரெண்டு நாள் தான் - அவை
  சனி, ஞாயிறு தானா - அவை
  பெண்கள்
  தொலைக்காட்சி நாடகங்கள் பார்க்காத நாள்களா?

  ReplyDelete
  Replies
  1. இங்கே தெரிவது ,உங்கட நாட்டிலேயும் தெரியுமே :)

   Delete
 13. அனைத்தும் ரசித்தேன்....

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. மரக் கும்பிடு படம் அசத்தலா ஜி :)

   Delete