31 May 2017

பெண்ணைப் பற்றி தரகர் சொன்னதும் பொய்யே பொய்யே :)

பாசம் பொங்கி வழிய காரணம் இதுதானா :)             
                  ''உங்க அப்பா அம்மாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு ,உடனே பார்க்கணும் போல இருக்கு ,போகலாமா ?''
               '' காலேஜ்  ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிற என் தங்கச்சி ,லீவிலே வீட்டுக்கு வந்திருக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''

துவட்டிக்க துண்டு தருவதை விட்டுட்டு ... :)             
            '' மழையிலே நனைஞ்சு வந்திருக்கேன் , கையிலே எதுக்கு தாயத்து கட்டுறே ?''

30 May 2017

செக்ஸாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொன்னது சரிதானே :)

விவரமா சொல்லியிருந்தா பிரச்சினை வருமா :)            
              ''நம்ம பையனை நினைச்சா கஷ்டமா இருக்கா ,ஏன் ?''
              ''ஃபிரிட்ஜிலே  இருப்பதை சூடு பண்ணிதான் சாப்பிடணும்னு சொன்னேன் ,தயிரையும் சூடு பண்றானே !''

இங்கே கிடைக்காதுன்னா வேறெங்கே கிடைக்கும் :)             
             ''விஜய் மல்லையா பெங்களூர்காரர்னு சொன்னா ,உன்னாலே ஏன் நம்ப முடியலே  ?''

29 May 2017

மங்கையின் இருவிழிப் பார்வை அப்படி :)

 குடிச்சா மட்டும்  ழகரம்  எப்படி சரியா வருது :)
              ''வாழைப்பழம் அழுகி, கொழகொழத்து, கீழே விழுந்தது ' ன்னு மனைவியிடம் ஏண்டா சொன்னோம்னு ஆயிடுச்சா ,ஏன் ? ''
              ''நான் குடித்து இருப்பதைக் கண்டுபிடித்து விட்டாளே !''
            
'மூஷிக வாகனன் ' கோவிச்சுக்குவாரே :)
             ''என் பைக்லே ' பிள்ளையார் துணை 'ன்னு  போட்டுக்கக் கூடாதா ,ஏன் ?''

28 May 2017

காதலன் ,காதலி என்றாலும் தப்பு தப்புதான் :)

படித்ததில்  இடித்தது :)
              ''லக்னோவில் இருக்கும் உன் தம்பி ,பெட்ரோல் பல்க்  பக்கத்தில்  ஹெல்மெட் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறானா ,ஏன் ?''
              ''  அங்கே ஹெல்மெட் போட்டுட்டு வரலைன்னா பெட்ரோல் போட மாட்டாங்களாமே !''
இடித்த செய்தி ....ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது

பெண்கள் ,சிறகுகள் இல்லா தேவதைகளா :)
                 ''சிறகுகள் இல்லாமலே, பெண்களை தேவதைகளாக்கும்
வல்லமை புடவைகளுக்கு உண்டுன்னு  சொன்னவருக்கு...  கல்யாணம் ஆகியிருக்காதுன்னு  எப்படி சொல்றீங்க ?''

27 May 2017

பெண்டாட்டியைப் பரிசுன்னு சொல்லலாமா :)

 நிலைமை தலைக்கீழா போச்சே :)
               ''அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதுக்குன்னு கேட்டது தப்பா போச்சா ,ஏன் ?''
               ''இப்போ,படிச்ச பொண்ணுக்கு அடுப்பு எதுக்குன்னு சமையலறை பக்கமே போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களே !''       

மனைவி ஒல்லிபிச்சான் ஆனதால் .... :)
           ''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''

26 May 2017

பார்க்க மட்டும் அழகாய் இருந்தால் போதுமா :)

நியாயமான கேள்விதானே இது :)
         ''இன்னும் பத்து ரூபாய் கொடுங்க ,இரண்டடி டியூப் லைட் விலை முப்பது ரூபாய் !''
         ''அதெல்லாம் முடியாது ,நாலடி  டியூப் லைட் விலையே நாற்பதுன்னுதானே சொல்றீங்க !'' 

தமிழகத்தில் வேறெங்கும் இல்லா கொடுமை :)          
            ''என்ன  சொல்றீங்க ,வேலூர்லே வெயிலும் ஜாஸ்தி ,பெயிலும் ஜாஸ்தியா ?'' 

25 May 2017

காதலிக்கும் போது சொன்னது என்னாச்சு :)

சிஸ்டத்தை சரி செய்ய ரஜினியால் முடியுமா :)

             ''வெளிநாட்டுக்குப்   போறேன்னு சொன்னாலே போதும் , கம்ப்யூட்டர்  வாங்கி வரச் சொல்றாங்களே ,ஏன் ?''
            ''இங்கே சிஸ்டம் சரியில்லேன்னு  ரஜினி சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டவங்களா  இருக்கும் !''


காதலிக்கும் போது சொன்னது என்னாச்சு :)

        '' பிள்ளையை உடனே பெத்துக்க மாட்டேன்னு  காதலிக்கும் போது சொல்லிட்டு ,இப்போ ஏன் உடனே வேணும்னு சொல்றே ?''

24 May 2017

மனைவி காதில் எப்படித்தான் விழுமோ :)

படித்ததில் இடித்தது :)
               ''மன்னர்கள் பாரி ,பேகன் ,சிபி ஆகியோர் இன்னைக்கு இல்லாம போனது நல்லதா போச்சா ,ஏன் ?''
                '' அவங்க பண்ண காரியத்துக்கு,' மீம்ஸ்' போட்டு  கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்களே !'' 
இடித்த செய்தி .....முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி! 
                                       மயிலுக்குப் போர்வையளித்த பேகன்!
                                       தன் தொடையை அறுத்து பருந்துக்கு அளித்த சிபி!

இப்படியும் டாஸ்மாக்கை மூடலாமே :)  
       ''அந்த டாஸ்மாக் கடை ஷட்டர் பாதி  மூடிய படியே இருக்குதே ,ஏன் ?''

23 May 2017

மச்சம் இருப்பதைச் சொன்னது ஆபத்தா போச்சே :)

இந்த கால பசங்க இப்படித்தான் :)   
          ''அலார்ம் செட் பண்ணிட்டு தூங்கிற பையனை எதுக்கு  திட்டுறீங்க? ''
          ''அட நீ வேற ,பகல் 12 மணியை செட் பண்ணிட்டு தூங்குறானே !''

மச்சம் இருப்பதைச் சொன்னது ஆபத்தா போச்சே :)
         ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''

22 May 2017

மல்லிகைப் பூ கண்ணில் விழுமா :)

 புருஷனைப் புரிந்து வைத்திருக்கிற மனைவி :)            
                ''உங்க வீட்டுக்காரரும் குக்கர் மாதிரியா ,எப்படி /''
               ''பிரஷர் அதிகமானா கூப்பாடு போட ஆரம்பித்து விடுகிறாரே !''

வேண்டாம் என்பதற்கும்  பெரிய மனசு வேணும் :)            
              ''அந்த சர்வருக்கு தன்மானம் ஜாஸ்தின்னு ஏன் சொல்றே ?''

21 May 2017

அன்று 'தேவதை 'மனைவி ,இன்று 'தேவைத் தானா' :)

            ''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டால் மட்டும்  குரைக்குதே,ஏன் ?'' 
            ''நாய்ங்க கண்ணுக்கு  பேய் தெரியுமாம் ,அதனால் ஆயிருக்கும் !''

பையன் நல்லா வருவான் போலிருக்கா :)
                ''அளவுக்கு மீறினால்  நஞ்சுன்னு சொல்றது உண்மைதான் ,அதுக்கென்னடா இப்போ ?''

20 May 2017

மாத்திரை முழுங்க மனைவியிடம் கேட்கணுமா :)

டிக்கெட் எடுத்ததற்கு என்ன மரியாதை :)
              ''ரயில் டிக்கெட் எடுத்து ,ஏண்டா வந்தோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
              ''செக்கர் யாருமே வரலையே !''

சேர்த்து வைச்சு என்ன புண்ணியம் :)           
           '' உங்க அப்பா, செத்தும் கொடுத்த சீதக்காதி மாதிரியா ,எப்ப

19 May 2017

வல்லவனுக்கு FULLலும் ஆயுதமா :)

யானைக்கொரு காலம் வந்தா ....:)           
           ''கோட்சேவுக்கு  சிலை வைக்கப் போறாங்களாமே !''
            '' அடக் கண்றாவியே ,காந்திக்கொரு காலம் வந்தா கோட்சேவுக்கும் ஒரு காலம் வரும் போலிருக்கே !''

வயதானவர்களுக்கு  வாழ்வாதாரம் அதுதானே :)             

              ''வங்கி டெபாசிட்  interest யை  மூத்த குடிமக்களுக்கு  மட்டுமாவது  இன்னும் அதிகரித்தால் நல்லதா ,ஏன் ?''

18 May 2017

கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா :)

உண்மைக் காரணம் இதுதானா :)                 
          ''வோட்டு போட்ட அடையாள மையை சுட்டு விரல்லே எதுக்கு வைக்கிறாங்க ?''
           ''யார் ஜெயிக்கணும்னு நாம 'சுட்டிக்' காட்டுவதால் ஆகியிருக்குமோ ?''

 'சிம்'ரனை ரசித்தால் காது எப்படி கேட்கும் :)
                ''என்னங்க ,பால் பொங்கிறக் கூடாதுன்னு ,காஸ் அடுப்பை 'சிம் 'லே வைக்கச் சொன்னேனே.. என்ன  செய்துகிட்டு  இருந்தீங்க ?''

17 May 2017

மனைவி தந்த கசப்பான அனுபவம் :)

காஜா மெஷின் இன்னும் வாங்கலையாம் :)
         ''அந்த லேடீஸ் டைய்லர் சட்டையும் நல்லா தைத்து தருவாங்கன்னு    நம்பினது , தப்பா போச்சா ,ஏண்டா ?''
        ''பட்டனுக்குப் பதிலா  'ஹூக்'கை தைச்சிருக்காங்களே !''

பஸ் மெதுவா போகும்னு இப்படியும் சொல்லலாமா :)             
           ''டிரைவர் சார் ,மூணு மணி நேரத்திலே போகவேண்டிய ஊருக்கு ,ஐந்து மணி நேரம் ஆகுதே,ஏன்  ?''
           ''டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கிறதை நீங்க கவனிக்கலையா ?''

மனைவி தந்த கசப்பான அனுபவம் :)
         ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''

16 May 2017

வயசுப் பயலுங்க வாயைக் கிண்டினா இப்படித்தான் :)

லேட்டஸ்ட்  ஸ்டைல் என்றாலே காஸ்ட்லிதானே :)
               ''கிளி ஜோசியம் பார்க்க பத்து ரூபாய்தானே  ,எதுக்கு ஐம்பது ரூபாய்  கேட்கிறீங்க ?''
               ''நல்லா பாருங்க ,இது பஞ்சவர்ணக் கிளி சார் !''

இப்படி பொருத்தம் அமைவது கஷ்டம் !
            ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு  சொல்றீங்களே ஏன் ?''
             ''தூக்கத்திலே  கூட அந்த தம்பதிகள் ஜோடியா  வாக்கிங்  போறாங்களே !''
' டிபன் ' பாக்ஸ்  வெடிகுண்டா :)
          ''டிபன் பாக்சை தமிழில் ,ஓரடுக்குன்னும் சொல்லலாம் ...இதிலே  உனக்கென்ன சந்தேகம் ?''
         '' ஐந்து அடுக்கு பாதுகாப்பு உள்ள இடத்தில் ஓரடுக்கு வெடிகுண்டு வெடிப்பதை ஏன் தடுக்க முடியலே ?''

வயசுப் பயலுங்க வாயைக் கிண்டினா இப்படித்தான் :)
          ''தம்பிகளா ,எதுக்கு பூவா தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
          ''உங்க பொண்ணு தலையில  இன்னைக்கி  ரோஜாப்பூ இருக்குமா, இருக்காதான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''

மருத்துவர்கள் செய்யும் 'அரசியல் 'பிராக்டிஸ் :)
   சாவிலிருந்து காப்பாற்றி சாதிக்க வேண்டிய மருத்துவர்கள் ...
   சாதி மத மோதலை உண்டாக்கி மக்களைச் சாகடிக்கிறார்கள் !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460061செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

15 May 2017

மனைவியின் அர்ச்சனையால் வந்த கற்பனை :)

அய்யா  சென்னைப்பித்தன் பாணியில் ப க பு மொ:)           
               ''வாசுகியை வள்ளுவர் அதிகாரம் செய்திருந்தால் ,வாசுகி  என்ன சொல்லியிருப்பார் ?''
               '' உங்க  அதிகாரத்தை  குறளோடு வச்சுங்குங்கன்னு தான் !'' 

முட்டை வாங்க வேண்டியதே இல்லை :)                 
            ''உன் புதுப் பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலையிலே ஏண்டா அடிச்சுக்கிறே?''

14 May 2017

தாலி கட்டினவன் தலையெழுத்து :)

மலிவு விலை அரிசி இதுக்குத்தானா :)             

           ''கோழிக்கு  தீனி வாங்கணும் ,பக்கத்திலே கடையிருக்கா ?''

             ''ரேஷன் கடை இதோ இங்கேதான் இருக்கு !''


நர்ஸ் சீருடையில் ஆம்பளையும் அழகுதான் :)

            ''உங்களைப் பேச முடியாதபடி   டாக்டர் செய்துட்டாரா ,அவர்கிட்டே  என்ன சொன்னீங்க ?''

13 May 2017

காதலுக்கு கண்ணில்லை ,காதலிக்குமா :)

               ''என் காதலிக்கு கண் பார்வை தெரியுமான்னு ஏண்டா கேட்கிறே ?''
                ''உன்னைப் பார்த்த பிறகுமா காதலிக்கிறாளான்னு தெரிஞ்சிக்கத்தான் !''

குருவின் லீலை என்றாலே ஏன் தப்பாவே தோணுது :)
            ''குருவின் மகிமை  என்கிற  புத்தகம்  விற்பனையே ஆகாம , ரிடர்ன்  ஆயிடுச்சே  ..என்ன செய்யலாம் ?''

12 May 2017

நகை உனக்கு ,ந(டி)கை நீ எனக்கு :)

இதுதான் அதுக்கு காரணமா :)
        ''நீட்  தேர்வு எழுதப் போனவங்களை, குடி தண்ணீர் பாட்டிலைக் கூட கொண்டு போக அனுமதிக்கலையாமே  ,என்ன காரணம் ?''
       ''இதோ ... இந்த புத்திசாலி செய்த வேலைதான் காரணமாயிருக்கும் !''
இதை முதல்லேயே செய்திருக்கலாம் :)
              ''என் பெயரைச் சொல்லி விசாரித்தால் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் கூடத் தெரியலையா ,அப்புறம் எப்படிக் கண்டுபிடிச்சே ?''

11 May 2017

ஒளியிலே தெரிவது தேவதையா :)

பேரனுக்கு நேர்ந்துகிட்டு இப்படியா கணக்கு பார்க்கிறது :)                  
             ''பேரன்  உடம்புக்கு முடியாம எடை குறைஞ்சதுக்கு  சந்தோசப் படுற தாத்தா , எங்க அப்பாதானா ... என்னங்க சொல்றீங்க ?''
             ''எடைக்கு எடை வெல்லம் தர்றேன்னு நேர்ந்துகிட்டிருக்கேன் ,இப்பவே செய்திடுவோம்னு சொல்றாரே !''

தேர்தல் கமிசன் இதுக்கு என்ன செய்யப் போவுது :)
             ''வீட்டுக் கதவிலே 'அட்வான்ஸ் புக்கிங் செய்யப் படும்'னு  அவர் ஏன் எழுதியிருக்கார் ?''

10 May 2017

சுனாமிஸ்ரீ, மனைவிக்கு பொருத்தமான பெயர்தானே :)

காலணிக்கும் ,காலனிக்கும் வித்தியாசம் இருக்கில்லே :)
         ''எங்க ரெயின்போ 'காலணி 'யில் மெகா மால் வந்தாச்சுன்னு சொன்னா ,ஏன் நம்ப மாட்டேங்கிறே ?''
         ''மெகா மாலில் வேண்டுமானால் காலணி கிடைக்கும் ,காலணியில் எப்படி மெகா மால் வரும் ?''
நகைக்கடைகளும் அடகுக் கடைகளும் அவங்கவசம்தானே :)                
           ''அதோ ,அந்த தம்பதிகள்  'மலையாளிகள்' கடைக்கே  போறாங்களே ,ஏன் ?'' 
           ''புது  நகையை வாங்க  நகைக்கடைக்கும் , பழைய நகையை அடகு வைக்க  பைனான்ஸ் கடைக்கும்தான் !''

ஆறிலும் சாவில்லை ,நூறிலும் சாவில்லை :)
              ''இந்த மருத்துவ மனையில் ரூம் நம்பர் ஆறும் ,நூறும் இல்லையே ,ஏன் ?''
              ''ஆறிலும் சாவு ,நூறிலும் சாவுன்னு யாரும் சொல்லக் கூடாதுன்னு தான் !''

இதுக்கு டாக்டர்தானே காசு தரணும்:)
                ''இந்த மாத்திரை சாப்பிட்டு ரெண்டு நாள்லே காய்ச்சல் போயிடும்னா ,எதுக்கு டாக்டர் மறுபடியும் வரச் சொல்றீங்க ?''
                ''அடுத்தவங்களுக்கு அதை கொடுக்கலாமா வேண்டாமான்னு நான் தெரிஞ்சுக்கத்தான் !''

சுனாமிஸ்ரீ, மனைவிக்கு பொருத்தமான பெயர்தானே :)
              ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து  இன்னுமா  மீள முடியலை .ஏன் ?''
              ''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''

தெய்வத்தைத் தொலைத்த கோவில்கள் :)
அரசு அலுவலகங்களில் ...
செய்யும் தொழிலே தெய்வம்னு எழுதலாம் ...
அங்குதான்  இருக்கின்றன  ...
அட்வான்ஸ் காணிக்கையில் 
அருள் பாலிக்கும் தெய்வங்களும் ...
நிறையவே நிறையாத உண்டியல்களும் !

' த ம ' ன்னா வாக்களிப்பது  ஜனநாயக உரிமை ,அந்த உரிமையை மொபைல் போன் மூலம்  நிறைவேற்ற  இதோ லிங்க் >>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459207
          (உண்மையில் இந்த லிங்க் மூலமாக செல்லில் இருந்து  வாக்களிக்க முடிகிறதா என்பதை நீங்கள்தான் சொல்லணும் :)

9 May 2017

மனைவிக்கு ஐஸ் வைக்கிறதா நினைச்சி மாட்டிக்காதீங்க :)

             ''TVல் காட்டுற பட்டுச்சேலை உனக்கு பாந்தமாயிருக்கும்னு   மனைவிகிட்டே ஒரு பேச்சுக்கு சொன்னது ,தப்பா போச்சா ...ஏண்டா ?''
             ''நீங்க இப்படி சொல்வீங்கன்னுதான் நேற்றே ஆன் லைன்லே ஆர்டர் பண்ணிட்டேன்னு சொல்றாளே  !''
கலப்படத்தை 'பால்மானி' கண்டுபிடிச்சுடுமே :)         
            ''பால் வியாபாரியான உங்களுக்கு ,அரசு என்ன உதவி செய்யணும் ?''
             ''பால் மானியம் எல்லாம் ஒண்ணும்  தர வேண்டாம் ,நாங்க விற்கிறப் பாலை  சுகாதார அலுவலர் பால்மானியால் செக் செய்யாமல் இருந்தாலே  போதும் !''

வயதானால் இப்படியெல்லாம் ஆகுமோ :)
           ''என்னடா சொல்றே ,உங்க அப்பாவுக்கு கண்ணும் மூக்கும் அவுட்டா ?''

8 May 2017

தூக்கத்தைக்.... கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான்:)

தானாட விட்டாலும் ...:) 
             ''வெளியே தெரியாம இருந்த தலைவரின் 'கீப்'பு பெயர் , இப்போ எப்படி தெரிந்தது ?''
             ''வேட்பு மனுத் தாக்கலில் , தனக்கு மாற்று வேட்பாளரா  கீப்பை  நிற்கச் செய்திருக்கிறாரே  !''

தூக்கத்தைக்.... கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான் :)
            ''நிறைய  பேருக்கு கடனைக் கொடுத்திட்டு ,தூக்கமே வரலேன்னு புலம்பிகிட்டே இருந்தீங்களே ,இப்போ எப்படி ?''

7 May 2017

ருசி கண்ட கணவன் சொன்ன உண்மை :)

          ''என்னங்க ,சமையல் நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டு இருக்காங்க !''
          ''ஐயையோ,Do not try at homeன்னு TVல் டைட்டில் போட வேண்டியிருக்குமே !''

தாலி பாக்கியம் மனைவிக்கு நிலைக்குமா :)
             ''உங்க வீட்டுக்காரர் ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்னு சொல்றாரா ,ஏன் ?''

6 May 2017

இதுக்குமா மனைவியை சந்தேகப் படுவது :)

இரண்டு தந்தை என்றாலும் ஒரே கொள்ளை :)
       ''மாநகரத் தந்தை ( மேயர் ) பதவியில் இருக்கும் போது கொள்ளை அடித்தாரே ,அவர்  இப்போ என்ன பண்றார் ?''
       ''கல்வித்தந்தையாகிவிட்டார் ...மெடிக்கல் காலேஜ்  கட்டி கொள்ளை அடிக்கிறார் !''

கணவன் சுடச் சுட சாப்பிட மனைவியோட ஐடியா :)
                 ''என் பெண்டாட்டி புத்திசாலின்னு மதியம் சாப்பிடும் போதுதான் தெரிந்ததா ,எப்படி ?''

5 May 2017

மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா:)

மனைவி சொல்லியும் கேட்காதவர் .... :)
       '' என்னங்க , தலைக்கு டை அடிச்சுக்குங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களே ,இப்போ எப்படி மாறினீங்க ?''
       ''பஸ்ஸிலே வயசுப் பொண்ணு கூச்சமில்லாம  என் பக்கத்தில் உட்கார்ந்ததுதான்  என்னை யோசிக்க வைத்தது !''

கருவறையிலுமா இரட்டை அர்த்தம் :)
               ''பூசாரியை காதலிப்பதால் எனக்கொரு வசதி,ஈஸியா கருவறையிலும் நுழைய முடியுது !''

4 May 2017

வாதத்தில் தோற்பாரா வக்கீல் புருஷன்:)

மனசாட்சி குத்தும் போலிருக்கு :)
             ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்ககிட்டே ,  டயலாக் பேசாம  போலீஸ் திருடன்  விளையாட்டை  விளையாடுங்கன்னு ஏன் சொல்றீங்க ?''
            ''மாசம் பொறந்ததும் மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''                        

நாற்பதில் வர வேண்டியது :)
          ''என் வயசு  நாற்பதுன்னுன்னு சொன்னா நம்பமுடியலையா ,அவ்வளவு இளமையா இருக்கேனா ?''

3 May 2017

நடிகை என்றாலும் கோபம் வரத்தானே செய்யும் :)

அவ்வையார்  இன்று கேட்டிருந்தால் :)
                 ''சுட்ட பழம்  வேணும்னு  கேட்டு வாங்கிட்டு ,இப்படி ஊதிஊதிச் சாப்பிடலாமா பாட்டி ?''
                ''சுட்ட பழமோ,சுடாத பழமோ ஒட்டியிருக்கிற மண்ணைச்  சேர்த்து சாப்பிட முடியாதே ...எடக்கு மடக்கா கேட்கிறதை விட்டுட்டு , கழுவுறதுக்கு  தண்ணீரைக் கொண்டு வா பேராண்டி !'' 

நடிகை என்றாலும் கோபம் வரத்தானே செய்யும் :)
             ''ஒப்பந்தத்தைப் படிக்காமலே நடிகை கிழித்து எறிந்து விட்டாராமே ,ஏன் ?''

2 May 2017

இந்த பொண்ணு யாருக்குச் சொந்தம் :)

இதுக்கு போய் வருத்தப் படலாமா :)         
           ''கல்யாணமாகி ஐந்து வருஷமா என் மனைவி வயிற்றில்  ஒரு புழு பூச்சி கூட இல்லை ,டாக்டர் !''
          ''சந்தோசப்பட வேண்டிய விஷயத்துக்கு ஏன் வருத்தப் படுறீங்க ?''

புத்தர்  பல்லை இன்னும் பாதுகாக்கிற  மாதிரி :)              
             ''காலமானவரோட   பல் வேணும்னு  பிள்ளைங்க அடிச்சுக்கிறாங்களே,அவர் ஞாபகார்த்தமா வைச்சுக்கப்  போறாங்களா ?''

1 May 2017

காதலன் பெயரில் இன்னொரு ஈனா வானா :)

       '' காதலன்  பெயரை பச்சைக் குத்திகிட்டியே ...இப்போ  விட்டுட்டுப் போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
          ''அதே பெயருள்ளவனைப் பார்த்து  ,கல்யாணம் கட்டிக்கப் போறேன் !''

 பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கூகுளாருக்கு  நன்றி :)


அப்பன் கதியே உனக்கும் வந்திடப் போவுது :)           
             ''எங்கப்பனும் ஒரு குடிகாரன் , வாழைப் பழத் தோலில் வழுக்கி விழுந்து செத்தார் !''