10 May 2017

சுனாமிஸ்ரீ, மனைவிக்கு பொருத்தமான பெயர்தானே :)

காலணிக்கும் ,காலனிக்கும் வித்தியாசம் இருக்கில்லே :)
         ''எங்க ரெயின்போ 'காலணி 'யில் மெகா மால் வந்தாச்சுன்னு சொன்னா ,ஏன் நம்ப மாட்டேங்கிறே ?''
         ''மெகா மாலில் வேண்டுமானால் காலணி கிடைக்கும் ,காலணியில் எப்படி மெகா மால் வரும் ?''
நகைக்கடைகளும் அடகுக் கடைகளும் அவங்கவசம்தானே :)                
           ''அதோ ,அந்த தம்பதிகள்  'மலையாளிகள்' கடைக்கே  போறாங்களே ,ஏன் ?'' 
           ''புது  நகையை வாங்க  நகைக்கடைக்கும் , பழைய நகையை அடகு வைக்க  பைனான்ஸ் கடைக்கும்தான் !''

ஆறிலும் சாவில்லை ,நூறிலும் சாவில்லை :)
              ''இந்த மருத்துவ மனையில் ரூம் நம்பர் ஆறும் ,நூறும் இல்லையே ,ஏன் ?''
              ''ஆறிலும் சாவு ,நூறிலும் சாவுன்னு யாரும் சொல்லக் கூடாதுன்னு தான் !''

இதுக்கு டாக்டர்தானே காசு தரணும்:)
                ''இந்த மாத்திரை சாப்பிட்டு ரெண்டு நாள்லே காய்ச்சல் போயிடும்னா ,எதுக்கு டாக்டர் மறுபடியும் வரச் சொல்றீங்க ?''
                ''அடுத்தவங்களுக்கு அதை கொடுக்கலாமா வேண்டாமான்னு நான் தெரிஞ்சுக்கத்தான் !''

சுனாமிஸ்ரீ, மனைவிக்கு பொருத்தமான பெயர்தானே :)
              ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து  இன்னுமா  மீள முடியலை .ஏன் ?''
              ''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''

தெய்வத்தைத் தொலைத்த கோவில்கள் :)
அரசு அலுவலகங்களில் ...
செய்யும் தொழிலே தெய்வம்னு எழுதலாம் ...
அங்குதான்  இருக்கின்றன  ...
அட்வான்ஸ் காணிக்கையில் 
அருள் பாலிக்கும் தெய்வங்களும் ...
நிறையவே நிறையாத உண்டியல்களும் !

' த ம ' ன்னா வாக்களிப்பது  ஜனநாயக உரிமை ,அந்த உரிமையை மொபைல் போன் மூலம்  நிறைவேற்ற  இதோ லிங்க் >>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459207
          (உண்மையில் இந்த லிங்க் மூலமாக செல்லில் இருந்து  வாக்களிக்க முடிகிறதா என்பதை நீங்கள்தான் சொல்லணும் :)

48 comments:

 1. கல்யாணமே.. சுனாமிதானோ... ?

  ReplyDelete
 2. நோஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக்கு மகுடம் போச்ச்ச்சே... இன்று கில்லர்ஜி எலிக்கறி சாப்பிடவில்லைலைலை:(.

  ReplyDelete
  Replies
  1. ///Bagawanjee KAWed May 10, 12:07:00 am
   அவருக்கு கல்யாணமே சுனாமி ,இப்போ இங்கேயும் ஒரு சுனாமி வரும் பாருங்கோ //
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) கில்லர் ஜீ யை சுனாமி எண்டெல்லாம் சொல்லக்கூடா பகவான் ஜீ:).. பிறகு கோபிச்சிடப்போறார்ர்:).

   Delete
  2. அதெப்படி முதலாவதாக வந்திட்டு.. எதுவுமே நடக்காததுபோலவே பேசிட்டுப் போயிடுறார் கில்லர்ஜீ:)..

   இங்கினதானே நான் இருந்தேன்ன்.. அது ஈவினிங் சாப்பிட்ட ஓசை:) என்னை ஸ்லோவாக்கிட்டுது கர்:) இருப்பினும் வோட் ல மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)

   Delete
  3. நான் தான் இணைச்சு வோட்டும் போட்டேன்ன்.. நீங்க தங்கூ தங்கூ எனச் சொல்வது கேட்குது.. இட்ஸ் ஓகே.. பறவாயில்லை.. எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது... ஆனா என்னதான் வோட்டுப் போட்டென்ன.. டமில் மனம் மூச்சை நிறுத்தி விட்டதுபோலும் கர்ர்ர்:).

   Delete
  4. இன்னும் கொஞ்சம் மூச்சிருக்கு ,வோட் விழுந்திட்டனம்!உண்மையில் சொல்றேன் தங்கூ தங்கூ:)

   Delete
  5. அப்போ ஏன் எனக்கு 8 வோட்ஸ் வந்தும் தமனாவில் காட்டவில்லை கர்ர்:) நீங்க கொஞ்சம் தட்டிக் கேட்கப்பிடாதோ?:)

   Delete
  6. கோமா ஸ்டேஜுக்கு போயிடுச்சே தமிழ்மணம் ,திரும்ப உயிர் பிழைக்குமா ?இல்லை , இப்போ மேலே நிற்கிற 'ஏழு நாட்கள்' பதிவுடன் ஏழரை ஆகிடுமான்னு தெரியலே :)

   Delete
  7. என்னுடைய மகுடம் ஜஸ்ட்டு மிஸ்ட்டு:) ஒன்று குறைஞ்சதால மகுடம் கிடைக்கல்ல:(.

   Delete
  8. காசா பணமா, எம்மால் முடிந்தவரை அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவோமே..என்று சொன்ன உங்க நல்ல மனசுக்கு குறைவே வராது ,மகுடம் உறுதியாய் கிடைக்கும் :)

   Delete
  9. ஆவ்வ்வ்வ்வ் உங்கள் நாக்கு கரி நாக்குத்தான்... மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஊஊஊஊ.... நான் இப்போ நம்பிட்டேன்ன்ன் மோடி அவர்கள் போட்ட வைர சூட்... உங்களோடதுதான்ன்ன்ன்ன்:). ஹா ஹா ஹா:).

   Delete
  10. தங்கூ தங்கூ...

   https://s-media-cache-ak0.pinimg.com/736x/48/63/e3/4863e3fc36e4a755039c070fa34a84ab.jpg

   Delete
  11. பூஜார் கொடுத்த பரிசுக்கும் தங்கூ தங்கூ:)

   Delete
  12. #உங்கள் நாக்கு கரி நாக்குத்தான்...#
   நல்லதைச் சொன்ன நாக்குமா கரி நாக்கு :)

   Delete
 3. அவருக்கு கல்யாணமே சுனாமி ,இப்போ இங்கேயும் ,மீதான் தம 1ஸ்ஸ்ஸ்ஸ்டுன்னு ஒரு சுனாமி வரும் பாருங்கோ :)

  ReplyDelete
  Replies
  1. இது மேலே இருந்திச்சே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு இவ்ளோ ஸ்பீட்டா அழிச்சிட்டீங்க..:) தேம்ஸ்ல தள்ளிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்தை.. ஹையோ எனக்குச் சொன்னேன்:).

   Delete
  2. வாங்கோ ,கில்லர்ஜி நம்மை ...இல்லை இல்லை ..சோம்பேறிகள்னு சொல்றார் ,போய் பார்ப்பினம் :)

   Delete
  3. //போய் பார்ப்பினம் :)//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் பார்ப்பினம்... பன்மைக்கு மட்டுமே வரும்:)..

   அப்போ அவருக்கு இனி ஒரேவழி.. நித்திரக்குளிசை பாலில் கலந்திட வேண்டியதுதேன்ன்:).. ஸ்ஸ்ஸ் படிச்சதும் கிழிச்சு.. கோவைக்கு போற வழிக்கு.. எதிர்ப்பக்க ரோட்ல எறிஞ்சிடுங்கோ பிளீஸ்ஸ்:).

   Delete
  4. நீங்களும் நானும் என்டால் பார்ப்பினம்தானே :)

   நித்திரக்குளிசை தரலாம் ,நித்தியக் குளிசை வேண்டாம் :)

   Delete
  5. இல்ல.. அவர்கள் பார்ப்பினம்.. பகவான் ஜீயும் கில்லர்ஜீ யும் பார்ப்பினம்.. இப்படித்தான் வரும்..

   நம்மைச் சொல்லும்போது பார்ப்போம்.. எனத்தான் வரும் ஹா ஹா ஹா.. சரி சரி டமில் சொல்லித்தந்தமைக்கு பீஸ் தாங்கோ.. இல்லையெனில் தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்:).

   Delete
  6. வேணாம் ,என்னால் முடிந்த பீஸை கொடுத்துட்டேன் ,சந்தோசம்தானே :)

   Delete
 4. எனக்கு எதிராக சதி நடக்குதே...

  ReplyDelete
  Replies
  1. வடகொரிய அதிபர் ரேஞ்சுக்கு வந்திட்டீங்கன்னு அர்த்தம் :)

   Delete
  2. கில்லர் ஜீக்கு சந்தேகம் வரத்தொடங்கிட்டுது எங்கட நித்திரைக் குளிசையால:).. எதுக்கும் இந்த மட்டரை:) படுபயங்கரமா சீக்ரெட்டாத்தான் மூஃப் பண்ணோன்ணும் பகவான் ஜீ:)

   Delete
  3. # எதுக்கும் இந்த மட்டரை:) படுபயங்கரமா சீக்ரெட்டாத்தான் மூஃப் பண்ணோன்ணும் பகவான் ஜீ#
   CIA வசம் விட்டுடுவோமா :)

   Delete
 5. முதல் ஜோக் முதலில் புரியவில்லை. அப்புறம் புரிந்தது!

  ஆறையும் நூறையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. குடியிருப்பை காலனி என்று சொல்வதை விடுத்து காலணி என்பது தவறுதானே :)

   சாவு நிச்சயம் ,ஆறேன்ன ,நூறென்ன :)

   Delete
 6. ''சுனாமி வந்த அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன் !''//

  கல்யாணத்தைத் தடுக்கத்தான் சுனாமி வந்ததோ என்னவோ!!!

  ReplyDelete
  Replies
  1. அந்த சுனாமியில் தப்பித்து ,இந்த சுனாமியிடம் மாட்டிக் கொண்டாரே :)

   Delete
 7. காலணி.... காலனி..., ஆறிலும், நூறிலும், சுனாமி ஸ்ரீ. அனைத்தும் ரசித்தோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. காலனி ஆதிக்கம் என்று சரியாக எழுதுகிறாகள் ,ஆனால் மக்கள் குடியிருக்கும் இடத்தை காலணி என்று ஏன் எழுதுகிறார்கள் என்றே புரியவில்லை :)

   Delete
 8. சுனாமி கடற்கரை ஒட்டியுள்ளவர்களுக்குத்தானே சுனாமி பொருத்தமாக இருக்கும் எல்லோருக்கும் அல்லவேஃஃஃஃ

  ReplyDelete
  Replies
  1. இல்லறச் சுனாமி அனைவருக்கும் பொருந்தும்தானே :)

   Delete
 9. காலனியில் காலணி தேடிவந்தேன்... காலடி கிடைத்தது... எல்லாமே கோல் மால்தான்...!

  கொடுக்கல்... வாங்கல்... இருக்கனுமுல்ல...!

  நல்லாப் பாருங்க... எந்த ரூமிலும் நம்பரே இல்லை... எல்லாமே அந்த அந்த ரூம்ல செத்து தெய்வமானவங்க புகைப்படம்தான் வெளியே இருக்கு...!

  அப்ப இந்த மாத்திரைக்கு இன்னும் யாருமே திரும்பி வரலையா டாக்டர்...?!

  அனாமிகான்னு பேரு வச்சதுக்குப் பதிலா சுனாமிகான்னு வச்சிருக்கலாம்...!

  ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து...!’ன்னு இந்தியன் தாத்தா மக்களுக்குச் சகாயம் செய்ய கத்தியோட வர்றாராம்...!

  த.ம. 8  ReplyDelete
  Replies
  1. மால் என்றாலே கோல்மால் தானே :)

   இரண்டுமே மலையாளிகளிடம் தானா :)

   அப்படின்னா ரூம் எதுவுமே காலியா இருக்காதே :)

   சந்தேகமாத்தான் இருக்கு ,அதனால்தான் வரச் சொல்றார் :)

   அதானே ,பெயரே இல்லாம பெயர் வைக்கக் கூடாதே :)

   இந்தியன் தாத்தா சும்மா சீன் போடத்தான் லாயக்கு :)

   Delete
 10. சுனாமிஶ்ரீ யா..? எப்படி பாஸ் இப்படியெல்லாம் கண்டு பிடிக்கிறீங்க? :)

  ReplyDelete
  Replies
  1. தேவைதானே கண்டுபிடிப்பின் தாய் :)

   Delete
 11. சுனாமிஸ்ரீ....சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் அவரைத் தெரியுமா :)

   Delete
 12. இன்றைக்கு இரண்டு ஜோக்குகள் பரவாயில்லை.

  இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

  ReplyDelete
  Replies
  1. அந்த ரெண்டு எதுன்னுதான் புரியலே,க்ளு கொடுங்க ஜி :)

   Delete
 13. சுனாமிஸ்ரீ நன்றாக இருக்கிறது மற்றவையும் அருமை

  ReplyDelete
  Replies
  1. நம்ம மணவை ஜேம்ஸ் ஜி சொன்ன சுனாமிகாவும் சூப்பர்தானே :)

   Delete
 14. This id coming under joke! Beware of earthquake at home 😄

  ReplyDelete
  Replies
  1. லாவா குழம்பையே ஊற்றிச் சாப்பிடுறவனுக்கு earthquake எல்லாம் ஜுஜுபி :)

   Delete
 15. அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. டாக்டர், நோயாளியை சோதனை எலி ஆக்குவதை ரசிக்க முடியுதா :)

   Delete