17 May 2017

மனைவி தந்த கசப்பான அனுபவம் :)

காஜா மெஷின் இன்னும் வாங்கலையாம் :)
         ''அந்த லேடீஸ் டைய்லர் சட்டையும் நல்லா தைத்து தருவாங்கன்னு    நம்பினது , தப்பா போச்சா ,ஏண்டா ?''
        ''பட்டனுக்குப் பதிலா  'ஹூக்'கை தைச்சிருக்காங்களே !''

பஸ் மெதுவா போகும்னு இப்படியும் சொல்லலாமா :)             
           ''டிரைவர் சார் ,மூணு மணி நேரத்திலே போகவேண்டிய ஊருக்கு ,ஐந்து மணி நேரம் ஆகுதே,ஏன்  ?''
           ''டைம் பாஸ் ரைடர்னு எழுதி இருக்கிறதை நீங்க கவனிக்கலையா ?''

மனைவி தந்த கசப்பான அனுபவம் :)
         ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது ஞாபகப் படுத்தக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''

         ''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே ,தேவையா எனக்கு ?''
இன்னைக்கு மூன்றாவது நாள் கிளி ஜோதிட ஜோக் :)
        ''அந்த கிளி ஜோதிடர்கிட்டே மட்டும் கூட்டம் அதிகமா வருதே ,ஏன் ?''
        ''ஜோதிடர் எடுத்துக் கொடுக்கிற சீட்டை கிளி படிச்சு சொல்லுதாமே  !''

மகிழ்ச்சி தந்த காதலே ,துக்கமாகுமோ :)
காத்திருப்பது ...
காதலிக்கும்போது சுகமாய் இருக்கலாம் ...
கல்யாணம் ஆனபின் ..
ஒண்ணாம்தேதி எப்பொழுது வருமென்று 
ஏங்கத்தொடங்கும் போதுதான்  ...
காத்திருத்தலின் வலி புரிகிறது ...
காதலின் நிஜ முகம் தெரிகிறது !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460205செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

செல் மூலம் 'தம'ன்னா  வாக்களிக்க இதோ இன்னொரு வழி ...'view web version'(தமிழில் 'வலையில் காட்டு )என்பதை க்ளிக் செய்தால் தம வோட்டுப் பெட்டி தெரியும் !

33 comments:

 1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் மீதானே இன்றும்.... ஓஒ லலலாஆஆஆஆஆஆ:)

  ReplyDelete
  Replies
  1. இந்தாங்க பகவான் ஜீ... தமனாக்கு-கண்ணு பட்டிடாமல் எங்காவது கட்டித் தொங்க விட்டிடுங்கோ:)...

   http://img.maalaimalar.com/Articles/2016/May/201605170728364184_simple-kan-thirusti-pariharam_SECVPF.gif

   Delete
  2. வோட் போடும் தமனா லிங்:)

   http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460205

   Delete
  3. மாட்சிமை தாங்கிய பிரித்தானிய இளவரசியின் உத்தரவுக்கு கில்லர்ஜி பணிந்து விட்டாரே :)

   Delete
  4. கண் திருஷ்டி பரிகார செட் கிடைத்தது ,இன்னும் ரெண்டு பச்சை மிளகாய் இருந்தால் சரியாகயிருக்கும்:)

   Delete
  5. ஓடும் டிரெயினில் கூட வை பை நன்றாக கிடைப்பதால் வளமை போல் நானும் இணைத்துவிட்டேன் ,அதுக்காக உங்களுக்கு நன்றி சொல்லாம இருக்கமுடியாதே ,கோடானு கோடி நன்றி :)

   Delete
  6. ///மாட்சிமை தாங்கிய பிரித்தானிய இளவரசியின் உத்தரவுக்கு கில்லர்ஜி பணிந்து விட்டாரே :)///
   ஹா ஹா ஹா அப்படி எல்லாம் இருக்காது:), நீங்க ஜென்னைக்கு ஜெயில்ல போறீங்க என... ஹையோ சோரி டங்கு ஸ்லிப்ட்... சென்னைக்கு ரெயில்ல:) போறீங்க எனும் தகவல் அவருக்கு எயாடெல் மூலம் கிடைச்சிருக்கும்:).. ரெயில் பயணங்களில்.. புளொக் பயணத்தை மறந்திடுவீங்க 12 க்கு போஸ்ட் வராது என தப்பா நினைச்சுக் கரெக்ட்டா நித்திரையாகிட்டார்ர்ர்... :)

   Delete
  7. #கண்ணு பட்டிடாமல் எங்காவது கட்டித் தொங்க விட்டிடுங்கோ:)...#
   யார் கண்ணிலும் படாத மாதிரி தொங்க விட்டுட்டேன் ,சரிதானே ...அதிரா :)

   Delete
  8. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க சென்னைக்கு ரெயினில போனதால குழம்பிப்போயிருக்கிறீங்க:).

   Delete
 2. ஒரு ஜோக் பரவாயில்லீங்க. ('மாசப் பிறப்பு')

  ReplyDelete
  Replies
  1. நன்றி ,நாலுலே ஒண்ணாவது தேறியிருக்கே ,உங்க பார்வையில்:)

   Delete
 3. ஹாய் பகவான் ஜீ,

  வேலைல பிஸியா இருந்ததால லேட் ஆகிடுச்சு. வழக்கம் போல ஜோக்ஸ் பிரமாதம். கடைசி கவிதையும் சூப்பர்.

  இன்று என்னை மிகவும் கவர்ந்தது - 3 வது ஜோக் :)

  ஓட்டு போட்டாச்சு ஜீ

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு அது கசப்பான அனுபவம் ,நமக்கு ரசிக்க வைக்கும் அனுபவம் இல்லையா ரா ரா ஜி :)

   Delete
 4. அடக் கடவுளே
  பைபாஸ் ரைடர் மாதிரி
  டைம் பாஸ் ரைடரும் வந்தாச்சா ?

  லேடீஸ் டைலர் முழுசா
  மாறுவ்த்ற்குள் சட்டை கொடுத்தால்
  இந்தக் கதிதான்

  அந்த்க் கிளி ஜோதிடர்'கெட்டிக்காரர்

  அனைத்து துணுக்குகளும் அருமை

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தானே எல்லா அரசு பஸ்சும் ஓடிக்கிட்டுருக்கு :)

   ஜிப்பாவை தப்பா தைச்சி ,அதுக்கு ஜிதப்பான்னு பெயர் வச்சவங்க இவங்கதானா :)

   தொண்டைத் தண்ணி வற்றவே வற்றாது அவருக்கு :)


   Delete
 5. டெய்லர் ஹூக்காவது வச்சானே...

  ஜி நான் வருடம் முழுவதும் இவ்வழியில்தான் வோட் செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. னே இல்லே ளே :)

   உங்க வழி ,ரொம்ப நல்ல வழி :)

   Delete
 6. பட்டனுக்கு பதில் ஹூக்கா!! ஹா... ஹா... புது பேஷன்!

  ஓ.. இப்படி வேற இருக்கா!

  சுய விழிப்புணர்வு!

  ஒருவேளை ஜோதிடரிடம் சீட்டு எடுத்துக் கொடுப்பது பருவக்கிளியோ என்று நினைத்தேன்!

  :))

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,அதாவது இருக்கே :)

   கவனமா இருக்கணும் :)

   அனைவருக்கும் தேவைதானே :)

   பருவக்கிளி பக்கத்தில்வ இருந்தால் அவர் ஏன் இந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கப் போறார் :)

   சிரமம் தானே :)

   Delete
 7. அந்த லேடீஸ் டைய்லருக்கு... பொத்தானை வைத்துப் பொத்துவது பிடிக்காதாம் அந்த தையலுக்கு...!

  தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட டிரைவரு... வேகமாப் போயி எந்தப் பொண்ணையாவது உரசி... எமனாகனுமா...?!

  எந்த மாசம்... எது பிறக்குமுன்னே தெரியலையே...!

  ‘கிளிப் பேச்சு கேட்க வா...!’

  ‘காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போனதடி...!’

  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. இதுவே கூட பேஷன் ஆகக் கூடும் :)

   அதுவும் இப்போ நடந்ததே :)

   பொறக்கிற வரைக்கும் பொறுமையா இருக்க வேண்டியதுதான் :)

   பாடினால் இன்னும் எப்படியிருக்கும்:)

   காதலில் வெற்றி பெற்ற பிறகுமா :)

   Delete
 8. தூக்கத்தில்தான் எவ்வளவு லொள்ளு.....சே.....

  ReplyDelete
  Replies
  1. தூக்கத்தில் இல்லே ,தூங்கத் தான் இந்த லொள்ளு :)

   Delete
 9. பட்டனுக்குப் பதில் ஹூக் அஹஹஹ

  டைம்பாஸ் ரைடரையும் ரசித்து அனைத்தையும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. வைத்தாலும் ஒண்ணும் தப்பில்லையே :)

   இப்படியும் சமாளிக்கிறாரே :)

   Delete
 10. அத்தனையும் முத்துகள்

  ReplyDelete
  Replies
  1. அத்தானின் முத்தங்கள் பாட்டுதான் நினைவுக்கு வருது :)

   Delete
 11. எப்படியோ மூடி மறைக்க முடியுமே
  சில பஸ் ட்ரைவர்களிடம் எப்போது போய்ச் சேரும் என்று கேட்டால் கோபம் வந்து விடும்
  இவர் எழுந்தால்தானே அவரை எழுப்ப முடியும்

  சரக்கு இருக்கும் வரை தொடரட்டும்
  மாசமும் ஒண்ணாம் தேதியும் காதலிக்காவிட்டாலும் வருமே கஷ்டங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹூக்கை மாட்டி விடுன்னு மனைவியை அழைத்தால் நல்லாவா இருக்கும் :)
   இப்படியும் ஒரு செண்டிமெண்ட் :)
   அதைச் சொல்லுங்க :)
   மாற்றி மாற்றி சொல்வதுதானே ,என்னைக்குத் தீரப் போவுது :)
   சொந்த பந்தம் ஆதரித்தால் கஷ்டம் குறையுமே :)

   Delete
 12. டைம் பாஸ் ரைடரும், கிளி ஜோசியமும் அருமை

  ReplyDelete
  Replies
  1. கிளி ஜோதிடம் கூட எனக்கு டைம்பாஸ் தான் :)

   Delete
 13. காத்திருப்புகள்
  காதலில்---
  பணத்தில்---

  ReplyDelete
  Replies
  1. சுகமான சுமைதானே :)

   Delete