Sunday, 9 April 2017

ஆண்களுக்கு 'டைம் பாஸ் ' சரி ,பெண்களுக்கு :)

இந்த  சந்தேகம் தீருமா :)              
               ''சேலை கட்டிய மாதரை நம்பாதேன்னு சொல்றதை நீங்க நம்புறீங்களா ?''
              ''அதையும் நம்ப முடியலே ,அதைச் சொன்னவர் ஔவையார் என்பதையும்  நம்ப முடியலே !''

எம்டனுக்கு எம்டன்கள்:)
           ''பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போய் ஒரு மாசமாச்சே ,அடுத்து பேசவே இல்லையே ,நியாயமா ?''
           ''அன்னைக்கு ,பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் டிபன்னு சொன்னீங்களே ,அது மட்டும் நியாயமா ?''

மனைவிக்குத் தெரியாமல் வச்சுக்கலாமா :)
             "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது ...பலபேர் , மனைவிக்குத் தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
                "எதை ?"
               "பேங்க் பாலன்ஸ்சை தான் !அதை  மறைக்க  பாலன்ஸ் சிலிப்பை கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே! "

ஆண்களுக்கு 'டைம் பாஸ் ' சரி ,பெண்களுக்கு :)
         ''டைம் பாஸ் வார இதழில் ஆண்களுக்கான  'கில்மா ' மேட்டர்தான் வருது ! நாம படிக்கிற மாதிரி இல்லேடி !''
          ''ஒண்ணும் கவலைப் படாதே !அடுத்து பெண்களுக்காக 'மெனோ பாஸ் 'னு வார இதழ் வரலாம்  !''


உயிரே ,உன் விலை என்ன :)
கோழிகளின் கழுத்து அறுபடும் போதுகூட  ஏற்படாத பரிதாபம் ...
'கோழிக் கறி கிலோ ரூ 100,உயிருடன் கிலோ ரூ 80'
என்பதைப் படிக்கையில் ஏற்படுகிறது !
உயிருக்கு என்னதான் மதிப்பு ?

28 comments:

  1. வணக்கம் !

    ஔவைமொழி அமிழ்த மொழி அவர் உண்மையை சொன்னார் ஜி
    எல்லாம் ரசித்தேன் அருமை அருமை
    தம 1

    ReplyDelete
    Replies
    1. ஔவைக்கு இருக்கும் தைரியம் யாருக்கு வரும் ,இப்படி உண்மையை போட்டு உடைத்து விட்டாரே :)

      Delete
  2. Replies
    1. எம்டனுக்கு எம்டன்களையும் தானே :)

      Delete
  3. Replies
    1. மனைவிக்குத் தெரியாமல் வைத்துக் கொண்டிருப்பதையுமா :)

      Delete
  4. Replies
    1. ஆண் பாஸ் ,பெண் பாஸ் சரிதானே :)

      Delete
  5. பணம் ஒன்றிக்கு தான் இன்றைக்கு மதிப்பு ஜி...

    ReplyDelete
    Replies
    1. அதையும் மதிப்பு இழக்கச் செய்வது சரியா :)

      Delete
  6. மெனோபாஸ் ரசிக்கும்படி இல்லை
    தம +

    ReplyDelete
    Replies
    1. அது வராத பெண்ணை உலகம் ரசிக்கவில்லையே ஜி :)

      Delete
  7. அதனால்தான் யாரும் சேலை கட்டுவதில்லையோ...?!

    பொண்ணு கொடுத்த டிபன் மட்டும் பிடிச்சிருக்குன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டிங்களே...!

    பாலன்ஸ் சிலிப்பை கிழிச்சு ப் போட மறந்திடுறாங்கன்னுதான் ATM ல சிலிப்பே வக்கிறது இல்லையோ...?!

    பாஸ்... பெண் பாவம் பொல்லாதது பாஸ்... பாஸ்...!

    ‘அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்... கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு...’ ஓ ஏற்கனவேதான் வெட்டியாச்சா...?!

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. பழமொழியை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி திரித்துச் சொல்வார்களோ :)

      டிபன் செய்தவரை மட்டும் பிடிச்சிருக்குன்னு சொன்னாலும் கோவிச்சுக்க மாட்டோம் :)

      இல்லைன்னு சொல்றதுக்கு வங்கியும் உடந்தையா :)

      பாவம் எங்கே வந்தது இதில் :)

      சாப்பிடுற முன்னாடி துட்டை வெட்டுப்பா:)

      Delete
  8. Replies
    1. அவவைச் சொல்லுமா :)

      Delete
  9. ஔவையார் அப்படியா சொன்னார் !!!!!!!

    தொடர்கிறேன் பகவானே!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு வேற அர்த்தம் என்று கூகுள் தேடலில் தெரிகிறதே :)

      Delete
  10. ஆகா..இதுவல்லவோ..பத்திரிகா..தர்மம் என்பது..............

    ReplyDelete
    Replies
    1. காசு பார்ப்பதற்கு சொல்லியாத் தரணும் :)

      Delete
  11. அது ஔவையாரின் மொழி என்று இப்போது நீங்கள் சொல்லிப் படிக்கும் போதுதான் அறி கிறேன்
    அப்படியும் கண்டிஷன் போடுகிறார்களா என்ன
    ஆனால் அவர்களுக்குத் தெரியாதது மனைவிக்கு எல்லாம் தெரியும் என்பதுதான்
    இந்த கில்மா மேட்டரைப் பெண்களும் தெரிந்து கொள்ளலாமே
    மாடுகளைக் காப்போம் என்று மனித உயிர்களையே எடுக்கிறார்களே

    ReplyDelete
    Replies
    1. அவ்வை மொழி ,பழமொழி .விவேக சிந்தாமணியில் சொல்லப் பட்டது என்றும் சொல்கிறார்கள் ,எது உண்மையோ :)
      வேண்டாம் என்பதை இப்படியும் சொல்கிறார்கள் :)
      யார் யாருக்கு என்ன தெரியும்னு எனக்குத் தெரியாது :)
      அது ஒன்லி ஜென்ட்ஸ் மேட்டராச்சே :)
      உயிரைக் கொடுத்தும் காப்போம்னு சொல்றாங்களோ :)

      Delete
  12. ஜோக் மூலமாக காட்டி கொடுத்து விட்டீரே நண்பரே

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு முன்னாடி யாருக்கும் தெரியாதா :)

      Delete
  13. ...ரசித்தோம் ஜி....அனைத்தும்..ஒளவையையும்

    ReplyDelete
    Replies
    1. ஔவை புகழ் ஓங்குக :)

      Delete
  14. மனைவிக்குத் தெரியாமல்
    "எதை
    வச்சுக்கிட்டு இருக்காங்கன்னா"
    "பேங்க் பாலன்ஸ்சை தான்!
    பாலன்ஸ் சிலிப்பை
    கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே...
    அப்ப தான் படித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,மறைவாக வேறெதையும் வைத்துக் கொள்ளவில்லையே:)

      Delete