2 May 2017

இந்த பொண்ணு யாருக்குச் சொந்தம் :)

இதுக்கு போய் வருத்தப் படலாமா :)         
           ''கல்யாணமாகி ஐந்து வருஷமா என் மனைவி வயிற்றில்  ஒரு புழு பூச்சி கூட இல்லை ,டாக்டர் !''
          ''சந்தோசப்பட வேண்டிய விஷயத்துக்கு ஏன் வருத்தப் படுறீங்க ?''

புத்தர்  பல்லை இன்னும் பாதுகாக்கிற  மாதிரி :)              
             ''காலமானவரோட   பல் வேணும்னு  பிள்ளைங்க அடிச்சுக்கிறாங்களே,அவர் ஞாபகார்த்தமா வைச்சுக்கப்  போறாங்களா ?''

         ''அட நீங்க வேற ,அது தங்கப் பல் ஆச்சே :)''

பெரிய தேவ ரகசியம் சொல்லப் போறார் :)        
            ''அம்மா தாயே ,சாப்பிட்டு நாலு நாளாச்சு ,ஏதாவது இருந்தா போடுங்க !''
            ''நாலு நாள் சாப்பிடாம எப்படி இருக்கமுடியும் ,அந்த ரகசியத்தைச் முதல்லே சொல்லு !''

 கரப்பான் பூச்சியிடம் உள்ள பயம் கூட கணவனிடம் ...:)
        ''உங்க மீசையைப் பார்த்தா எனக்கு கரப்பான்பூச்சி ஞாபகம்தான் வருது !''
       ''உங்களுக்கு வருது சரி ,கரப்பான் பூச்சிக்குப் பயப்படுற என் மனைவிக்கு  வர மாட்டேங்குதே !''

மாப்பிள்ளை 'CHEF 'ப்பா இருப்பாரோ :)
           '' கல்யாணமான புதுசுல நான் ,அடிக்கடி  என் பிறந்தகத்துக்கு போவேன் ,நீயேன் வரவே மாட்டேங்கிறே ?''
           ''நான் என்னம்மா  செய்றது ?அப்பா சமையலைவிட அவர் சமையல் அருமையா இருக்கே !''

இந்த பொண்ணு யாருக்குச் சொந்தம் :)
'ஒன் பை டூ 'டீ கூட 
எனக்கு பிடிக்காதாகையால் ...
என்னை ...என்னை மட்டுமே 
விரும்பும் பெண் தேவை....
என்று இந்தகால வரன்கள்  கேட்டாலும்  தவறேயில்லை !

37 comments:

 1. புழு பூச்சி வச்சா... மருத்துவ செலவுதானே வரும்.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு சந்தோசமா செலவழிக்க தயாரா இருக்காரே :)

   Delete
  2. கொட்டும் மழைக்காலம்ம்ம்ம்ம் உப்பு விக்கப் போனேன்ன்ன்ன்ன்...
   காற்றடிக்கும் நேரம்ம்ம்ம்ம்ம் மாவு விற்கப்போனேன்ன்ன்ன்:)..
   அது ஒண்டுமில்ல:) சிட்டுவேஷன் சோங் பிபிசில போடீனம்ம்ம்:).

   Delete
  3. கிச்சன் கதவு திறந்து கிடக்கு ,சட்டி நிறைய பாலிருக்கு ,பூஜாருக்கு மோப்ப சக்தி குறைஞ்சா நான் என்ன பண்றது :)

   Delete
  4. அதை நல்லாக் காய்ச்சி வைக்கச் சொல்லுங்கோ ஆயாவிடம், நாளைக்கு வாறேன்:)... காய்ச்சாமல் குடிச்சால் தடிமன் வந்திடும்...

   Delete
 2. ஓ நோஓஓஓஓஓ:) ஆனாலும் 0 தானே காட்டுது மீதான் 1ஸ்ட் வோட்டூஊஊஊஊஊஉ:)

  ReplyDelete
  Replies
  1. kஇல்லர்ஜீ இன்னும் வோட்டல்ல:)..

   ///இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

   kabagawanjee@gmail.com athiramiya

   சன்னலை மூடு////

   Delete
  2. கில்லர்ஜிக்கு இன்னும் வோட்டு போடும் வயசு வரலையோ :)

   Delete
  3. அதிரடி அதிரா அவர்களுக்கு... என்னோட பெயரை இப்படியெல்லாம் எழுதினால் தெய்வகுற்றமாகி விடும்.

   "கில்லர்ஜி"
   இப்படி எழுதவும் - കില്ലർജി

   Delete
  4. ஹா ஹா ஹா ஓகே ஓகே அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே:).. கில்லர்ஜி:)

   Delete
  5. ///Bagawanjee KATue May 02, 12:18:00 am
   கில்லர்ஜிக்கு இன்னும் வோட்டு போடும் வயசு வரலையோ :)//

   அப்போ அறுகம்புல் ஜூஸ் குடுப்போமா?:)

   Delete
  6. அறுகம்புல் ஜூஸ்ஸா ? நான் கிரேப் வாட்டர்தான் குடிப்பேன்.

   Delete
  7. அப்பூடியெனில் இந்தக் காலத்தில உங்களுக்கு வோட்டுப் போடும் வயசுக்கு வரச் சான்சே இல்ல:), ஒருவேளை பகவான் ஜி இன் பேரப்பிள்ளைக்குத்தான் வோட்டுப் போடலாம்:).

   Delete
  8. பசங்க ரெண்டு பேரும் இன்னும் படிச்சு முடியலே ,அதுக்குள்ளே பேரனா ?கில்லர்ஜிக்கு ஆயுசு நூறுன்னு நினைக்கேன் :)

   Delete
 3. ஹா ஹா ஹா இன்று அனைத்து ஜோக்ஸ் உம் சூப்பர்ர்.. ஆனா தலைப்புத்தான் பிடிக்கல்ல:).

  ReplyDelete
  Replies
  1. உங்க விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன் ,இது ok வா :)

   Delete
  2. ஹா ஹா ஹா சூப்பர்ர்ர்ர்... எப்பூடி இப்பூடிஎல்லாம் கண்டு பிடிக்கிறீங்க??:)

   https://s-media-cache-ak0.pinimg.com/originals/4e/bc/12/4ebc121e4f89738498ee6d452dbd8c34.png

   Delete
 4. ஆமாமாம், பூச்சி மாத்திரை தேவை இல்லை!

  அதைச் சொல்லுங்க..

  பொய் சொன்னா முடியுமே...

  கஷ்டம்தான்..

  நளன்கள்!

  பெண்ணே கிடைக்க மாட்டேன் என்கிறது.. இதில் இது வேற!

  ReplyDelete
  Replies
  1. ஆரோக்கியமான உடம்புக்கு எதுக்கு :)

   ஈன்னு இளிச்சிகிட்டே செத்திருப்பாரோ :)

   பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதே :)

   கரப்பானை அடிக்கிற மாதிரி அடிப்பாங்க போலிருக்கு :)

   கிடைக்க கொடுத்து வைச்சவங்க:)

   பாஞ்சாலி கதை உண்மையாகிடுமோ :)

   Delete
 5. Replies
  1. போட்டோ பொண்ணுக்கு சடை மட்டும் இல்லையென்றால் தப்பாவே நினைக்கத் தோன்றாது தானே :)

   Delete
 6. .---- குதிரை கொம்புகூட கிடைத்துவிடும் ஆனால் அவரை மட்டும் விரும்பும் பெண் கிடைப்பது...?????

  ReplyDelete
  Replies
  1. நீங்களே சொல்லிட்டீங்க ,நான் சொல்ல என்ன இருக்கு :)

   Delete
 7. புத்தர் பல். செம

  ReplyDelete
  Replies
  1. ஆதாயம் இல்லாமல் அடிச்சுக்குமா பிள்ளைங்க :)

   Delete
 8. Replies
  1. உங்களுக்கு ஒரு அருமையான யோசனை சொன்னேன் ,பார்த்தீங்களா ஜி :)

   Delete
 9. ..ஆண்வர்க்கத்தை இழிவு செய்யும் 'மாப்பிள்ளை' ஜோக் வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளைகள் சமைப்பதை கண்டிக்கவில்லைதானே :)

   Delete
 10. இதுக்குத்தான் பெப்சி அதிகமா குடிக்கக் கூடாதின்னு சொல்றது...!

  இதுக்குத்தான் தங்கப்பல் கட்டக் கூடாதின்னு சொல்றது... அர்ப்ப ஆயுசில்ல அனுப்பி வச்சிட்டாங்கல்ல...!
  ‘அந்த 4 நாட்கள்...’ படம் எடுக்கப் போறேன்... நீங்கதான் நாயகன்... நாலு நாளுக்கு நன்றி... அந்த நாலு நாளுக்கு நன்றி...!

  மனைவியோட கரப்பான் தாங்க முடியலைன்னு சொல்லுங்க...!

  கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம் இந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்... ஹஹஹஹஹஹ...!

  என்னை மட்டும்தான் அவர்களும் விரும்புகிறார்களாம்...! ‘பாஞ்சாலி... பாஞ்சாலி...!’

  த.ம. 8
  ReplyDelete
  Replies
  1. இதுக்குத்தான் இதை சின்னஞ்சிறுசுங்க குடிச்சுகிட்டு அலையுறாங்களோ :)

   அடப் பாவிங்களா ,வேணும்னு கேட்டிருந்தா கழட்டிக் கொடுத்திருப்பேனே :)

   கரப்பான் மட்டுமா மாற்றம் இல்லாம இருக்கு :)

   பிறந்த வீடும் வேணாம் புகுந்த வீடும் வேணாம் ,இதுவே எனக்கு போதும் :)

   இன்னும் மூன்று பேர் வேணுமா :)

   Delete
 11. Replies
  1. ஒண்ணும் அவசரமில்லை ,நல்லா சிரிச்சு முடிச்சிட்டு புரவியில் ஏறினா போதும் :)

   Delete
 12. வயிற்றில் பூச்சினா....பூச்சி மருந்துதான் கொடுக்கணும்..ஹிஹிஹி

  நளன் கணவன் ஆஹாங் ..

  அனைத்தும் ரசித்தோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. அது அவரே கொடுக்கட்டும் ,விடுங்க கவலையை :)

   நளபாகச் சமையல்தானே :)

   Delete