12 May 2017

நகை உனக்கு ,ந(டி)கை நீ எனக்கு :)

இதுதான் அதுக்கு காரணமா :)
        ''நீட்  தேர்வு எழுதப் போனவங்களை, குடி தண்ணீர் பாட்டிலைக் கூட கொண்டு போக அனுமதிக்கலையாமே  ,என்ன காரணம் ?''
       ''இதோ ... இந்த புத்திசாலி செய்த வேலைதான் காரணமாயிருக்கும் !''
இதை முதல்லேயே செய்திருக்கலாம் :)
              ''என் பெயரைச் சொல்லி விசாரித்தால் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் கூடத் தெரியலையா ,அப்புறம் எப்படிக் கண்டுபிடிச்சே ?''
          ''மூணாவது  தெருவிலே இருந்த பசங்க கிட்டே உன் பொண்ணோட பெயரைச்  சொன்னேன் ,கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க !''

நகை உனக்கு ,ந(டி)கை நீ எனக்கு :)
           '' நகைக்கடை விளம்பரத்திலே  நடிச்ச நடிகைக்கு ,அதிபரோட டீலிங் ரொம்பப் பிடிச்சு போச்சாமா ,எப்படி?''
             "அந்த நகைகளை நீ வைச்சுக்கோ ,உன்னை நான் வச்சுக்கிறேன்னுட்டாராம் !''

கொள்ளை அடித்தாலும் மாமூல் வந்திடணும் :)
             ''இன்ஸ்பெக்டர்வீட்டுக்கு  வந்த  நான்கு  கொள்ளைக்காரர்களில் ஒருத்தரை மட்டும் சுட்டு இருக்காரே ,ஏன்  ?''
             ''மத்த மூணு பேரும் மாமூலை ஒழுங்கா  கொடுக்கிறவங்களா  இருக்கும்  !''

ஐன்ஸ்டீனும் செய்யாத  ஆராய்ச்சி :)
வடைக்கு நடுவே ஓட்டைப் போட்டவன் 
ஆஞ்சனேய பக்தனாத்தான் இருக்கணும் ...
மாலையாய் கோர்க்க வசதியாயிருக்கே !

இந்த லிங்க் >>>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459518 செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

52 comments:

 1. அப்படீனாக்கா.... ஜிலேபியில... நிறைய ஓட்டையை போட்டவன் யாருக்கு பக்தன் ?

  ReplyDelete
  Replies
  1. நாம ஒண்ணு செய்வோம் ,ஜிலேபிநேயன்னு சிலையைப் பிரதிஷ்டை செய்து ஜிலேபி மாலைச் சாற்றுவோம் ...எத்தனை வருட சர்க்கரை நோயானாலும் மாயமாய் மறைந்து விடும் அதிசயம் ...ஜிலேபி மாலைச் சாற்றி ,ஜிலேபிநேசனின் அருள் பெற்ற ஜிலேபியின் ஒரு விள்ளளைச் சாப்பிட்டாலே போதும் ,உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் பரம்பரைக்கே சர்க்கரை நோய் அண்டாது ....இந்த கோவிலை கடக்கும் போது, நாசாவின் செயற்கைக் கோள்களையும் செயல் இழக்கச் செய்யும் அற்புத சக்தி வாய்ந்த கோவிலுக்கு வாரீர் வாரீர் !என்று பிளெக்ஸ் பேனர் வைப்போம் ,அப்புறம் பாருங்கள் வளர்ச்சியை !
   இந்த செய்தியை fb ,ட்விட்டர் g+மூலம் ஷேர் செய்பவரின் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்து விடும் என்றுகூட அள்ளிவிடலாம் !
   இந்த கோவிலின் அறங்காவலராக நீங்களோ ,நானோ இருந்துகொள்வோம் ,அப்படியே மக்களை மயக்கி அந்த ஏரியா பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆக வாய்ப்பிருக்கு !
   யோசனை செய்து சொல்லுங்க ஜி ,அடிக்கல் நாட்டி விடலாம் :)

   Delete
  2. சே சே சே.. உங்கள் தலைப்பில் தப்பிருக்கிறது பகவான் ஜீ:)..”நகை எனக்கு, நடிகை உங்களுக்கு” எனப் போட்டிருந்தால், இந்நேரம் வோட்ஸ் 20 ஐ தாண்டியிருக்கும்:).

   Delete
  3. அதிரா. உங்க வைர நெக்லஸ்க்கு டிமாண்ட்....விளம்வரத்துக்கு வேணுமாம்..நல்ல டிசைநாமே....உங்க செக்ரட்டரி சொன்னாங்க......மீ எஸ்கேப்....என் வேலை முடிஞ்சு போச்சு....ஹிஹி

   கீதா

   Delete
  4. கீதா காதைக் கொண்டுவாங்கோ.. பகவான் ஜீக்கு வைரம் பதிச்ச மகுடம் இம்முறை கிடைச்சால்ல், அந்த வைரமெல்லாம் எனக்கு தருவேன் என, நடுச்சாமம் 12 மணிக்கு தேம்ஸ் கரை மண்ணில அடிச்சு சத்தியம் பண்ணினவர்:).. அதனாலதேன்ன்ன் இவ்ளோ கூக்குரல்:).. ஸ்ஸ்ஸ்ஸ் இது நமக்குள் இய்க்கட்டும்:).

   Delete
  5. #வோட்ஸ் 20 ஐ தாண்டியிருக்கும்:).#
   என் வலையுலக உறவுகளை ஜொள்ளர்கள் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன் ,அதிரா :)

   Delete
  6. ஜி மைண்ட்ல வச்சுக்கிட்டேன்.

   Delete
  7. சீக்கிரம் முடிவெடுங்க ,தாமதமானால் வேறு யாராவது முந்திக் கொள்வார்கள் :)

   Delete
  8. //என் வலையுலக உறவுகளை ஜொள்ளர்கள் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன் ,அதிரா :)//

   வெரி சோரி:) திரும்படியும் தப்பாவே சொல்லிட்டேன் மன்னிச்சுக்கோங்க:) கோபப்பட்டு வைரத்தை தராமல் விட்டிடாதீங்க:)..

   http://i241.photobucket.com/albums/ff131/khloemi/CatBegging.jpg

   Delete
 2. எல்லாம் சிறப்பு
  மிகக் குறிப்பாய் டீலிங்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இதைதான் புரிந்துணர்வு ஒப்பந்தம்ன்னு சொல்றாங்களா ஜி :)

   Delete
 3. ஆஞ்சனேய பக்தனா..? செம கண்டுபிடிப்பு ஜீ..!

  ReplyDelete
  Replies
  1. ஐன்ஸ்டீன் தோற்றார் ,இல்லையா ஜி :)

   Delete
 4. கொப்பி அடிக்கிற நுட்பம் - அது
  தமிழர் கண்டுபிடிப்பு
  அப்பன் பெயரைச் சொல்லி
  கண்டுபிடிக்க இயலாத வேளை - அவரது
  மகள் பெயரைச் சொன்னதும்
  பையன்கள் காட்டிக் கொடுப்பது
  காதல் கண்டுபிடிப்பு

  ReplyDelete
  Replies
  1. இந்த கேவலத்தை ஏன் நம் கண்டுபிடிப்பு என்கிறீர்கள் :)
   காதல் கண்டுபிடிப்பு எல்லா நாட்டுக்கு பொருந்தும் தானே :)

   Delete
 5. வணக்கம்
  ஜி
  எப்படி எல்லாம் சிந்தனை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஜி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பிட் அடிக்கிறவனுக்கு வந்திருக்கும் சிந்தனையை விடவா :)

   Delete
 6. Replies
  1. உங்க ஐந்து தான் ஆள விருட்ஷம் போல் பதினைந்து ஆகிவிட்டது ,நன்றி ரூபன் ஜி :)

   Delete
 7. காபி அடிப்பதில்தான் எத்தனை வகை!

  அட்ரஸ் கண்டுபிடிக்க பழைய டெக்னிக்.

  :)))

  அடப்பாவமே..

  பலே யோசனை!!

  ReplyDelete
  Replies
  1. அதான் கெடுபிடி அதிகமாகுது :)

   நான் கேட்டதுமில்லை ,சொன்னதுமில்லையே ஜி :)

   கருமம் ,கருமமா :)

   குறி வைப்பதிலும் அரசியல்தானா :)

   ஏன் அதிரசத்தைக் கொடுக்கலே :)

   Delete
 8. Replies
  1. இவ்வளவு தெளிவா பிட் அடிப்பதையுமா :)

   Delete
 9. Replies
  1. குடிக்கிற தண்ணி பாட்டில் மூலமாவே ,தண்ணி காட்டுறானே ..ரசிக்கத் தானே தோன்றுகிறது :)

   Delete
 10. மத்த மூணு பேரும் மாமூலை ஒழுங்கா கொடுக்கிறவங்களா இருக்கும் !''

  ஹாஹாஹா...

  ReplyDelete
  Replies
  1. இன்ஸ் க்கு இந்த விசுவாசமாவது இருக்கே :)

   Delete

 11. இங்கே ஸ்கூல் 11 அம் வகுப்பு தேர்வுக்கு க்ளியர் பாட்டில்ஸ் லேபிள் இல்லாம கொண்டு போகணும் பென்சில் கேஸெல்லாம் கூட க்ளியர் ஸீ த்ரூவா இருக்கணும்னு ரூல்ஸ் ..
  ஐன்ஸ்ட்டின் ஆராய்ச்சி :) ஹா ஹா ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ,அங்கே உள்ளவன்தான் தானா இதுக்கு முன்னோடி :)
   கேட்டா ,இந்த வடைக்கும் வரலாறு இருக்குன்னு சொல்வாங்க :)

   Delete
 12. குடி தண்ணீரில் கலக்கலா...?! மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?! தெளிந்த தண்ணியப் பாரு...!

  பேர் சொல்லும் பிள்ளை...!

  வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள வச்சிக்கவா...?!

  இன்ஸ்பெக்டரோட மனைவி மனச கொள்ளையடிச்சிட்டானாம்...!

  எடுக்கவா... கோக்கவா... எதுக்கு கேக்கனும்...?!

  த.ம. 10

  ReplyDelete
  Replies
  1. அதை விட தெளிவாய் தெரியும் பிட்டுதானே அவனுக்கு தெரிகிறது :)

   பெயரை ரிப்பேர் ஆக்காமல் போனால் சரிதான் :)

   இப்படி எத்தனை பேரிடம் சொல்லி ஏமாற்றியிருக்கீங்க:)

   பணம் பாதாளம் வரை பாயும்னு சொன்னதை நம்புறேன் :)

   கோக்குமாக்கா கேக்கிறதை விட்டுட்டு நேரடியா கேளுங்க :)

   Delete
 13. மீ த லாஸ்ட்டூஊஊஊஊஊ:).. பகவான் ஜீ மேடைக்கு வரவும்.. மகுடம் சூட்ட வந்தேன்ன்ன்.. ஹையோ வாசனை சம்போ போட்டு தோய்ஞ்சிட்டு வாங்க... 11 பவுணில மகுடம்... இனித்தான்.. வைரம், வைடூரியம் எல்லாம் பதிப்பினம்..

  வாழ்க்கை வெறுத்துப்போய்(வலையுலக:)) காசிக்குப் போயிடலாமெ ந பிளேனில வலது காலைத் தூக்கி வச்சனா.. உடனே ஒரு அசரீரி...” நீ போயிட்டால்ல்.. பகவான் ஜீ க்கு தேம்ஸ்கரை வோட்டில 2.. குறைஞ்சிடுமே என.. [(என்னோடது ஒன்று:)+ மிரட்டிப் போடவைப்பது ஒன்று)]..

  அதனாலதான் வோட் போட வந்தேன்.. ஆனா சொல்ல முடியாது, மீ காணாமல் போயிட்டால்.. காசியில் பூஸானந்தா ஆச்சிரமத்திற்கு வந்து.. ஆசி பெற்றுச் செல்லவும்.. வெரி சோரி வோட் பெற்றுச் செல்லவும்:).

  ReplyDelete
  Replies
  1. தலையில் இருந்து மகுடம் சிலநாட்களாவே இறங்காததால் இப்படியாகிப் போச்சு :)

   Delete
 14. கொமெண்ட்ஸ் போடாவிட்டாலும் பறவாயில்லை.. வோட் பண்ணலாமே என மொபைலால் ட்றை பண்ணினேன்.. லிங் இணைக்கவில்லை இம்முறை கர்ர்ர்:)... அதிரா இல்லை.. அதனால் கேள்வி கேட்க ஆளில்லை என நினைச்சிட்டீங்கபோல .. நான் இருக்கிறேன் கேய்வி கேய்ப்பேன்:).

  ReplyDelete
  Replies
  1. #நான் இருக்கிறேன் கேய்வி கேய்ப்பேன்:)#.
   கேய்வி கிழவிகூட கேட்பாளேன்னு பலரும் சொல்வாக ...நான் அதுக்காக உங்களை கிழவின்னு சொல்ல மாட்டேன் ,எனக்கு தேம்ஸ் கரை வோட்டு வேணும்:)

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பகவான் ஜீ உடனடியா உங்கள் சொந்தச் செலவில்(உங்கள் லெவல் தெரியாமல் இனி ஏதும் பேச மாட்டேன்:)..)பிரித்தானியக் காண்ட் கோட்டுக்கு அழைக்கப்படுகிறார்ர்ர்ர்ர்:).. ஒரு சுவீட் 16 பிள்ளையை(அது நாந்தேன்ன்:) இப்பூடி பப்ளிக்கில மான பங்கப் படுத்திய குற்றத்துக்காக..

   அத்தோடு அபராதமாகா அடுத்த தடவை.. யாருக்கு கத்தி, துவக்கு காட்டியெண்டாலும் கூட்டி வந்து மகுடம் சூட்ட வைக்கோணும் எனவும் மேன்மை தங்கிய, பகுத்தறிவுமிக்க, இளமையான:) அன்பான, பண்பான மேன்மை தங்கிய நீதிபதி அவர்கள்[இது நாந்தேன்ன்].. ஆணையிடுகிறார்.....:).

   Delete
  3. #ஒரு சுவீட் 16 பிள்ளையை(அது நாந்தேன்ன்:)#
   # மேன்மை தங்கிய நீதிபதி அவர்கள்[இது நாந்தேன்ன்].. #
   இந்த இளம் வயதிலேயே நீங்கள் , நீதிபதி ஆனது கின்னஸ் சாதனைதான் ,வாழ்த்துகிறேன் !ஆனால் .யாருக்கு கத்தி, துவக்கு காட்டியெண்டாலும் கூட்டி வந்து மகுடம் சூட்ட வைக்கோணும் ...இந்த தண்டனைதான் என்னான்னு புரியலே ,தீர்ப்பை மாத்தி எழுதுங்க ,மை லார்ட் :)

   Delete
  4. மகுடம் ரெடி ,சூட்டிக்க பூஜார் ரெடியா :)

   Delete
  5. ரெடீஈஈஈஈ ஆனா இடம் மாறப்படலாம் எதுக்கும் நாளை தகவல் சொல்றேன் எங்கே என:) அதுவரை பத்திரம்:) .... மகுடத்துக்குச் சொன்னேன்ன்:)..
   ஊடிக்குறிப்பு:) வைரம் பதிச்சதுதானே?:)...

   Delete
 15. Replies
  1. #நாசாவின் செயற்கைக் கோள்களையும் செயல் இழக்கச் செய்யும் அற்புத சக்தி வாய்ந்த கோவிலுக்கு வாரீர் வாரீர் #
   இதை நீங்க கேட்ச் பண்ணுவீங்க என்று நினைத்தேன் :)

   Delete
 16. அனைத்தும் ரசித்தோம் ஜி....

  ReplyDelete
  Replies
  1. #இந்த லிங்க் >>>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459518 செல் மூலமாய் 'தம'ன்னா வோட் போடுவோரின் வசதிக்காக #
   இதையும் நீங்க பயன்படுத்திக் கொள்ளலாமே ஜி :)

   Delete
  2. இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்கோ பகவான் ஜீ... கீதாக்கும் கேய்க்கட்டும்:) ஹையோ நான் சொன்னேன் எனச் சொல்லிடாதீங்கோ:).

   Delete
  3. நீங்க கத்தினதைக் கேட்டே வந்துட்டாக :)

   Delete
 17. ஜிலேபிநேயன்னு சிலையைப் பிரதிஷ்டை செய்து ஜிலேபி மாலைச் சாற்றுவோம்//

  பக்தகோடிகளும் கணக்குவழக்கில்லாம ஜிலேபி மாலை சாத்துவாங்க. அவற்றையும் வித்துக் காசாக்கிடலாம்.

  ஜோக் மூலம் அருமையான மூடநம்பிக்கைச் சாடல்.

  ReplyDelete
  Replies
  1. நாட்டிலே சர்க்கரை நோய் பெருகிப் போச்சு ,நாம் டார்கெட் அவங்கதானே ? வருமானத்துக்கு குறைவே இருக்காது :)

   Delete
 18. இருக்க பட்டவங்களுக்குத்தான் எல்லாம் கிடைக்கும்போல......

  ReplyDelete
  Replies
  1. நீங்க யாரைச் சொல்றீங்க ,நடிகையையா ,நகைக் கடை அதிபரையா :)

   Delete
 19. எப்படி எல்லாம் காப்பி முறைகள் ஆமாம் எல்லாக் கேள்விகளுக்கும் இது உதவுமா
  அப்பனை விட வயசுப் பெண் ஃபேமஸ்
  நீயே எனக்குச் சொந்தமானால் உனதெல்லாம் எனதுதானே
  கொள்ளைக் காரன் வீட்டிலேயே கொள்ளையா
  ஆஞ்ச்நேயருக்கு மசால் வடை பிடிக்காதோ

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நாலு பாட்டில் வச்சிருப்பார் :)
   பருவ லொள்ளு இதுதானே :)
   அப்படின்னு நினைச்சா ஏமாந்து போவீங்க :)
   அங்கே நிறைய இருப்பதால்தானே :)
   அவர் சாப்பிட்டால் அதையும் கேட்பார் :)

   Delete