1 May 2017

காதலன் பெயரில் இன்னொரு ஈனா வானா :)

       '' காதலன்  பெயரை பச்சைக் குத்திகிட்டியே ...இப்போ  விட்டுட்டுப் போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
          ''அதே பெயருள்ளவனைப் பார்த்து  ,கல்யாணம் கட்டிக்கப் போறேன் !''

 பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கூகுளாருக்கு  நன்றி :)


அப்பன் கதியே உனக்கும் வந்திடப் போவுது :)           
             ''எங்கப்பனும் ஒரு குடிகாரன் , வாழைப் பழத் தோலில் வழுக்கி விழுந்து செத்தார் !''

             ''இப்போ தண்ணீர் பாக்கெட்  வழியெல்லாம் கிடக்கு,கவனமா காலை வை ! ''

ஜாதகம் போலியா ,ஜோதிடர் போலியா :)
        ''தலைவரோட ஆயுசுக் காலம் நாளையோட முடியுதுன்னு எப்படி சொல்றீங்க ,ஜோசியரே ?''
         ''ஜாதகத்தில் ஜனன நேரம் மாதிரியே ,ஜனகன மன நேரமும் போட்டிருக்கே !''

தங்கம் விற்கிற விலையில் ...:)
          ''நீங்க தெரியாம விழுங்கின மூக்குத்தியை ஆப்ரேசன் செஞ்சு எடுக்கணும்னா பத்து லட்ச ரூபாய் செலவாகுமே !''
          ''பரவாயில்லை டாக்டர் ,நான் வேற மூக்குத்தியை வாங்கிக்கிறேன் !''

மனித மனம் ஒரு குரங்கு :)
டார்வின் கொள்கைப்படி ...
பரிணாம வளர்ச்சியில் உருவம் மாறிவிட்டாலும் ...
குரங்கின் குணம் மனதிலே மாறாமலே இருக்கிறது ...
சேனலை மாற்றி மாற்றி  தாவிக் கொண்டே இருக்கும்
TV ரிமோட்டே சாட்சி  !

பூஜார்  அனுப்பி வைத்த லொடுக்கு கார் இதான் ...

46 comments:

 1. அந்த பெயரை ஜொள்"ளியிருக்கலாம் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஓஒ நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்:)..

   Delete
  2. ஹா ஹா ஹா வோட் பண்ணியதில் மீ தான் 1ஸ்ட்டூ:).. அதெப்படி அவ்ளோ குயிக்கா கில்லர்ஜி படிச்சிட்டே கொமெண்ட் போடுறாரே:)..

   Delete
  3. கில்லர்ஜி இன்கேயிருக்கார் ,நீங்கோ லண்டன்லே ....வந்து சேர லேட் ஆகுதோ :)

   Delete
  4. பகவான் ஜீஈஈ வெளில வாங்கோ.. நான் டமில்மணத்தில் மகுடம் சூடிட்டேன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:).. இது 2ம் தடவை.. முதல் தடவை இப்பூடி சம்பவம் 2013 இல் நடந்துது:) ஹா ஹா ஹா:).

   Delete
  5. இனி அடிக்கடி மகுடம் சூடுவீங்க !
   இந்த காரியம் யாரால் வந்தது ?...ஜோக்காளிப் பேட்டைக்கு பூஜார் வந்ததால்தானே ,பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்தானே :)

   Delete
  6. ஹா ஹா ஹா அப்பூடியா டெல்றீங்க?:) இருக்கலாம் இருக்கலாம் இது நமக்குள் இருக்கட்டும்:)

   Delete
 2. மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:) நில்லுங்கோ டமில்மனத்துக்கு தலை சுத்துது.. சுத்தி முடியட்டும்.. வோட் போட்டிடலாம்:).

  ReplyDelete
  Replies
  1. அன்று சாலமன் சபைக்கு ஒரு விசித்திரமான ஒரு வழக்கு ..வந்தது ..விழுந்திருப்பது ஒரு வோட்..ஆனால் இருவர் தங்கள் வோட் என்கிறார்கள் :)

   Delete
  2. ஹா ஹா ஹா கர்:) உங்கள் கறுப்புக் கண்ணாடியைக் கழட்டிப் போட்டுப் பாருங்கோ 2 வோட்ஸ்:) இருக்கே.

   Delete
  3. அந்த ரெண்டில் எது உங்க 1ஸ்ட்டூஊஊஊஊஊ வோட்:)

   Delete
  4. நான் வோட் செய்யும்போது 0 இருந்தது நான்தான் 1ஸ்டூ

   Delete
  5. நான்தான் 2ன்டூஊஊஊ !
   பூஜாருக்கு மறுபடி சந்தர்ப்பம் வழங்கப் படுகிறது ,மீண்டும் வோட் செய்யவும் :)

   Delete
  6. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஓஓஓஓஓஒ நான் தான் தமிழ்மணத்தில் இணைச்சேன்ன்.. வோட் போடும்போது எனக்கும் 0 தான் காட்டிச்சுதே கர்ர்ர்ர்ர்ர்.. என் பெயர் அங்கிருக்கு... பகவான் ஜீ பெயர்தான் இல்லையாக்கும் கர்ர்:).. ஆனா 3 பேர் காட்டுது, இங்கு 2 தான் காட்டுது... இங்கே பாருங்கோ..

   ///thamizmanam


   இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

   KILLERGEE santhi8564@gmail.com athiramiya

   சன்னலை மூடு////

   அதனால பப்புளிக்கில வச்சு ஒரு சுவீட் 16 பிள்ளையை வோட் போடவில்லை என மானபங்கப் படுத்திய குற்றத்துக்காக:) பகவான் ஜீ உடனே பிரித்தானியா காண்ட் கோர்ட்:) க்கு வரவும்:)

   Delete
  7. என் மைத்துனர் பேமிலி (உண்மையில் ) வெம்ப்ளி பார்க்கில்தான் உள்ளது ,அங்கு வந்து விடுகிறேன் ...பூஜார் காரை அனுப்பவும் :)

   Delete
  8. https://www.calautomuseum.org/wp-content/uploads/2015/03/cat-in-car.jpg

   Delete
  9. இந்த லொடுக்கு வண்டியா?நீங்க ஓட்டப் பழகிய BMW காரை அனுப்பி வைங்கோ :)

   Delete
  10. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர் இன்னும் விசாவே கிடைக்கல்ல:) கிடைச்சாலும் போகப்போற இடம் மாமியார் வீடு:) பின்ன கோர்ட்ஸ் விசயமாத்தானே வாறீங்க:).. இதில பி எம் டபிள்யூ கேக்குதோ?:).. அதைவிட இதுதான் இங்கு சமர் க்கு நல்லது.. போவோர் வருவோர் எல்லாம் திரும்பிப் பார்ப்பாங்க:).

   Delete
  11. இங்கே கோர்ட்டுக்கு போறவங்க ,ஏதோ மாமியார் வீட்டுக்குப் போறமாதிரி வாய் நிறைய சிரிப்போடு டிவிக்கு போஸ் தருகிறார்கள் ,நான் செய்தா மட்டும் தப்பா :)

   Delete
  12. #ஒரு சுவீட் 16 பிள்ளையை#
   இதுக்கு அஞ்சுதான் பதில் சொல்லணும் :)

   Delete
 3. மூக்குத்தி பார்த்ததும் கண்ணதாசனின் ~சிவப்புக்கல் மூக்குத்தி” நினைவுக்கு வருகிறது. அதெப்படி அவ்ளோ கெதியா மாறிட முடியும் நம்மால்.. இன்னமும் எம்மிடம் இருக்கும் பாதிக்குணம் குரங்குக்குணம்தானே:).

  ReplyDelete
  Replies
  1. அவருமா மூக்குத்தி ...இல்லை இல்லை ...புத்தகம் எழுதியிருந்தார் ....அது இந்த மொடேல் இல்லையே :)

   Delete
 4. எல்லா நகைச்சுவைத் துணுக்குகளும்
  வழக்கம்போல் அருமை
  பச்சைக் குத்தியதும், மூக்குத்தியம்
  மிகச் சிறப்பு
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. மூக்குத்தி மாடல் அருமைதானே :)

   Delete
 5. Replies
  1. HEART IN மாடல் பொருத்தம்தானே :)

   Delete
 6. Replies
  1. சானலுக்கு சானல் தாவும் மனித மனத்தையும் தானே:)

   Delete
 7. Replies
  1. ஜனகன மன நேரம் என்று சொல்லலாம்தானே :)

   Delete
 8. பச்சை கலர் ஹெச் பேனாவில எழுதியது... எழுதியது எழுதியதுதான்னு இருக்க... மாத்தி எழுத வேண்டியதுதான்... நான் என்ன விவரம் இல்லாதவளா...?!

  ஊருக்குள்ள பாரே இல்லே... பாரேன்... பாருக்குள்ள தண்ணீ பாக்கெட் எப்படி கிடக்கும்... கோடைகாலம் தண்ணியும் இல்ல...!

  ஜெயில்ல இரண்டு ஆயுள் தண்டனையாம்... வயதும் 50க்கும் மேல ஆயிடுச்சு... ஆயுசு முடியுமுல்ல...!

  ஆப்ரேசன் வேண்டாம் டாக்டர்... தங்க வயிராவே இருக்கட்டும்...!

  மனிதக் குரங்கு அப்படித்தான் செய்யும்... ‘முத்தலாக்’ இதை பெண்கள் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்களாம்...!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. பச்சைக் குத்திக்கிட்டதில் இருந்தே தெரியுதே உங்க விவரம் :)

   தேவையுள்ளவன் பாரைத் தேடிப்போவானே எங்கிருந்தாலும் :)

   இனிமேல் வெளியே வந்தும் யாருக்கு பிரயோசனம் ,உள்ளேயே இருக்கட்டும் :)

   மூக்குத்தியை வயிறு தாங்குமான்னு தெரியலியே:)

   முத்த லாக்கையா :)

   Delete
 9. மூக்குத்தி எத்துனை லெட்சம்
  தம +

  ReplyDelete
  Replies
  1. ஆபரேசன் செலவில் பாதிதான் :)

   Delete
 10. டிவி ரிமோட் அருமை. இதுக்குதான் இப்பத்திய பிள்ளைக பச்ச குத்திக்குறதில்ல

  ReplyDelete
  Replies
  1. இரண்டு ரிமோட் வாங்கிட வேண்டியதுதான் :)
   குத்த வச்சாலும் தப்புன்னு தெரிஞ்ச விவரமான பிள்ளைங்க தான் :)

   Delete
 11. ''அதே பெயருள்ளவனைப் பார்த்து ,கல்யாணம் கட்டிக்கப் போறேன் !''//

  இது பெண்யுகம்!

  ReplyDelete
  Replies
  1. ஏமாறாமல் போனால் சரிதான் :)

   Delete
 12. சின்னச் சின்ன மூக்குத்தியாம் சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்....அந்தப் பெயருள்ளவர்கள் எல்லாம் இனா வானா வாக இருக்க வாய்ப்பு குறைவே
  அப்பன் சாப்பிடும்போது செத்தானாம் மகன் சாப்பிடாமலேயே செத்தான்னாம் ஏனோ நினைவுக்கு வருது
  தமிழ்மண வாக்குப் பட்டை இருந்தும் பலர் என் பதிவுகளைப் படித்தாலும் வாக்கு விழுவது ஏனோ மிகக் குறைவே

  ReplyDelete
  Replies
  1. விவரமானவன் அதான் கழட்டிவிட்டானா :)
   எதைச் சாப்பிடும் போதுன்னு சொல்லுங்க :)
   நான் தவறாமல் வாக்களிக்கிறேன் ,நீங்கதான் மறு மொய் செய்வதில்லையே ,எப்படி மற்றவர்கள் மொய் வைப்பார்கள் :)

   Delete
 13. அனைத்து நன்றாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. பூஜார் அனுப்பி வைத்த லொடுக்கு காரும் நல்லாயிருக்கா :)

   Delete
 14. Replies
  1. குரங்கின் குணம் இருப்பது உண்மைதானே :)

   Delete
 15. அனைத்தும் ரசித்தோம் ஜி. மூக்குத்தி, ரிமோட்...எல்லாம்

  ReplyDelete
  Replies
  1. tv ரிமோட் வேலை செய்யவில்லைஎன்றால் மனக் குரங்கு என்னா ஆட்டம் போடுகிறது :)

   Delete