13 May 2017

காதலுக்கு கண்ணில்லை ,காதலிக்குமா :)

               ''என் காதலிக்கு கண் பார்வை தெரியுமான்னு ஏண்டா கேட்கிறே ?''
                ''உன்னைப் பார்த்த பிறகுமா காதலிக்கிறாளான்னு தெரிஞ்சிக்கத்தான் !''

குருவின் லீலை என்றாலே ஏன் தப்பாவே தோணுது :)
            ''குருவின் மகிமை  என்கிற  புத்தகம்  விற்பனையே ஆகாம , ரிடர்ன்  ஆயிடுச்சே  ..என்ன செய்யலாம் ?''
          ''குருவின் லீலைன்னு   தலைப்பை மாற்றுங்க ,செம சேல்ஸ் ஆகும் !''

மக்களுக்கு நல்லது நடக்குமா :)         
               ''திருட்டுத் தொழிலை விடப்போறீயா ,ஏண்டா  ?''
               '' எல்லாத்  துறையிலேயும்  கமிசன் கூடிப் போச்சு ,மாமூலையும் உயர்த்தியே ஆகணும்னு 'எஜமானர்கள் 'கேட்கிறாங்களே  !''

அப்பன் திருந்தாம பிள்ளை திருந்துமா :)
           ''திருடிக் கொண்டா வந்தேன்னு கேட்டு ,உங்கப்பா தோலை உரிச்சிட்டாரா ,அப்புறம் ?''
           '' முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டு விட்டார் !''

அக்னி வெயிலால் வந்த மறதி :)
           ''இப்படி கோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு  வந்திருக்கீங்களே ,கொண்டு போன குடை  என்னாச்சு ?''
           ''இதோ இருக்கே ...கோடை வெயிலை  சமாளிக்கத் தானே அதை கொண்டு போனேன் !''

இழப்பதற்கு ஒன்றுமில்லையா ,இதை தவிர :)
வெட்டப் பட்டு மடியில் விழும் முடிகளைப் பார்க்கையில் ....
'முடி 'யாட்சி இழந்த மன்னனைப் போலாகிறேன் !
இதற்கே இப்படிஎன்றால் ....
இன்றைய ஆளும் 'மன்னர்களுக்கு '...
பதவி சுகத்தை இழக்க எப்படி மனசு வரும் ?

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459659 செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

39 comments:

 1. ஹா ஹா ஹா.. இன்று அனைத்தும் யானே முதலிடம் பெற்றோம்ம்:)

  ReplyDelete
  Replies
  1. kஉடையுடன் நனைந்தது நல்லாயிருக்கு...

   /// ''என் காதலிக்கு கண் பார்வை தெரியுமான்னு ஏண்டா கேட்கிறே ?''
   ''உன்னைப் பார்த்த பிறகுமா காதலிக்கிறாளான்னு தெரிஞ்சிக்கத்தான் !''
   // இதிலிருந்து புரிஞ்சுக்கோங்க.. பெண்கள் புற அழகுக்கு மயங்குவதில்லை.. அக அழகையே விரும்புவர்:).

   Delete
  2. முதலிடம் பெற்றமைக்கு ஹேப்பி ,வரப் போற உங்க பதிவுக்கு மகுடம் தயாராகி விட்டது ,சீக்கிரம் ரீலீஸ் பண்ணுங்கோ :)

   Delete
  3. #பெண்கள் புற அழகுக்கு மயங்குவதில்லை.. அக அழகையே விரும்புவர்:)#
   அப்படியானால்,FB தொடர்பில் பல பெண்கள் ஏன் மோசம் போறாங்கன்னு தெரியலே :)

   Delete
  4. Bagawanjee KASat May 13, 12:26:00 am
   முதலிடம் பெற்றமைக்கு ஹேப்பி ,வரப் போற உங்க பதிவுக்கு மகுடம் தயாராகி விட்டது ,சீக்கிரம் ரீலீஸ் பண்ணுங்கோ :)///

   ஆவ்வ்வ்வ்வ்வ் அப்பூடியா சொல்றீங்க.. நீங்க சொன்னா பலிக்கும்.. எனக்கு ஒவ்வொரு தடவையும் இந்த வசனத்தைப் பாடமாக்கி வச்சு சொல்லிடுங்கோ.. மகுடமாக் குவியட்டும்:) ஊரெல்லாம் புகையட்டும் ஹா..ஹா..ஹா..

   Delete
  5. அது உண்மைதான் அதுக்குக் காரணம்.. புகழ்ச்சிக்கும், மற்றும் நல்ல அன்பான வார்த்தைகளைக் கொட்டிப் பேசுவோரிடமும், நம்பி ஏமாந்து போய் விடுகிறார்கள். சொல்லுவார்களே .. சிலர் பேசும் பேச்சில் வயிற்றுப் பிள்ளையே வழுக்கி விடும், என ஒரு பழமொழி இருக்கிறது... அப்படிப் பேசும் பேச்சுக்கு, அவசரப்பட்டு அடிமையாகி விடுகின்றனர்.

   Delete
  6. # சிலர் பேசும் பேச்சில் வயிற்றுப் பிள்ளையே வழுக்கி விடும்,#
   சுகப் பிரசவம் ஆவதற்கு இவர்கள் உதவுவார்களா :)

   Delete
 2. எல்லா ஜோக்குகளும் as usual அட்டகாசம்..! அப்பன் திருந்தாம.. ஜோக் செம செம ஜீ

  ReplyDelete
  Replies
  1. பிள்ளைக்கு கூட தராமல் சாப்பிடுற இவனெல்லாம் நல்ல அப்பனா :)

   Delete
 3. வழமைபோல் எல்லா நகைச்சுவைத்
  துணுக்குகளும் அபாரம்
  குறிப்பாக திருடன் திருந்த நினைப்பது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நல்ல அப்பனா இருந்தா , பிள்ளைத் தோலையில்லே உரிச்சிருக்கணும்:)

   Delete
 4. குருவின் லீலை எனக்கு வேணுமே... ஜி

  ReplyDelete
  Replies
  1. நாலு பதிப்புமே காலியா போச்சு ,ஐந்தாவது டீலக்ஸ் பதிவு , cctv கேமராவில் எடுத்த காட்சிகளுடன் கூடிய இலவச DVD இணைப்புடன் ரெடியாகிகிட்டிருக்கு ,அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக்குங்க :)

   Delete
 5. அனைத்தும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எஜமானர்கள் கேட்டால் கொடுத்துத்தானே ஆகணும் :)

   Delete
 6. Replies
  1. முழு வாழைப் பழத்தையும் அவரே சாப்பிட்டதையுமா:)

   Delete
 7. அருமயான
  அப்பா அருமையான பிள்ளை
  தம +

  ReplyDelete
  Replies
  1. எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அவர்கள் எடுத்துக்காட்டா :)

   த ம + இல்லை ?

   Delete
 8. அனுதாபத்திலும் காதல் வருமாமே...!

  ‘மன்மத லீலையால் வென்றவர்’ தலைப்பைப் போடுங்க...!

  மானம் கெட்டவனெல்லாம் கேட்டபதைப் பெரிசா எடுத்திக்காதே... அப்புறம் நம்ம வாழ முடியாது...!

  ‘தோல் கண்டேன்... தோலே கண்டேன்... !’ -தோழா...!

  வெயிலும் அடிக்கிது... மழையும் பெய்யுது... இணைப்பு சாத்தியமா...?

  சுகம் சுகமே... பதவி சுகம் சுகமே... அதை உயிரைக் கொடுத்தாவது அல்லது பணத்தைக் கொடுத்தாவது காத்திடுவோம்...!

  த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. இரண்டு பேருமே அனுதாபத்துக்கு உரியவர்கள் என்றால் வரும் :)

   உண்டோ வேணாமா :)

   வாழணும்னா எதை வேணா செய்யலாம் :)

   என் அப்பன் வாயில் நுழைந்த பழத்தை காணலியே :)

   அதுக்காக இரண்டையும் தூக்கிட்டு திரிய முடியுமா :)

   காலில் விழுந்தாவது பதவியைத் தக்க வைப்போம் :)

   Delete
 9. 'குருவின் லீலைன்னு தலைப்பை மாற்றுங்க ,செம சேல்ஸ் ஆகும் !''//

  உண்மை! உண்மை!!

  ReplyDelete
  Replies
  1. இப்படிப் பட்ட குருக்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது பெருமைதானே :)

   Delete
 10. "பதவி சுகத்தை இழக்க
  எப்படி மனசு வரும்?" என
  நம்மாளுங்களை
  நல்லா ஆய்வு செய்யிறியளே!

  ReplyDelete
  Replies
  1. தேசத் துரோகிகளை கூட தியாகத் திலகம் என்று வாழ்த்தி பதவியை பெற நினைக்கிறார்களே:)

   Delete
 11. Replies
  1. குருவின் லீலை என்றாலே ஏன் தப்பாவே தோணுது , என்பதைத்தானே கேட்கிறீர்கள் :)

   Delete
 12. வாழைப்பழ ஜோக் பிரமாதம்! இன்னும் எத்தனை ஜோக்குகளுக்கு வாழைபழம் பயன்படுமோ?

  ReplyDelete
  Replies
  1. உரிக்க உரிக்க வந்து கிட்டே இருக்கே :)

   Delete
 13. யார் சொன்னது காதலுக்கு கண் இல்லை என்று..கண் இருப்பதால்தான்.அடம் பொருள். பார்த்து வருகிறது..

  ReplyDelete
  Replies
  1. இடத்தைப் பார்த்து வருதோ என்னவோ ,பொருளைப் பார்த்து வரத்தான் செய்யுது :)

   Delete
 14. வாழைப்பழம் ஹஹஹஹஹ்...அனைத்தும் ரசித்தோம்...ஜி

  ReplyDelete
  Replies
  1. இது பேயன் வாழைப் பழம் ,அதான் எல்லோருக்கும் பிடிக்குது :)

   Delete
 15. அனைத்து பதிவு நன்கு

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் குருவுக்கு நிகர் குருதான் இல்லையா :)

   Delete
 16. அது அந்த இரண்டாவதுபழமா இதை விட்டால் அப்பனுக்கு எதுவும் கிடைக்காதே
  புதுக் குடை அல்லவா மழையில் நனைத்தால் கெட்டு விடாதோ
  இப்போதெல்லாம் காதலிகளுக்கு உடலெல்லாம் கண்

  ReplyDelete
  Replies
  1. பையன் ஏற்கனவே ஒண்ணு முழுங்கிட்டானா :)
   அப்படின்னா நல்லா நனையட்டும் :)
   ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியேன்னு பாட வேண்டியிருக்குமோ :)

   Delete
 17. ஜோக்குகள் அபாரம்! Keep tickling!👍

  ReplyDelete
  Replies
  1. முதல் முறையாக வந்தமைக்கும் ,ஊக்கம் தந்தமைக்கும் நன்றி :)

   Delete