19 April 2017

நடிகையான பின் இதைத் தவிர்க்க முடியுமா :)

படித்ததில் இடித்தது :)
                 ''டெல்லியில்  நேற்று  'புல் தின்னும் போராட்டம் ' நடத்தின விவசாயிகளைப் பார்த்தால் பாவமாயிருக்கா ,ஏன் ?''
                 ''அவங்க ரொம்ப நாளைக்கு அசை போட்டுகிட்டே இருக்கணும்னு.... கேவலப் படுத்துற மாதிரியிருக்கே,பிரதமரின் நேற்றையப் பேச்சு !''
            இடித்த செய்தி >>> 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது  #பிரதமர் மோடி உரை !
நடிகையான பின் இதைத் தவிர்க்க முடியுமா :)
         ''மேக்கப் போட்டுக்கிறது கஷ்டமாயிருக்கு ,டைரக்டர் ஸார்!''
         ''போட்டுக்கலைன்னா பார்க்கிறவங்களுக்கு கஷ்டமா போயிடுமே !''
( இந்த ஆறு நடிகைகள் யார் என்று யாராவது சொல்ல முடியுமா :)

'ஆண்' வரிசையில் பெண் வரலாமா :)                  
           ''அந்த பெண்மணி மட்டும் ஆண்கள் வரிசையில் வந்து நிற்கிறாங்களே ,ஏன் ?''
           ''(ஆண்)ONலைன்லே ஈசியா டிக்கெட் வாங்கலாம் என்பதை தப்பா புரிஞ்சிகிட்டாங்க போலிருக்கு !''

நல்ல வேளை ,ஜட்டி சைஸை கேட்கலே :)
            ''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
            ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !''

முகூர்த்த நேரம் தாமதம் என்பதற்காக அவசரப் படலாமா   :)
        ''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?
       ''அட்சதை  தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று தின்னுட்டாங்களே !''

28 comments:

 1. அனைத்தும் அருமை
  மிகக் குறிப்பாய் டைரக்டரின் மறுமொழி
  பகிர்வுக்கும் தொடரவும்
  தொடர்ந்து முதல்வராகவே தொடரவும்
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மேக் அப் இல்லா நடிகைகளைப் பார்த்தால் அப்படித்தானே தோன்றுகிறது :)

   என் அர்ப்பணிப்பும் ,வலையுலக உறவுகள் தரும் ஊக்கமும் இருக்கும் வரை முதல்வனுக்கு ஆபத்தில்லை :)

   Delete
 2. Replies
  1. மேக் அப் இல்லா நடிகைகளையுமா :)

   Delete
 3. படங்களை ரசிக்க முடியவில்லை ஜி...!

  ReplyDelete
  Replies
  1. மேக் அப் போட்டால்தான் கனவுக் கன்னிகள் :)

   Delete
 4. அரிசி விலை ஏறிடுச்சே...

  ReplyDelete
  Replies
  1. மாட்டுக்கு கொடுக்கிற மதிப்பைக் கூட விவசாயிக்கு தர மறுக்கிறார்களே இந்த ஆட்சியாளர்கள் ?அரிசி விலைக் கூடத்தானே செய்யும் :)

   Delete
 5. படம்லாம் போட்டு பயமுறுத்துறீங்களே

  ReplyDelete
  Replies
  1. எந்த படம் உங்களைப் பயமுறுத்துகிறது :)

   Delete
 6. விவசாயிகள் உயிரோடு இருந்தால்...!

  கஷ்ட காலங்கிறது இதுதானோ...?!

  ஆண் லைன்... சிங்கம்டா... பாவம்...!

  உப்புக்குச் சப்பாணி...!


  பசிக் கொடுமை... மதியம் நடக்க வேண்டியது... மாலையாயிடுச்சு... மாலையிட மங்கை அவசரம்...!

  த.ம. 8


  ReplyDelete
  Replies
  1. வருமானம் என்பதற்கு பதில் மரணம் என்று இருக்க வேண்டுமோ :)

   கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமாய் இல்லையா :)

   ஆன்லைன்லே ரயில் டிக்கெட் எடுப்பது கஷ்டம்தானே :)

   விடுங்க ,அவன் பாணியில் கேட்டுட்டான் :)

   தாலியை எப்போவேணா கட்டிக்குங்க ,சோத்தைப் போடுங்கையா முதல்லே :)

   Delete
 7. //இந்த ஆறு நடிகைகள் யார் என்று யாராவது சொல்ல முடியுமா :)// என்ன இப்பூடிக் கேட்டிட்டீங்க?:)

  ReplyDelete
  Replies
  1. மணி 5 ஆச்சு இன்னும் காணல்லியே என தேடியிருக்கிறீங்க.. புறுணம் என்னன்னா:) ஸ்கூல் ஆரம்பமாகிவிட்டது, அதனால கொமெண்ட் மட்டும் எனில் நேரம் கிடைக்கும்போது மொபைலில் இருந்து போட்டிடுவேன், வோட் பண்ண கொம்பியூட்டர் திறக்க வேண்டி இருக்கு... அதனாலதான், இவ்ளோ நேரம் வராமல் இப்போ கொம்பியூட்டர் ஓபின் பண்ணி வந்தேன்... முடிந்தவரை வர முயற்சிக்கிறேன் கொம்பியூட்டர் ஊடாக.

   Delete
  2. உங்களாலும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை தானே அதிரா :)

   Delete
  3. ஆச்சரியமாயிருக்கு அதிரா ,வேலைக்கும் போய்வந்து அசராமல் எப்படி எல்லோருக்கும் கொமென்ட் போட முடிகிறது,அதுவும் ரசிக்க வைக்கும் விதமாய் :)

   Delete
 8. வணக்கம் ஜி !

  இந்தமுறை அத்தனையும் சுப்பர் காமடி அதிலும் மேக்கப்பு செம, ஆமா நயன்தாரா இவ்வளவு மோசமாவா இருப்பாங்க ஐயோ ஐயோ

  தம +1

  ReplyDelete
  Replies
  1. கனவுக் கன்னி நேரிலே வந்தால் அடையாளமே தெரியாது போலிருக்கா :)

   Delete
 9. ப பி எங்களுக்கும் ப பி...

  அனைத்தும் ரசித்தோம்ஜி....

  கீதா: ரசித்ததுடன்....நடிகைகள்...சமந்தா, அமலா பால், நயன், ஜெனிலியா, பிரியா மணி....இன்னும் ஒரு....பேர் டக்குனு வரலை....

  ReplyDelete
  Replies
  1. அது ப பி இல்லை ப இ :)

   டக்குனு ஞாபகத்துக்கு வராத பெயர் ,காஜல் அகர்வால்....சரியா கீதா மேடம் :)

   Delete
 10. என்ன கொடுமை ஐயா!
  அரிசியை மென்று தின்னுட்டாங்களா
  மணமக்களை எப்படி ஆசீர் வதிப்பது

  ReplyDelete
  Replies
  1. வயிறு காயும்போது மனசு எப்படி அய்யா ஆசீர்வதிக்கும் :)

   Delete
 11. ஆன்லைன் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. ஏதோ ஒரு லைனுக்கு வந்தாரே ,சந்தோசம் :)

   Delete
 12. அனைத்தும் அருமை
  அனைத்தும் ரசித்தேன்
  Tamil manam - 12
  https://kovaikkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. அட்சதை அரிசியை இப்படி சாப்பிட்டால் என்னதான் செய்றது :)

   Delete
 13. Replies
  1. உப்பிட்டவரின் உள் 'அளவும் 'நினைப்பது மிகவும் நன்றுதானே அய்யா :)

   Delete