4 April 2017

கணவன்கூட சண்டை போட உரிமை இருக்கே :)

 படித்ததில்  இடித்தது :)          
            ''கம்யூனிஸ்ட்டுக்களைக்  கண்டால் கொசுக்களுக்கும்  கொண்டாட்டமா  ,ஏன் ?''
             ''சிகப்பு நிறம் கொசுவுக்கு ரொம்ப பிடிக்குமாமே !''
இடித்த செய்தி ..கொசுவுக்கு பிடித்த நிறம் :)


கணவன்கூட  சண்டை போட உரிமை இருக்கே  :)
         ''என்னங்க , என் குரல்லே நடுக்கம்  இருக்குன்னு பாட்டுப்போட்டியில் என்னை நீக்கிட்டாங்க !''
         ''என் புருஷனையே நடுங்க வைக்கிற என் குரல்லே நடுக்கமான்னு சண்டை போட்டிருக்க வேண்டியது தானே ?''

தலைஎழுத்து அவரவர் தாய்மொழியில் தானா  :)
           ''ஜோசியரே ,என் நண்பரோட ஜாதகத்தைப் பார்த்து ,அவர் தலைஎழுத்தைச் சொல்ல முடியாதா ,ஏன் :)
            ''அவர் மலையாளியாச்சே !''

செல்போன், மனைவியா கணவனா :)
               ''என்னங்க ,செல்போனைப்  பார்த்தா என் நினைப்பு  வருதா ,ஏன்?''
               '' இருந்தாலும் தொல்லையா இருக்கு ,இல்லாட்டியும் கஷ்டமா இருக்கே !''

பித்ருக்களை அறியாத சத்ருக்களின் கேலி :)
       ''நீங்க எச்சில் கையாலே காக்கையை விரட்ட மாட்டீங்களாமே,ஏன்  ?''
       ''என் பித்ருக்களான காக்கைகளுக்கு  எதுக்கு எச்சில் பருக்கைன்னுதான் ? ''

 சேவலின் அவசரச் செய்தி ,நமக்கல்ல :)
கோழி கூவியா பொழுது விடியப் போகிறது ?
இல்லை ,சேவல் கூவியா பொழுது விடிகிறது ?
சேவல் இனமே இல்லாதபோது விடியாமலா இருந்தது ?
'நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் 'னு சேவல் 'சிம்பாலிக்காய் 'பெட்டைக் கோழிக்கு சொல்வதை எல்லாம் ...
நாம் சீரியசாய் எடுத்துக் கொள்ளக் கூடாது !

18 comments:

 1. கொசுக்களுக்கு நிறம் கூடத் தெரியுமா என்ன!

  :)))

  ஹா... ஹா... ஹா...

  :))

  நல்ல சிந்தனை அல்லது நல்ல சமாளிப்பு.

  ம்ம்ம்...

  தம இன்னும் சப்மிட் ஆகவில்லை!

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இதுதான் இடித்தது ,தொடுப்பைக் கிளிக்கிப் பாருங்க ஜி :)
   தலைஎழுத்து தாய் மொழியில் இருக்குமா :)
   உண்மைதானே :)
   குரல் நடுக்கத்தை ரசிக்க முடியாதே :)
   எப்படியெல்லாம் யோசிக்கிறார் :)
   சேவலின் அவசரம் சேவலுக்கு :)

   Delete
 2. கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு...!

  எந்த மொழி என்றால் என்ன? வழக்கம் போல சொல்ல வேண்டியதுதானே...! எதுவும்தான் நடக்கப் போறதில்லையே...!

  சும்மா சினிங்கிக்கிட்டே இருக்கில்ல...!

  இதுக்குத்தான் கொஞ்சமா குடிங்கன்னா... எங்கே கேக்குறீங்க...!

  காக்கைக்கு காக்கா பிடிக்கத் தெரியலையோ...?!

  கொக்கரக் கொக்கரக்கோ சேவலே! கொந்தளிக்கும் நெஞ்சிலே, கொண்டிருக்கும் அன்பிலே, அக்கறை காட்டினாத் தேவலே...!

  ReplyDelete
  Replies
  1. இருட்டுதான் பிடிச்ச நேரமா :)

   நடக்கலைன்னும் தெரிந்தும் நம்புறானே:)

   அதிகமா சினிங்கினாலும் எரிச்சலா வருதே :)

   குடிக்காதேன்னு சொன்னா கேட்காம ,இப்போ வருத்தப்பட்டு என்ன செய்ய :)

   தெரிந்தால் ஏன் பொறுக்கிக்கிட்டு திரியப் போவுது :)

   குப்பையைக் கிண்டுவதிலேயே இருந்தா எப்படி :)

   Delete
 3. கொசு ரத்தத்தின் நிறமும் சிவப்புதான் ஜி

  ReplyDelete
  Replies
  1. வேற நிற ரத்தமும் இருக்கா :)

   Delete
 4. எச்சில் பருக்கை...அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அதில் உள்ள ருசி அவருக்குத் தானே தெரிகிறது :)

   Delete
 5. அந்தக் கட்சியில் சேர நிறையவே கொசுக்கள் உண்டு
  தலை எழுத்தை தலையில் தானே பார்க்க வேண்டும் ஜாதகத்திலா
  நடுவர்கள் எல்லாம் புருஷர்களில்லையே
  பித்ருக்களை விட காகம் உயர்ந்து விட்டதா
  சேவல் சிம்பாலிக்கா சொல்வதுதான் கொக்கரக்கோவா

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் சேர்த்துக்க மாட்டார்களே :)
   ஜாதகம்தாம் தலை எழுத்தை நிர்ணயிக்கிறதாமே :)
   புருஷனே நடுநிலை வகிக்க முடியாதே :)
   வாழும் பித்ருவாச்சே :)
   கொக்கோகமா:)

   Delete
 6. அனைத்தும் நன்றாக உள்ளன

  ReplyDelete
  Replies
  1. சேவலின் அவசரச் செய்தி ,நமக்கல்ல என்பதுவும் தானே :)

   Delete
 7. Replies
  1. கொடுத்து வைத்த கொசுக்கள்தானே:)

   Delete
 8. செல்போன், மனைவியா கணவனா
  இவை தான்
  இன்றைய தொல்லையாச்சே!

  ReplyDelete
  Replies
  1. இன்பத் தொல்லைன்னு சொல்லலாமா :)

   Delete
 9. என்ன ஆச்சர்யம்! ஜோக்காளி தளத்தில் இன்றைய பதிவு இல்லையா? என்னடா இது பதிவுலகுக்கு வந்த சோதனை!!!!

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் நேற்று பதிவை ஏற்றுக் கொள்ளாமல் சோதித்தது ,நான் done செய்யாமல் publish செய்து சோதித்து விட்டேன் !தாமதம் என்றாலும் பதிவை சேர்த்து விட்டேன் ஜி :)

   Delete