5 April 2017

மனைவி என்றதும் மனதில் தோன்றும் பிம்பம் :)

இப்படியொரு 'லிப் லாக்'கை கமலும் செய்ததில்லை :)
          ''என்னடா சொல்றே ,அந்த 'லிப் லாக்'கைப் பார்த்து அசந்து போயிட்டியா ?''
          ''நீயே பாரேன் !''
மனைவி கேள்விபட்டது உண்மையா :)
       '' மூக்குத்தியை ஏன் கழற்றிட்டே ?''
       ''மூக்குத்தி போட்டுகிட்டா புருஷன் ரொம்ப நாள் வாழ்வான்னு சொல்றாங்களே !''

மனைவி என்றதும் மனதில் தோன்றும் பிம்பம் :)
              ''தலைவரோட சம்சாரம் ஏன் பத்ரகாளி ஆயிட்டாங்க ?''
             ''வரப் போற புயலுக்கு உன் பெயரை வைக்க சிபாரிசு பண்ணியிருக்கேன்னு தலைவர் சொன்னாராம் !''

காதிலே பூ சுத்துறதுக்கும் அளவில்லையா :)
         ''எக்ஸ்ட்ரா சைஸ் பட்ஸ் கிடைக்கும்னு போட்டு இருக்கீங்களே ,எப்படி இருக்கும் ?''
         ''வலது காதில் நுழைத்து இடது காதையும் ,இடது காதில் நுழைத்து வலது காதையும் கிளீன்  பண்ணலாம் !''

அழுவோரைத் தேற்றுவாரில்லை :)
குழந்தையின் முதல் அழுகையை கேட்பதற்கு  மட்டுமே 
அனைவரும் ஆவலோடு இருக்கிறார்கள் !

26 comments:

 1. குழந்தையின் அழுகை ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தேற்றுவாரில்லை என்பது உண்மையா இல்லையா ஜி :)

   Delete
 2. 1) கொஞ்சம் சிலிப் ஆனா - ஒரேயடியா லிப் லாக் ஆயிடும்!..
  சரி!.. இன்னொரு விஷயம் கேக்கலாம்..ன்னு பார்த்தால் - !?..
  பக்கத்திலயே பாம்பை வெச்சிருக்கே!..
  எதுக்கு வம்பு.. ஒரு ஓரமா போயிடுவோம்!..

  2) அந்த அளவுக்கு புருஷன் ஆகாமப் போயிட்டான்!.. என்ன செய்ய?..

  3) இவ ஒத்துக்கலேன்னா என்ன?.. அடுத்தவ கிட்டே கேக்க வேண்டியது தானே!?..
  (பொண்டாட்டி பத்ரகாளியா ஆனாலும் புருசன் தான் திருந்த மாட்டேங்கிறானே!..)

  4) அப்படியே மூக்கு..லயும் இழுக்கிற மாதிரி இருக்கா..ன்னு கேளுங்க!?..

  5) அதுக்கப்புறம் கேட்டா தான் பர்ஸ் காலியாகிடுமே!..

  ReplyDelete
  Replies
  1. ஹும் .. பாம்புக்கு கிடைத்த யோகம் :)

   மூக்குத்திக் காற்று இவன்மேல் பட விட்டிருக்க மாட்டானோ :)

   இவ பேரை வைச்சா அடுத்து அவ பத்ரகாளி ஆகத் தானே போறா :)

   அடுத்து வாய் வழியா வர்ற மாதிரி கேட்க மாட்டீங்களே :)

   அதுவும் குழந்தையைத் தேற்றி விடலாம் ....ஆனால் :)

   Delete
 3. மூக்குத்திக் கதை உண்மையா? ஹா ஹா.. 3ம் வோட் போட்டுவிட்டேன்ன்.. பொய் எனில் கையை செக் பண்ணுங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் நம்பப் படுகிறது :)
   நம்ப மாட்டேன் ,விரலில் மையுடன் கூடிய போட்டோவை fbல் போடுங்க :)

   Delete
 4. ஓ இதுதான் லிப் லாக்கா
  அவர் அது இடைஞ்சலாக இருப்பதாகக் கூறினாரே
  அவர்தான் பெயரில்லாத புயலாயிற்றே
  அதற்கு சுசீந்திரம் அனுமாராய் இருக்க வேண்டும்
  குழந்தை நலமுடன் பிறந்திருப்பதைக் காட்டும் அழுகை அல்லவோ


  ReplyDelete
  Replies
  1. எப்படி உங்களால் ஒண்ணுமே தெரியாத் மாதிரி கேட்க முடியுது :)
   இத்துணூண்டு மூக்குத்தி என்ன இடைஞ்சல் பண்ணுதாம் :)
   எச்சரிக்கை செய்யாமல் வரும் புயலும்கூட :)
   அங்கே கல்லிலே அப்படி கலைத் திறமையைக் காட்டி இருக்கிறார்களோ :)
   அழுகை என்றாலும் மகிழ்ச்சி தருமே :)

   Delete
 5. 'லிப் லாக்' உண்மையானதா
  புகைப்படக்காரர் திறமையோ
  எனக்கோ
  தலை சுற்றுது ஐயா!

  ReplyDelete
  Replies
  1. பாம்பு தீண்டhமலே உங்களுக்கு தலை சுற்றுதா:)

   Delete
 6. லிப்லாக்நன்கு

  ReplyDelete
  Replies
  1. சாவி தேவைப் படாத லாக் ஆச்சே இது :)

   Delete
 7. Replies
  1. பாம்பைக் கண்டாலே நமiக்கு அருவருப்பாய் இருக்கே ,அவங்க எப்படி :)

   Delete
 8. தம ஓட்டு போட்டுவிட்டேன்
  வெற்றி வெற்றி

  ReplyDelete
  Replies
  1. அடிக்கடி தமிழ்மணம் தமிழ் மக்கராகி விடுகிறதே :)

   Delete
 9. இப்படியொரு 'லிப் லாக்'கை கமலும் செய்ததில்லை :)//

  பெண்ணென்றால் பாம்பும் கிறங்குமோ!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த படத்தில் செய்யக் கூடும் :)

   Delete
 10. ‘எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்... நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா...!’

  ‘மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா....!’ அய்யோ மூச்சு முட்டுதே...!

  ‘புயலுக்குப் பின்னே அமைதி – வரும் துயருக்குப் பின் சுகம் ஒரு பாதி... அடிக்கிற கைதான் அணைக்கும்!’

  ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ர‌கசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே. !’

  ‘பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய் ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே...!’

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜேம்ஸ் ஜி ,இவ்வளவு பொருத்தமாய் பாட்டுக்கள் இருப்பதைக் கண்டு பிடித்ததற்கு :)

   Delete
 11. ...சிலசமயம் ஜோக்கை விட, படங்கள் செமையாக இருக்கிறதே, ஏன்?

  இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. படங்களை நான் ரசிப்பதாலும் ,ஜோக்குகளை நீங்கள் ரசிப்பதாலும் இருக்குமோ :)

   Delete
 12. Replies
  1. இந்த வார பூங்கொத்தை அந்த தைரியமான் பெண்மணிக்கு கொடுத்து விடலாமா ஸ்ரீராம் ஜி :)

   Delete
 13. ஐயோ முதல் லிப்லாக் பயமுறுத்தி கமென்ட் போட கையை லாக் செய்துவிட்டது ஹஹஹஹ்..

  அனைத்தும் ரசித்தோம் ஜி குழந்தையின் அழுகை உட்பட!!

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை 'அடுத்த பதிவுக்கு வாங்க :)

   Delete