3 April 2017

குட்டைப் பாவாடை படுத்தும் பாடு :)

ஒரு பொய்யாவது சொல் கண்ணே :)           
             ''லவ் லெட்டர்லே என்ன எழுதியிருக்கு ,இப்படி சிரிக்கிறே ?''
           ''என்னைப் பிடிக்காட்டி உன் அண்ணனிடம் சொன்னாலும் பரவாயில்லை ,என்னை மட்டும் 'அண்ணா 'என்று  சொல்லிவிடாதேன்னுதான் !''

விவரமான பய பிள்ளையா இருக்கானே :)
               ''நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம் என்பதை  நம்ப முடியலையா ,ஏண்டா ? ''
               ''ஆமைக்கு பல் இல்லேன்னு சொன்னதும் நீங்கதான் ....அது மனுசனை விட அதிக ஆண்டுகள் உயிர் வாழும்னு சொன்னதும் நீங்கதானே ,ஸார் !''

குட்டைப் பாவாடை படுத்தும் பாடு :)
           ''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னு பட்டது, அதனாலே விட்டுட்டேன்!''
          '' எதை?''
           ''கோவிலுக்குப்  போவதை !''
சினிமா /கோவில்னு சொன்னா 'நோ பிராப்ளம் ':)
          ''ஒரு உண்மையைச் சொன்னதாலே ,குடும்பத்திலே குழப்பமா ,ஏன் ?''
   ''FM ரேடியோவிலே ,'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன்,அது மனைவி காதுலேயும்  விழுந்துடுச்சே  !''

பாடல் அருமை ,ஆனால் 'லாஜிக் ':)
புருஷோத்தமன் புகழை ...
புல்லாங்குழல்கள் பாடினால் இனிமைதான் !
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் பாடினால் நல்லாவா இருக்கும் ...?

30 comments:

 1. பாடல் லாஜிக் யோசிக்க வைக்கிறதுதான்! ஆமை தனது நிதானமான வாழ்க்கை முறையால்தான் அத்தனை காலம் உயிரோடு இருக்கிறதோ!

  ReplyDelete
  Replies
  1. காட்டு மூங்கிலில் சத்தம் வரலாம் ,இசை வராதுதானே :)
   இத்தனைக் காலம் வாழ ஆமை என்ன மூச்சுப் பயிற்சி செய்கிறதோ :)

   Delete
 2. ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?

  ‘நொறுங்கத் திங்காமலும் நூறாண்டு வாழலாம்...!’ இனிமேல்தான் சொல்லுவேன்...!

  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானே...!

  சின்ன வீட்டுக்குத்தானே பெரிய வீடு கட்டிக் கொடுத்து இருக்கீங்க...?!

  அடி மடியில் கை வைக்கிறீங்களே...!

  த.ம. 2  ReplyDelete
  Replies
  1. அண்ணனிடம் அடி கூட வாங்கிக்கிறேன் என்று சொல்வதில் இருந்தே தெரியுதே ,சமத்து என்று :)

   ஆனால் வேகம் இருக்காதே :)

   நாறத்தான் செய்யுமா :)

   ஆசைக் கோளாறு யாரை விட்டது :)

   கண்ணதாசன் பதில் சொல்வாரா :)   Delete
 3. கோவிலில் சைட் அடிக்க கூடாதா ?

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு ஏது இடம் பொருள் ஏவல் :)

   Delete
 4. ரசித்தேன் நண்பரே
  தம முயன்று கொண்டே இருக்கிறேன்
  கண்ணாமூச்சு விளையாடிக் கொண்டே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வெற்றி பெற்றதும் விளையாட்டை முடித்துக் கொண்டது :)

   Delete
 5. Replies
  1. FM ரேடியோ நிகழ்ச்சி அருமைதானே :)

   Delete
 6. அனைத்தையும் ரசித்தேன். அதுசரி. புகைப்படங்களை எங்கிருந்து ஐயா எடுக்கின்றீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. புகைப் படம் ,நேற்று இன்னொருவருடையது ,இன்று என்னுடையது ,நாளை உங்களுடையதாகிறது :)

   Delete
 7. Replies
  1. அவ்வளவுதானா :)

   Delete
 8. பிடிக்காது என்று தோன்றினால் லவ் லெட்டர் கொடுக்கலாமா
  நீங்கள் ஆமையா
  சைட் அடிப்பது மற்ற இடத்தில் ஓக்கேயா
  அதற்குத்தான் உண்மை விளம்பேல் என்பது
  மூங்கிலிலிருந்தும் புல்லாங்குழல் செய்கிறார்களே  ReplyDelete
  Replies
  1. இதைப் பார்த்ததும் ஒரு வேளைப் பிடிக்கலாம் இல்லையா :)
   வலையுலகில் நீந்தும் ஆமை :)
   எந்த இடம் என்று இருக்கா :)
   தானாடா விட்டாலும் தசை ஆடுகிறதே :)
   செய்த பின்னால்,அது வித்தகன் கையில் போனால்தானே இசை பிறக்கும் :)

   Delete
 9. அருமை அய்யா
  தம

  ReplyDelete
  Replies
  1. ஒரு பொய்யாவது சொல் கண்ணே பாடலும்தானே :)

   Delete
 10. வழக்கம்போல் நல்ல ஜோக்குகள் தான்!

  ReplyDelete
  Replies
  1. விவரமான பய பிள்ளைங்கிறதை ஒப்புக்கிறீங்களா:)

   Delete
 11. அதானே..பிள்ள கோவிலுக்கு போவதை நிறுத்தினாலே ...திருந்திருச்சின்னுதானே..அர்த்தம்

  ReplyDelete
  Replies
  1. திருந்தினாலும் அம்மன் தரிசனம் காண ஆசைப் படுகிறானே :)

   Delete
 12. குட்டைப்பாவாடை சூட்டைத்தனிக்கும்)))

  ReplyDelete
 13. அனைத்தும் ரசித்தேன் நன்று

  ReplyDelete
  Replies
  1. இருவரின் குட்டைப் பாவாடை , இத்தனை பேரை படுத்தும் பாடும் அருமைதானே :)

   Delete
 14. Replies
  1. நேற்று சரி ,இன்று வழக்கம் போல் தமிழ் மணத்தில் இணைய வில்லையே அய்யா :)

   Delete
 15. குட்டைப் பாவாடை படுத்தும் பாட்டை
  படைத் தரப்பின் பின் திரும்பலை வைத்தே
  காணமுடிகிறதே! - படத்தில்...

  ReplyDelete
  Replies
  1. கவனம் எல்லாம் இப்படி பாவாடை மேல் இருந்தால் ,எதிரி சுலபமாய் பாடைக் கட்டி விட மாட்டானா :)

   Delete